தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, December 25, 2011

"கடல் பிரித்தாலும்...

நிறைய லூசுத் தனமான விளம்பரங்களை பார்த்த பிறகு அந்த விளம்பரத்தால் பாதிக்கபட்ட நீங்கள், வெறுத்துப் போய், இனிமேல் அந்த நிறுவன பொருட்கள் எதையும் கனவில் கூட வாங்கக் கூடாது என்று முடிவெடுத்திருப்பீர்கள்.

அது மாதிரி விளம்பரத்தை நானும் கண்டேன்.

உட்பெக்கர் என்ற மரச் சமான்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் லூசுத் தனமான விளம்பரம் ஒன்று இப்படி வெளியாகியிருக்கிறது.

"கொலை வெறி விலையில் விற்பனை..."

(அதற்கு அர்த்தம் மிகவும் குறைந்த விலையில் விற்பனையாம்)

தனக்கென மட்டுமாய் வாழ்பவன் இறக்கும்போது தான் உலகம் பயனடைகிறது.
_தெர்தூலியன்


ஒரு வாகனத்தின் பின் கண்ணாடியில் இருந்த வாசகம்...

"கடல் பிரித்தாலும்...

தமிழ் இணைக்கும்..."

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

ww
w.thamizkkirukkan.blogspot.com

Thursday, December 22, 2011

"நீ எல்லாம் என்னடா,கடவுள்?"

"நீ எல்லாம் என்னடா,கடவுள்?"

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன வரிசையில் நின்று வெங்கடாசலபதியை தரிசிக்க பத்து மணி நேரமாகிறதாம்.

காசு கொடுத்தால் வெங்கடாசலபதி உடனே தரிசனம் தருவான் என்றால்...

கேவலம்!

அவன் எல்லாம் என்னடா கடவுள்?

கேரள மலையாளிகள், எங்க ஊர் கையப்பனை விட (ஆய் போற போஸ்ஸில இருக்கிற அய்யபன்ங்கிற ஜென்ம, பொய் கதாபாத்திரத்தின் உண்மை பேர்தான் கையப்பன்ங்க கையில பொறந்தவன். அதுனால அவன் பேர் கையப்பன். சிவபெருமான் பெண் உருவத்தில இருக்கிற விஷ்ணு மேல உணர்ச்சி வசப்பட்டு...

எதிரில இருக்கிறவன் ஆணா, பெண்ணான்னு கூட தெரியாத நீ எல்லாம் என்னடா கடவுள்?

அப்படி அந்த சமயம் வந்த "அதை" கையில பிடிச்சு...

அப்படி கையில பொறந்த ஆம்பிளைக்கும் ஆம்பிளைக்கும் பொறந்தவன் தான் இந்த ஹரிஹர புத்திரன் கைய்யப்பன்.காலப் போக்குல அசிங்கமா இருக்கேன்னு நெனச்சாங்களோ என்னமோ தெரியல கையப்பன் பேர் அய்யப்பனாயிடுச்சு )

கிளாஸில சாராயம், ஹான்ஸ்,பான்பாரக் எல்லாம் போட்டு சுத்த பத்தமா சபரிமலைக்கு போகிற நம்ம ஊரு தமிழனை பிடிச்சு

அய்யப்பங்கிற மேட்டரே சும்மா வெத்து வேட்டு, அய்யப்பனே நாங்க பாத்து வச்சிருக்கிற டம்மி பீஸ்டான்னு

அடிச்சு தொரத்தி அனுப்புறான், மலையாளி.

என்னோடு வேண்டுகோள் எல்லாம் ஒன்னே தான்.

நம்ம ஊர் தமிழ்க்கடவுள், அவர் தாங்க காலேஜுல தமிழ் லிட்டரச்சர் படிச்ச கோமணான்டி பழனி முருகன் கோவில இடிச்ச பிறகு...

ஆமா, சக்தி இல்லாத கடவுள் முருகன் அப்படின்னு நெனைச்சு தானே கேரளா, ஆந்திராவுக்கும் போறீங்க.

சக்தியில்லாத கடவுளுக்கு இங்க எதுக்கு பிரான்ச் ஆபிஸ்?

அய்யப்பனுக்கு மால போட்ட கையோட அப்படியே போய் திருச்செந்தூர்,திருத்தணி இங்கெல்லாம் போய் அங்க இருக்கிற கோயிலுங்கள இடிச்சு தரைமட்டமாக்கிட்டு அப்புறமா...

கேரளா,ஆந்திரா கோவில்களின் உண்டியல்களை நிரப்புங்கள், போங்கள்!

எழுத்து,கருத்து...
_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, December 7, 2011

"டாஸ்மாக் நாடு!"

டாஸ்மாக் சாராயக்கடை வரிசையில் அப்பா!

வரிசையில் நின்று மண்ணெய் அம்மா வாங்கும் ரேஷன்கடைக்கு மட்டும்
அத்தனை
போலீஸ் பாதுகாப்பு எதுக்கு?

புரியவே இல்லை
கால் சட்டை கிழிசலோடு
பள்ளி விட்டு
வீடு திரும்பும் மகனுக்கு...

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, December 3, 2011

"இம்சை அரசியும், 23 ஆம் புலிகேசியும்..."

"இம்சை அரசியும், 23 ஆம் புலிகேசியும்..."

திகார் சிறையில் ஜாமீன் கேட்டு ஆறுமாதமாக போராடி வென்ற ஜாமீன்ராணி வீராங்கனை கனிமொழிக்கு

சென்னை அண்ணாசாலை முழுக்க வெட்கம் கேட்ட வரவேற்பு பேனர்கள் அதில் ஒன்று...

"மானமிகு கனிமொழி கலைஞர் அவர்களே வருக! வருக!!

திமுக கலைஇலக்கிய பகுத்தறிவு பேரவை"

என்று வரவேற்பு பேனர் கட்டியிருந்தார்கள்.

அதுவும் எங்கே?

அறிவாலயத்தின் வாசலில்...

அட, உங்க அறிவாலயம் கற்றுக் கொடுத்தது, இதை தானா?

யார் அங்கே?
அறிவாலயத்தை மூடி நவீன மனநிலை பாதிப்பு நோய் நீக்கும் மருத்துவ மனையாக மாற்றுங்கள்!

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Monday, November 28, 2011

"ஞாபகங்கள் தீ மூட்டும்...!"

"ஞாபகங்கள் தீ மூட்டும்...!"

உணவகத்தில் வேலை செய்யும்
சிறுவனை
அம்மா
சாப்பிடக் கூப்பிட்டாள்.

சிறுவன் தேம்பி தேம்பி அழுதான்...

("விக்கிற நேரம் அப்படி என்னடா உனக்கு நாக்கு ருசி தேடுது..?" முதலாளி முருங்கை காய் கையிலெடுத்து விளாசி தள்ளிய...)

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

Saturday, November 26, 2011

சொன்ன புரியாது...!

சொன்ன புரியாது...!

என் பேஸ்புக் பக்கத்திலிருந்து....

www.facebook.com/beyouths

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

Thursday, November 24, 2011

எம்.ஜி.ஆர் செய்த ஒரே தப்பு, ஜெ!

எம்.ஜி.ஆர் செய்த ஒரே தப்பு, ஜெ!


பஸ் கண்டக்டர் ரூபாய் 3.50 க்கு இரண்டு இரண்டு டிக்கெட் ரூ 7.00 க்கு தர 3.50 டிக்கெட் கட்டு தீர்ந்து போனதால் ஏற்கனவே இருமடங்கு கட்டணம் என்று ஈவு இரக்கம் காட்டாத நடத்துனர். இரண்டு 3 ரூபாய் டிக்கெட் கொடுத்து 6 ரூபாய் வசூலிக்காமல், இரண்டு 4ரூபாய் டிக்கெட்டுகளை வழங்கி மேலும் 1 (3+3+1=7) ரூபாய் வசூலித்து, தன்னால் முடிந்த திறமைகளை காட்டி அசத்துகிறார்கள்

மரம் வெட்டி புகழ் பாமக ராமதாஸ், தன் தலைவன் தொல்.திருமா சிறையில் அடைக்கப் பட்டால் பஸ்களுக்கு தீ வைத்து மகிழும் விடுதலைச் சிறுத்தைகள்...

இருமடங்கு பஸ் கட்டணம்,பால்,மின்சார கட்டண உயர்வு என்று தான் தோன்றித்தனமான ஜெவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் நடத்த தயாராக இல்லை.

பொரச்சி கலஞர் விசயகாந்த் இன்றைக்கு உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறராம்.

ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்ணாத உண்ணா விரத போராட்டம். மூச்சு விடும் போராட்டம்.இரவில் தூங்கும் போராட்டம், பகலில் முழிக்கும்
போராட்டம் என பல போராட்டங்களை, நீங்களாவது நடத்தி அசத்துங்கள் கேப்டன்!

தமிழ்க்கி@க்கன், சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, November 22, 2011

பேருந்தில் பயணம் செய்தால் ரூபாய் 48 என்றால், அதே தூர ரயிலில் பயணம் செய்தால் ரூபாய் 16 மட்டுமே. ரயிலில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

ஜெவுக்கு அப்படி என்ன வியாதியோ?

ஜெவுக்கு அப்படி என்ன வியாதியோ?

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்துகளை பயன்படுத்தம்படி அயல்நாடுகளில் அந்நாட்டு அரசு நிறைய சலுகைகளை வாரி வழங்குகின்றன.

இங்கே என்னவென்றால் பேருந்துகளில் இரட்டை கட்டணம் வசூலித்து புரட்சி செய்கிறார்கள்.

கலைஞரின் சோனியா அம்மன் எழுந்தருளி திறக்கப்பட்ட புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்குவேன் அறிக்கை விட்டார், ஜெ!

எனக்கு தெரிந்து இரவு நேரம் ஒரு நாள் எழும்பூர் அரசு பிரசவ மருத்துவமனையில் நோயாளிக்கு உடன் இருப்பவர்கள் வெறும் மண் தரையில் படுத்து தூங்குவதை கண்டு பகீரென்றிருந்தது.

இன்றும் கூட அந்த கொடுமையை அங்கு நீங்கள் பார்க்கலாம்.

ஏற்கனவே இருக்கிற மருத்துவனை இந்த இலட்சணத்தில் இருக்கும் போது புது மருத்துவ மனை எதற்கு?

நவீன வசதிகளோடு புதிதாக திறக்கப்பட்ட அண்ணா நூலகத்தை சிறுவர்களுக்கான நவீன மருத்துவமனையாக மாற்றுவேன் என்று சிறு பிள்ளைத் தனமாக அடம் பிடிக்கிறார், ஜெயலலிதா.

புரட்சித் தலைவிக்கு அப்படி என்ன வியாதியோ?

தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, November 21, 2011

உங்கள் கேமிரா மொபைலில் எடுக்கிற படங்களை உடனடியாக மின்னஞ்சலில் சில நிமிடங்களில் அனுப்ப...

உங்கள் கேமிரா மொபைலில் எடுக்கிற படங்களை உடனடியாக மின்னஞ்சலில் சில நிமிடங்களில் அனுப்ப...

மொபைலில் இணைய தளம் மேய்கிற ஆசாமியா நீங்கள்?

பேஸ்புக்கில் நேரடியாக படங்களை மொபைலின் நினைவகத்திலிருந்து படங்களை பேஸ்புக் பக்கங்களில் பதியலாம் என்பது தெரிந்ததே.

யாகூ சமீபத்தில் தான் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

போன் மெமரி, நினைவக அட்டையில் இருக்கிற படங்கள் மாதிரியான கோப்புகளை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம்.

மொபைலில் திறக்கப்படும் ஜிமெயிலில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாகூ மின்னஞ்சல் பகுதிக்குள் நுழையுங்கள்.

Compose பக்கத்தை திறக்கவும். manage attachments என்ற இணைய இணைப்பை தொட்டுத் திறக்கவும்.

கேமிரா மொபைலில் எடுக்கிற படங்களை மின்னஞ்சலில், உடனடியாக சில நிமிடங்களில் அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

வால்க ஜெ! ஒழிக டூப்ளிகேட் சரக்கு!!

வால்க ஜெ! ஒழிக டூப்ளிகேட் சரக்கு!!


பேருந்து கட்டணம் இரு மடங்கு,மின்சார கட்டணம், பால் விலை உயர்வு.
_செய்தி.

ரொம்ப தொணிச்சல்கார பெண்மணி ஜெயலலிதான்கிறது அர்த்தம் இப்ப தான் பிரியுது.

அல்லாரும் ஏன் அதிமுககாரனே பொம்மளைன்னு கூட பாக்காம திட்றான்.

"பால் வெலைய ஏத்துன்னெ இவளெல்லாம் பொம்பளையாம் த்தூ...!"ன்னு ஜெயலலிதா
போஸ்டர் மேல ஒரு குடும்ப தலவி துப்பின எச்சில் எம் மேல பட்டுத்
தொலைஞ்சது!

இந்த தொணிச்சல் கார பெண்மணிக்கு ஆதரவ சில கேள்விங்க.

இவ்வளவு ஆன பிறவும் தி.நகர் ரங்க நாதன் தெருவுல ஜவுளி, நகை வாங்க வர்ற
கூட்டம் குறைஞ்சிருக்கா, இல்ல நம்ம அரசாங்கமே நடத்துற சாராயக் கடை
டாஸ்மாக்ல தான் கூட்டந்தான் கொறைஞ்சிருக்கா?

காசு யார் கொடுத்தாலும் வாங்கிட்டு கரிக்கெட்ட ஒட்டுப் போட சொன்ன அந்த
தேச தலைவருங்க மட்டும் எம் கையில மாட்டுனானுங்க அவ்வளவுதான்...
இதுக்கு மேல பேசுனா குடிகாரன் போதையில பேசுறான்னு கண்டுக்காம போயிருவீங்க ...

வாழ்க பொரச்சி தலைவி!
ஒழிக டூப்ளிகேட் டாஸ்மாக் சரக்கு!!

_தமிழ்க்கி@க்கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Friday, November 18, 2011

வளர்க பொரச்சித் தலைவியின் பொகழ்!

வளர்க பொரச்சித் தலைவியின் பொகழ்!

அரசு பேருந்து கட்டணம் இருமடங்காக மாறியதை பற்றி தான் பேருந்து முழுவதும் பேச்சு.

இந்தியாவில் எந்த அரசும் செய்யாத சாதனையாம்!

அதிமுக கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம்.

மாத கட்டண 600 ரூபாய் பஸ் பாஸ் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று பஸ் போக்குவரத்து புகார் எண்ணுக்கு போன் செய்தேன்.

" எனக்கும் தெரியலைங்க, ஒரு வேளை அது பஸ் கண்டக்டருக்கு தெரிந்தாலும் தெரிந்திருக்கலாம் அவரிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அசத்தினார்.

மிரண்டு போனேன்!

வாழ்க எம்.ஜி.ஆருக்கு நாமம்!

வளர்க பொரச்சித் தலைவின் புகழ்!!

-தமிழ்க்கிறுக்கன், சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, November 16, 2011

Monday, November 14, 2011

மின்னஞ்சல் வழியே கோப்புகளை எவ்வளவு அளவு அனுப்பலாம்?

மின்னஞ்சல் வழியே கோப்புகளை எவ்வளவு அளவு அனுப்பலாம்?

பெரும்பாலான மின்னஞ்சல் நிறுவனங்கள் 10 mb வரை மட்டுமே அனுமதிக்கின்றன.

ஆனால் ஜிமெய்ல் மட்டும் 20 முதல் 25 mb அளவிளான கோப்புகளை அனுப்ப அனுமதிக்கின்றன.

www.yousendit.com தளம் போய் 100 எம்.பி வரை அனுப்பலாம்.

gb அளவு கோப்புகளை அனுப்ப கீழே உள்ள தளங்கள் அனுமதிக்கின்றன.

www.wetranfer.com

www.sugarsync.com/free

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, November 12, 2011

இல்லாத சாலைக்கு, சாலை வரி எதுக்கு?

இல்லாத சாலைக்கு, சாலை வரி எதுக்கு?

சென்னையில் சாலைகளையே காண முடியவில்லையே, ரோடு வரி எதுக்கும் கட்டணும் கேட்டு ரோடு வரி கட்டிவிட்டு வந்தோம்.

சென்னை பள்ளிக்கரணைக்கு போயிருந்தேன்.

ஒரு தெருவுக்குள் நுழைந்தவுடன் சிமெண்ட் சாலை திடீரென்று இடையில் முடிந்து தூசி பறக்கும் மண் சாலை ஆரம்பித்தது.

ஏன், பாதியிலேயே சாலை முடிந்து போனது என்று கேட்டேன்.

கவுன்சிலர் வீடு இங்க தான் இருக்கு அதான் இதோட முடிஞ்சு போச்சு என்று பதில் வந்தது.

ஆனா இப்ப வேற கவுன்சிலர் வந்துட்டாங்க என்றார், உள்ளூர்வாசி.

இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எப்படி மறுபடியும் ஓட்டு விழும்?

_தமிழ்க்கிறுக்கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Sunday, October 30, 2011

"போதி தர்மன்"

"போதி தர்மன்"

கடைசியாக தமிழையும், தமிழனை உயர்த்தும் வரிசையில் சேர்ந்திருக்கும், ஏ.ஆர்.முருகதாஸின் ஒரு தொலைக்காட்சி பேட்டி கண்டு மிரண்டேன்! வாழ்ந்ததாக கருதும், தன் கதாநாயகன்
போதி தர்மனுக்கு கோவில் கட்ட வேண்டுமாம்.

இந்தியாவில் இருக்கிற கடவுள்களின் எண்ணிக்கை எத்தனை என்கிற கேள்விக்கு பதிலே இல்லை என்கிறபோது...

இன்னும் ஒரு கோவிலா?

சென்னை மெரினா பீச்சில் நடு ரோட்டில் நின்று வெயிலிலும், மழையிலும் நனைகிற, நடிப்பு பல்கலைகழகம் சிவாஜிகணேசன் சிலைக்கு இரவிலாவது மின்விளக்கை எரிய விட்டு அண்ணாந்து பார்த்து வியக்க வைக்கலாமே...!?

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, October 29, 2011

ஒரு தவறு செய்தால்...

ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்...
1
எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருக்கும் போது இந்த மாநகராட்சி, ஊராட்சி, மேயர் தேர்தலை வேண்டுமென்றே நடந்தவில்லையாம்.

இந்த வார்டு உறுப்பினர்கள் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சாலை போடும் குத்தகைகாரர்கள் மாதிரியான ஆட்களிடம் தலையை சொறிந்தபடி கமிஷன் கேப்பார்களாம். தராமல் போனால் அவர்களால் என்ன என்ன வழிகளில் தொல்லைகள் தர முடியுமோ அத்தனை வழிகளிலும் தொல்லைகள் செய்வார்களாம்.

எனக்கு தெரிந்த கவுன்சிலர் ஒருவர் ஊருக்காக சாலை போட கொடுத்த காசில் அவர் மட்டும் வந்து போகும் வழி சாலைகளை மட்டும் செம்மையாக போட்டுக் கொண்டார்.

தன் ஊர் மக்கள் பிடிக்க பொதுக் குடிநீர் குழாயில் குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் வரும், ஆனால் இவர் வீட்டுக்கு மட்டும் நல்ல தண்ணீர் வருமாம்.

பக்கத்து ஊர் குழாயிலிருந்து திருட்டுத் தனமாக குழாய் பதித்து தனக்கு மட்டும் நல்ல தண்ணீர் வர வைத்துக் கொள்கிறாராம்.

அவரும் எம்.ஜி.ஆர் கட்சிக்காரர் தான்.

இந்த மாதிரி திருட்டு ஆசாமிகள். சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்த கொடுமைகளை கூட நீங்கள் நம்பி தான் ஆகணும்.

_தமிழ்@கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Thursday, October 20, 2011

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

எவ்வளவு கூட்டம்
எத்தனை இரைச்சல்
எந்த சூழ்நிலையிலும்
யாருமே கேட்க முடியாத குரலில்
மணிக்கணக்கில் பேசுவாய்...

என்னால் கேட்க மட்டுந்தான் முடியும்

என்னால் இரண்டு நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை.

எல்லா இரைச்சல்களும்
எனக்கு இடைஞ்சலாக இருக்கும்.

எந்த சப்தமும்
என்னை பாதிக்காமல் இருந்தால் தான்
என்னால்
பேச முடியும்.

உங்களுக்கு பொய் பேசவே தெரியவில்லை
என்று திட்டுவாய்.

ஒரு நாள் உன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது...
"என் தொடர்பு எல்லைக்கு வெளியே நீ போய்விட்டதாக..." பதில் வந்தது.

அப்புறந்தான் புரிந்ததது, பெண்ணே!

எனக்கு...

உன்னை போல எனக்கு பொய் பேச தெரிய வில்லை என்று.

"பிறவிக் கவிஞன்
" _தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Monday, October 17, 2011

தேர்தல்..!

தேர்தல்..!

கும்பிட்டு போனீர்கள்...

எங்கள் வீடு
தேடி வந்ததது
இலவச பிச்சை பாத்திரங்கள்!

- பிறவிக் கவிஞன்
தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, September 6, 2011

உன்னைப் பார்த்து...!

தமிழன் இந்துவாகவும், முஸ்லிமாகவும்,கிறித்துவனாகவும் பிரிந்து கிடக்காமல்....

மனிதனாக என்றைக்கு ஒன்று சேருகிறானோ...

அதுவரை நம்மை நாட்டை விட்டு வேளியேற சொல்லி சுப்ரமணியசாமி மாதிரி வந்தேறி நாய்கள் நம்மை பார்த்து குரைக்கத் தான் செய்யும்.....


_தமிழ்க்கிறுக்கன்.

Saturday, August 6, 2011

"எல்லோருமே திருடங்க தான்...!"

நாள்தோறும்
ஒரு ரூபாய்
தொலைக்கிறேன.
எடுப்பவனின்
சந்தோஷம்
எனக்கும் தான்!

பணக்காரன்
ஆகியிருப்பான் தான்
கல்லுடைத்த காரணம்
தன ரேகை
அழிந்து விட்டதாம்...

எல்லோர் வீட்டிலும்
பூட்டுக்கள்
அப்படியானால்
யார் திருடர்கள்?

நாய்கள் ஜாக்கிரதை
ஆம்
மனிதர்கள்
அபாயமானவர்கள்.

"நில்,கவனி,செல்" ப.உதயகுமார்

தொகுப்பு:

"பிறவிக் கவிஞன்"

_தமிழ்க்கி@க்கன்.பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Monday, August 1, 2011

பணக்கார நோயாளி, இந்தியா!

சென்னை, தாம்பரத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான பிஸ்கெட், சாக்லெட், குளிர்பானங்கள், உணவு பொருட்கள் என சர்க்கரை நோயாளிகளை மட்டும் நம்பி ஒரு கடையை திறந்திருக்கிறார்கள்.

எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை.

இந்தியாவில் இனி அரசே நடத்தும் சாராயக்கடைகள் போல தெரு தெருவுக்கு பொதுக் கழிப்பிடங்கள் இருக்கிறதோ, இல்லையோ கோவில்களை கட்டியிருக்கிறார்கள், அல்வா? அல்லவா? (இணைய தமிழ் படித்து படித்து, இதோ என் தமிழும் நொண்டியடிக்கிறது, போங்கள்!)

அதை போல இந்தியாவில் நிறைய சர்க்கரை நோயாளிக்களுக்கென புதுப் புது தினசுசாக கடைகள் திறந்த பிஸ்னெஸ் புலிகள், தன் வெளிநாட்டு வங்கி கணக்கை நிரப்பலாம்.

சாதாரண பிஸ்கெட் பத்து ரூபாய் என்றால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கான பிஸ்கெட் பதினைந்துக்கு விற்கிறது.

உற்பத்தி தரப்பு அந்த வகை பொருட்களுக்கு தயாரிப்பு செலவு அதிகம் என்று வாதிடலாம்.

எனக்கு சந்தேகம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்!

சர்க்கரை நோய், பணக்கார நோயா?

_தமிழ்@கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com/2011/08/blog-post.htmlபேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Saturday, July 16, 2011

"பூமியை செய்தவர்கள்..! "

விவசாயிகள்
வேறு வேலைக்கு
மாறி விட்டார்கள்...

விவசாய நிலங்களில்...
வீடுகள்..!

விவசாயிகள் தான்
கொத்தனார்கள்..!

"பிறவிக்கவிஞன்"
_தமிழ்க்கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_16.html


பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!

Tuesday, July 12, 2011

ஊழல் திருவள்ளுவர், கலைஞர்.

ஊழல் திருவள்ளுவர், கலைஞர்.

கேடு கெட்ட கலைஞரின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, அரசு பேருந்துக்கு உள்ளே...

"நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்!"

என்ற ஊழல் திருவள்ளுவர் கலைஞரின் பொன்மொழி வாசகம் அழிக்கப்பட்டு...

அந்த இடத்தில் பஸ் போக்குவரத்து பற்றி புகார் செய்தவற்கான, மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் புதிதாக இடம் பிடித்திருந்தன.

_தமிழ்க்கி@க்கன்.


www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_12.html

பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!

ஊழல் திருவள்ளுவர், கலைஞர்.

கேடு கெட்ட கலைஞரின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, அரசு பேருந்துக்கு உள்ளே...

"நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்!"

என்ற ஊழல் திருவள்ளுவர் கலைஞரின் பொன்மொழி வாசகம் அழிக்கப்பட்டு...

அந்த இடத்தில் பஸ் போக்குவரத்து பற்றி புகார் செய்தவற்கான, மொபைல் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் புதிதாக இடம் பிடித்திருந்தன.

_தமிழ்க்கி@க்கன்.பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Thursday, July 7, 2011

"திறந்த வெளிச் சிறைச்சாலை? "

கம்பி வைத்த கதவுகளுக்குள்
இருந்து தான்
இயங்குகிறது எல்லா
அரசு சாராயக்கடைகளும்...

வெளியே...

திறந்த வெளி
சிறைச்சாலைகள்...!

"பிறவிக்கவிஞன்"
_தமிழ்க் கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_07.html


பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Tuesday, July 5, 2011

"குடைக்குள் வெயில்...! "

"குடைக்குள் வெயில்...! "

நானும் பார்த்து விட்டேன்...

எந்த வெளிநாட்டு வெள்ளைத் தோல் ஆணோ, பெண்ணோ இந்திய வெயிலுக்கு குடைப் பிடித்து போனதை, நான் சென்னையில் பார்த்ததே இல்லை.

ஆனால் மாலை அய்ந்து மணி வெயிலுக்கு கூட குடை பிடித்து போகும் கணினி மென்பொருள் பெண்களின்....

போக்கு எங்கே போய் முடியும்...

தெரியவில்லை ...?
_தமிழ்க்கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post_05.htmlபேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Friday, July 1, 2011

உங்கள் ஓட்டு தமிழ்க்கிறுக்கனுக்கே..!

இங்கு முட்டை கலக்காத கேக் கிடைக்கும் என்ற அறிவிப்பு தொங்கும் மயிலாப்பூர் அய்யர் ஆத்து வீதிகளில் கடந்த பத்து நாட்களாக சுற்றித் திரிகிறேன்.

ஓர் ஆச்சர்யம் என்னை வியக்க வைத்தது!

மந்தைவெளி,மயிலாப்பூரில் எந்த புதிய பாலமும் கட்டப்பட வில்லை. ஆனாலும் போக்குவரத்து நெரிசலே இல்லாமல் வாகனங்கள் நம்மை கடந்து போகின்றன.

காரணம் எல்லாம் ஒரு வழிப் பாதை. ஊரையையே ஒரு சுற்று சுற்றி விட்டுதான் அடுத்த ஊருக்கு செல்ல முடியும். சென்னைவாசிகளுக்கு காத்திருக்கப் பிடிக்காது என்பதால் ஊரை சுற்றும் எரிச்சல் பெரிதாக தெரிவதில்லை.

நிற்க...

சென்னை திருவான்மியூரிலிருந்து புதிதாக போடப் பட்ட சாலையில் (it hyway) திருவான்மியூர் டைட்டல் தொழில் நுட்ப பூங்கா அருகில் காலை மாலை, அலுவலக நேரங்களில்


போக்குவரத்து நெரிசலில் நீந்தி கரை சேர அரை மணி நேரமாவது ஆகிப்போய்விடும். மூன்று தடவையாவது சிவப்பு சிக்னல் விழுந்து விடும்.

அந்த பகுதியில் மேம்பாலம் கட்டலாம்.

அதுவரை தற்காலிகமாக திருவான்மியூரிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்தி, வாகனங்கள் போவது மாதிரி மட்டும் செய்து , ஒரு வழிப் பாதையாக்கினால், ஓரளவுக்கு இந்த நெரிசலை தவிர்க்கலாம்.

இந்த யோசனை எனக்கு தோன்றியதால் நானும் அடுத்த தேர்தலில் முதல்வர் பதவிக்கு போட்டியிடலாம் என்றிருக்கிறேன்.

மறவாதீர்!
உங்கள் ஓட்டு தமிழ்க்கிறுக்கனுக்கே..!

www.thamizkkirukkan.blogspot.com/2011/07/blog-post.html
பேஸ் புக் குழுவில் இணைய.

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Sunday, June 19, 2011

நீயா, கடவுள்?

நீயா, கடவுள்?

என்ன வரம் என்றார் கடவுள்

அது தெரியாமல் நீர் என்ன கடவுள்?

_நீலாமணி

Facebook

பேஸ் புக் குழுவில் இணைய...

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

நன்றி!

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...

கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Friday, June 10, 2011

"இமெயில் அய்டியை மாற்றியவள்...!"

திருச்சி..

அவள் என்னை பிடிக்க வில்லை என்பதற்கு சொன்ன காரணத்தைக் கேட்டு என்னால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சாமுராய் படத்தில் விக்ரம் நடித்த தியாகு கதாபாத்திரம் தான் நீ! என்றாள்

உனக்கு குடும்பம் எல்லாம் முக்கியம் கெடையாது. இலட்சியம் தான் உனக்கு முக்கியம் நீ வெறி பிடித்தவன். தீவிரவாதி!

அழுதபடி சொன்னாள்.நானும் சப்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தேன்.கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"மூங்கில்காடுகளே" பாடலை என் கைப்பேசி எண்ணுக்கு அழைத்தால்,அழைப்பவருக்கு கேட்கும்படியாக வைத்திருந்தேன்.

இந்த பாடல் தான் அவளை அப்படி நினைக்க வைத்தது என்று அவளே சொன்னாள். என் குணங்களும் அந்த காதபாத்திரத்தோடு ஒத்துப் போவதாகச் சொன்னாள்.

என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தால், எத்தனை எதிர்ப்பு வந்திருந்தாலும், உடைத்து அவளை கைப் பிடித்திருப்பேன்.

நமக்கு பிடித்தவர்கள், நம்மை பிடித்துப் போனதாக சொன்னவர்கள். நம்மை புறகணிக்கும் போது , என்னால் வலியை தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

சென்னைக்கு பஸ் ஏறும்போது அழுதபடி இப்படி முடிவெடுத்தேன்.

திருமணமே இனிமேல் செய்து கொள்ளக் கூடாது, என்று.

பஸ்ஸை விட்டிறங்கிய போது பிணமாக வீடு போய் சேர்ந்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவளிடமிருந்து sms வந்திருந்தது. என் இமெயில் அய்டியை என் மொபைல் எண்ணையும் மாற்றப் போகிறேன்.ப்ளீஸ் இனி என்னை தொந்தரவு செய்யாதே! என்று

சொன்னது மாதிரியே மாற்றியிருந்தாள்.அதற்கு பிறகு என் இமெயில் அய்டி பாஸ்வேர்ட் திருடப்பட்டபிறகும் கூட கஷ்டப் பட்டு கண்டுபிடித்து அதே இமெயில் அய்டியையும், மொபைல் எண்ணையும் நான் மாற்றவே இல்லை.

அம்மா திருமண பேச்சை ஆரம்பித்தாள்.

அம்மா, எனக்கு மூளையில பிரச்னை. இந்த நோய் வந்தவர்கள் எவ்வளவு தான் வைத்தியம் பாத்தாலும் சின்ன வயசிலே செத்துப் போவாங்களாம்.

இப்ப என் ஆசையெல்லாம் உனக்கு முன்னால, நான் செத்துப் போகணும் என்றேன்.

அம்மா வாய் பொத்தி மவுனமாக அழுதாள்...

அதற்கு பிறகு திருமண பேச்சே எடுக்க வில்லை.


_தமிழ்க்கிறுக்கன்.


"வேடிக்கையாகவே கேலிகள், பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்...!"

பேஸ் புக் குழுவில் இணைய...

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=7

நன்றி!

Tuesday, June 7, 2011

நோக்கியா இரட்டை சிம் கைப்பேசி

நோக்கியாவின் புதிய இரட்டை சிம் கைப்பேசிகள் வெளிவந்திருக்கிறது.

இணைய பிரியர்களுக்கான கைப்பேசி இது.இணைய வசதிகளுடன் பாடல், வீடியோ, படம் போன்றவைகளை பார்க்கலாம்.32 ஜிபி நினைவக அட்டை வரை ஆதரிக்கும் திறனுடன் வெளி வந்திருக்கிறது.

இந்த வகைப்பேசியின் பெயர்
nokia c2 00

இன்னொரு கைப்பேசியோ இசைப்பிரியர்களுக்கானது. சப்தமாக பாடல் கேட்க முடியும். நீண்டு ஊழைக்கும் பேட்டரி இதன் சிறப்பு அம்சமாகும்.16 ஜிபி நினைவக அட்டை வரை ஆதரிக்கும் திறன் உள்ளது.

இந்த வகை கைப்பேசியின் பெயர்
Nokia x1 01


தமிழில் இணையம் மேயும் வசதி, தமிழிலேயே தட்டச்சு செய்யும் வசதியோடு வந்திருக்கும் என்று நம்புகிறேன். அட்டைப் பெட்டியில் விபரம் பார்த்து வாங்கவும்.

விலை ரூபாய் 2000, 3000 விலைகளில் வந்திருப்பது வரவேற்க வேண்டிய செய்தி!

_தமிழ்க்கிறுக்கன்.

www.thamizkkirukkan.blogspot.com/2011/06/blog-post.html

my new facebook group


www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி கேள்வியும், ஞானமும் உண்டாக செய்வோம்..!"

Sunday, May 22, 2011

அதை விட, உயரம்!

அதை விட, உயரம்!


(சிறுகதை)
_தமிழ்க்கிறுக்கன்

கொஞ்சம் பழகினால், நாய் பாஷையை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

புதிய நபர்கள் என்றால், ஒரு மாதிரி மென்மையாக மிரட்டும் மொழியில் குரைத்து வரவேற்கும். முற்றிலும் மனசெல்லாம் அழுக்கானவர்கள் வந்தால் "இவனை நம்பவே நம்பாதே, இவன் புத்தி சரியில்லை !" என்று எச்சரிக்கை விடும்.

அந்த மனித மனங்களை படிக்கிற சக்தி நம்மை விட நாய்களுக்கு அதிகம்.

சமயங்களில் நாயோடு அம்மா பேசிக் கொண்டிருப்பாள்.நாயும் கூட புரிந்தது மாதிரி உடல் மொழி பேசும். இருவருக்கும் மொழி தேவையிருக்காது.ஆனாலும் பேசிக் கொள்வார்கள்.ஒரு நாள் அந்த நாய், கொஞ்சம் கோரமாக செத்து போனது.

அம்மா வெட்கத்தை விட்டு சப்தமாக அழவே ஆரம்பித்து விட்டாள்.

யாராவது நாய் செத்துப் போனதுக்கெல்லாம் அழுவார்களா?

அம்மாவின் கண்ணீர் பார்த்து நானும் கூட கலங்கித் தான் போனேன்.

அதற்கு பிறகு எவ்வளவு சொல்லியும் இன்னொரு நாய் வளர்க்க அம்மா மறுத்தாள்.

நகரங்களில் குடிப்பதற்கு ஒரு தண்ணீர், மற்ற உபயோகங்களுக்கு இன்னொரு தண்ணீர் என்று இரண்டு வகை தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.

அம்மா ஒரு நாள் குடிநீரோடு மொட்டை மாடி போனாள்,நானும் பின் தொடர்ந்தேன்.

மொட்டை மாடியில் தானியங்களை கொத்தி தின்றபடி புதிய விருந்தாளிகள்,சிட்டுக் குருவிகள்.அவைகளின் கிண்ணத்தில் ஊற்றத் தான் தண்ணீர் கொண்டு போயிருக்கிறாள்,அம்மா.


வழக்கம் போல அம்மா, குருவிகளோடு பேச ஆரம்பித்து விட்டாள்.

என் வருகை அவர்களின் பேச்சுக்கு தடையாக இருக்கும் என்பதால், சப்தமில்லாமல் கீழே இறங்கி வந்து விட்டேன்.

அம்மா, பக்கத்து வீட்டின் மேல் நிறுத்தியிருந்த மொபைல் போன் சிக்னல் டவரை விட உயரமாக தெரிந்தாள்.

தட்டில் இரையோ, தண்ணீரோ தீர்ந்து போனால், குறைந்தது நான்கு குருவிகளாவது மொத்தமாக சேர்ந்து கீழே கதவு பக்கம் வந்து பயங்கரமாக கத்த ஆரம்பித்து விடும்.

"என்னடா செல்லம், பசிக்குதா " என்றபடி மொட்டை மாடி போய் தேவையானவைகளை நிரப்பி விட்டு கீழே வருவாள்.

ஒரு நாள் எல்லாம் அடங்கிப் போன அம்மாவை கிடத்தியிருந்தோம்.

அவ்வளவு கூட்டத்தையும் பார்த்து கொஞ்சம் கூட பயப்படவே இல்லை.

எல்லாம் புரிந்தது மாதிரி மெல்ல மெல்ல தத்தி தத்தி தாவியபடி அம்மா மேல் உட்கார்ந்ததன,குருவிகள்.

யாரும் தொந்தரவு செய்யாதீர்கள், அவைகளும் அம்மாவின் பிள்ளைகள் தான் என்றேன்.யாரோ புதிதாக அழ ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த குருவிகளுக்கு யாரோ தீனி வைத்தார்கள். எந்த குருவியும் சீண்டவே இல்லை.

அம்மாவை அடக்கம் செய்த பிறகு மொட்டை மாடியில் , ஒரு வாரம் தீனியும், தண்ணீரும் வைத்துப் பார்த்தேன்.

எதுவும் குறையவே இல்லை.எந்த குருவியும் சீண்டவே இல்லை.


வெட்கமே இல்லாமல் சப்தமா அழ ஆரம்பித்தேன்...!

(சிறுகதை)
_தமிழ்க்கிறுக்கன்

Tuesday, May 17, 2011

எம் தலைவர் சாகவில்லை...! mp3

எம் தலைவர் சாகவில்லை...! mp3

எம் தலைவன் பிரபாகரன் சாகவில்லை..!

அழுத கண்களை ஆறுதலாய் துடைத்து, வருடி போகும் , பாடல் இசை வடிவில் இதோ...

கைப் பேசியிலும் கணினியிலும் டவுன் லோடு செய்ய...

http://goo.gl/vS8J5

_தமிழ்க்கிறுக்கன்

Sunday, May 15, 2011

குண்டு விழுந்தால் என்ன? mp3

குண்டு விழுந்தால் என்ன? mp3

அட்டைக் கத்தி கட்ட பொம்மன்களின் பாடல்களைக் கேட்டு கேட்டு, அந்த கத்திகளை போலவே, நம் மூளைகளும் மழுங்கி விட்டன.

இப்படி உண்மையான தலைவனை, உண்மையான வீரம், உண்மையான காயங்களை, உண்மையான போர்கள பாடல்களை அதுவும் இவ்வளவு நெருக்கமாக கேட்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?

இந்த பாடல்களை கேக்கும் போது...

உங்கள் காதுகளை உரசிக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் சூடாக சீறிப்பறக்கும், நீங்களே ஆயுதம் தூக்கி போர்களத்தில் போராளியாக நிற்பீர்கள். பிண வாடை எழும்.

திரும்ப திரும்ப கேட்கும்படியான பாடல்களாக அத்தனையும் இருக்கிறன.

என்னுடைய கைப்பேசியில்

repeat songs list -இல்

இருக்கும் பாடல்கள்...

1. குண்டு விழுந்தால் என்ன?

2. வெட்டி வீழ்த்துவோம்!

3. தாலாட்டு பாடமாட்டேன்

4. ஓ... வீரனே!

5. தோழர்களே...!

6. பிரபாகரன் நினைத்தது நடக்கும்

7.மக்களெல்லாம் பிரபாகரன் பக்கம்

8.தமிழீழம் காக்கும்

9.விடுதலைப் புலி தங்கச்சி

10. பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி

11.கோணமலை எங்கள் கோட்டை
தாலாட்டு பாட மாட்டேன்!

எதிரியின் கொடிய குண்டுவீச்சிலேயே தொட்டில் எரிந்தது...


தீப்பிடித்து
எதிரி முகாம் எரிகின்றது...
தீரனே!
உனது முகம் தெரிகின்றது...

பிரபாகரனின் நிழலில் கூட நெருப்பு இருக்குது...

அந்த நெருப்பில்
நில்லுங்கள்
உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்குது...

பிரபாகரன் நினைத்தது
நடக்கும்...
அவன் புலிப்படை
நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்...

குண்டு விழுந்தால் என்ன

உடல் துண்டு பறந்தால் என்ன

குழந்தை, பிஞ்சு துடித்தால் என்ன

அது பிணமாய் விழுந்தால் என்ன

ஊர் ஊராய் அலைந்தால் என்ன

நாங்கள் செத்து
தொலைந்தால் என்ன

தமிழீழ தாகம் தணியாது..!

எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது...!!

இந்த பாடல்களை டவுன் லோட் செய்ய ...


http://www.vannithendral.net/index.php?option=com_content&view=article&id=164:2010-08-02-20-21-50&catid=45:2009-11-29-08-31-07&Itemid=56


இதே முகவரிக்கு சென்று அந்த பாடல்களை உங்கள் கைப்பேசி நினைவகத்திலும் சேமிக்கலாம்.

கைப்பேசியில் இந்த இணைய தளத்தை திறக்க ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்...


www.bit.ly/kQVL5a

இந்த முகவரியை நேரடியாக தட்டச்சு செய்து அந்த தளத்தை திறக்கலாம்.

_தமிழ்க்கிறுக்கன்.

Wednesday, May 11, 2011

திருடர்கள் தேசத்தில்...

திருடர்கள் தேசத்தில்...

இன்று காலை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய பாக்யம் பெற்றேன்.

வட மாநிலத்தை சேர்த்த நான்கு நபர்கள், அழுக்கான சட்டை, கட்டிட வேலைக்கு போகிறவர்கள் போல தெரிந்தார்கள்.

4 பேர்களுக்கு பயணச்சீட்டு வாங்க போய், ஒரே ஒரு நபர் மட்டும் சென்னை முழுதும் எந்த மாநகர பேருந்திலும் பயணம் செய்யக் கூடிய ஒரே ஒரு பயணச்சீட்டை மட்டும் வாங்கி வந்து, என்னிடம் நாலு விரல்களை காட்டி புரியாத மொழியில் சொன்னாலும், தவறு என்ன என்பது புரிந்து.


ஏதோ பேசி மேலும் கூடுதலாக
30 ரூபாய்க்கு நான்கு பேருக்கு பயணச்சீட்டு வாங்கி வந்து புலம்பிக் கொண்டிருந்தான், பயணச்சீட்டு வாங்கிய வடநாட்டான்.

எல்லா சீட்டுகளையும் வாங்கிப் பார்த்தேன். 30 ரூபாய் சீட்டுக்கு, 60 ரூபாய் சீட்டு கொடுத்திருக்கிறான், நடத்துநர்.

எனக்கு வந்ததே கோபம்.

அந்த வடநாட்டான் கையை பிடித்து தர தரவென்று நடத்துநரிடம் போய் நியாயம் கேட்டேன்.மொழி தெரியாதவன் கிட்ட ரெண்டு மடங்கு கட்டணம் எப்படி வாங்குவீங்க? முதலில் எடுத்த ஒற்றை டிக்கெட்டை ரிட்டன் வாங்கிக்குங்க.(அந்த சீட்டை நடத்துநர் கண்டிப்பாக வேறு நபருக்கு மாறறித் தர முடியும்)

வாங்கும் போதே தெளிவா கேட்டு வாங்கணும் என்றான், நடத்துநன்.

மொழி தெரியாதவன் எப்படி தெளிவா கேப்பான். இந்த பஸ்ஸில வர்ற அத்தன பேரும் சாப்ட்வேர் கம்பெனியிலா வேல பாக்கிறான். அவனுங்க அத்தன பேரும் கூலிக்கு வேல பாக்கிற பசங்க. அவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டுறீங்களே!
தினமும் கூலி வேல செய்யிற அத்தன பேரும், நீங்க பாக்கிற கவர்மெண்ட் வேலய விட பெரிய வேலையா உஙகளுக்கு தெரியுதா என்ன...


நீங்களெல்லாம் சொந்த வீடு,கார் பங்களான்னு இருங்க

இல்லாதவன் ஊர் ஊரா வேல தேடி பிச்சைக்காரன அலைஞ்சாலும், உங்க வேலையிலே கண்ணா இருங்கடா.

அப்புறந்தான் பார்த்தேன். பெருந்தே என்னை வேடிக்கை பார்த்தது எனக்கு கூச்சமாக இருந்தது, நடத்துநன் தலையை கீழே தொங்க விட்டுக் கொண்டான்.

வேற யாராவது அந்த ஸ்பெஷல் டிக்கெட் கேட்டு வந்ததா மாற்றித் தருகிறேன், என்றான் பிடிவாதமாக நடத்துநன்.

எனக்காக சண்டை போட வேண்டாம் என்று சைகையால் காட்டி கண்ணீர் மல்க கை கூப்பி அவன் இருக்கையை நோக்கி நகர...

நான் இறங்க வேண்டிய பெருந்து நிறுத்தம் வர நான் இறங்க.

மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
_தமிழ்க்கிறுக்கன்

Sunday, April 24, 2011

கோவில் வரி

எல்லாம்
துறந்தவன்

என்று காட்டிக் கொண்டால் போதும்

பிறகு
எல்லாம் இன்பமயந்தான்!

நீயே
உயிர்களை ஆக்கலாம்
அழிக்கலாம்...

கொலை, கற்பழிப்புக்காக
போலீஸ் பிடிக்காதவரை...

பணக்காரச் சாமியாக
இருந்தாலும்
உண்டியலில் காணிக்கை
நிச்சயம் போடுவான்...

கடவுள் பெரியவனா?
கடவுளுக்கே காணிக்கை போட்டவன் பெரியவனா?

கடவுள் பக்தனுக்கு
எல்லாம் வழங்குகிறனா
தெரியவில்லை!

ஆனால்
கடவுளை காட்டி
பிழைப்பு நடத்துகிறவனுக்கு...

கடவுள் சிலையை
விற்றாவது...

எல்லாம் கிடைத்தது
விடுகிறது..!

உழைக்கத் தெரிந்தவன்...
பூமியில்
ஏயக்கத் தெரிந்தவனுக்கு...!

பிறவிக்கவிஞன்
_"தமிழ்க்கிறுக்கன் "

Thursday, April 21, 2011

மேட் இன் ஊழல் இந்தியா

தேர்தல் கமிஷன் கிழித்த கிழி...!

இந்த முறை தேர்தல் கமிஷன் மிக மிக சிறப்பாக செயல்பட்டதாக மக்களால் பாராட்டப் படுகிறது.

முதலில் வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பற்ற கொஞ்சம்ி பார்ப்போம்.

தேர்தலில் வெற்றி பெற்று கொள்ளையடித்த பணத்தை ஒவ்வொரு வாக்காளனுக்கும் பங்கு வைத்தால், குறைந்தது ரூபாய் 56,000 தரலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்கு போடச் சொல்லி, பணத்தை (டாஸ்மாக்)தண்ணீராக செலவழித்தாகவும், இந்த முறை எப்படியும் அதிமுக தான் ஜெயிக்க போகிறது அப்புறம் எதுக்கு ஓட்டு போட பணம் தரணும் என்று தொலை நோக்கு பார்வையை கையில் எடுத்த அதிமுக கொள்ளையர் கூட்டம், கட்சி வழங்கிய பணத்தை தானே அமுக்கி, மேலும், கீழுமாக சத்தமாக காற்றுப் போக ஏப்பம் விட்டது தான் மிச்சம்.


எங்களுக்கெல்லாம் பணம் தரவே இல்லை ஏன்? என்று பொதுமக்கள் அதிமுக வை சேர்ந்த தேசத் தியாகிகளை கேட்ட போது போலீஸ் கெடுபிடி அதிகமா போச்சு. கையில வீடியோ கேமராவோட அலையுறானுங்க. என்று பொறுப்பாக பதில் சொல்லி தப்பித்துக் கொண்டார்கள்.

மக்களிடம் கொள்ளையடித்த பணம், மக்களிடமே போய் சேராமல், நேர்மையாக செயல்படுகிறோம்என்ற பெயரில் நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, கொள்ளையடித்த மக்கள் பணம் மக்களிடமே போய் சேராமல் பத்திரமாக பார்த்துக் கொண்டது, தேர்தல் கமிஷன்.

என்ன ஒரு கடமையுணர்வு


விபச்சாரி, கூவி கூவி விபச்சாரத்திற்கு அழைப்பதைப் போல...

எல்லா கட்சிகளும், நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால், நாங்கள் அதற்கு இலஞ்சமாக அதை தருவோம், இதை தருவோம் என்று கட்சிக்காரன் பச்சையாக, ஊழல் ஆட்சி அமைக்க நீங்கள் உதவினால் இலஞ்சம் நிச்சயம் என்று பொது இடத்தில் நின்று கொண்டு கொஞ்சம் கூட கூச்சம், பயம், வெக்கமே இல்லாமல், மைக் கட்டி கூவுகிறான்...

இது பற்றி எல்லாம் ஒரு சின்ன எதிர்ப்பை கூட காட்ட வில்லை.

தேர்தல் கமிஷனே! நீ வாய் திறக்க மாட்டாய், ஏன் என்றால் நீ மேட் இன் ஊழல் இந்தியா!


குடிகாரனை கேலி செய்கிறான், அதுவும்,
சாராயம் காய்ச்சி விற்ற காசில் அமைத்த மேடையில் நின்று...

சாராயக்கடை முதல்வருக்கு ஆதரவாக பேசுகிறானாம்...

கால்கள் வழியே மூத்திரம் பேய்வது நகைச்சுவை நடிப்பாம்.

அதுவும்...

எதிரியின் மேடையில் எம்ஜிஆர் பாடலை பாடி பேச்சை ஆரம்பிக்கிறான்

அவனை கூப்பிட்டு பிரச்சாரம் செய்கிறது...

கழுதை தேய்ந்து வடிவேலானது திமுக...

உலக பணக்காரன்களில் முதல் பத்து பேரும் அமெரிக்கனாக தான் இருப்பான்.

அந்த அமெரிக்காவே அரண்டு போச்சே வாழும் திருவள்ளுவர் கலைஞர் ஊழல் ராசா ஆட்சீயை பாத்து...

குடும்ப கட்டுப்பாடு செய்யாமல் போனால் எவ்வளவு கேடு நாட்டுக்கு வரும் கலைஞரின் கழக குடும்பத்தை பார்த்தல்லவா, மிரண்டு போகிறது, தமிழ்நாடு!

அப்பன் ஆட்சியில் இருந்தால் அழகிரிக்கு... அதாங்க, ரவுடிக்கு போலீஸ் பாதுகாப்பாம்.

இதென்ன மதுரைக்கு வந்த சோதனை?

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி தந்தால், தனக்கு தமிழ்நாட்டில் பிரதமர் பதவி ஒன்றை உருவாக்கி தந்தால் தான் ஸ்டாலினை முதல்வராக்க விடுவேன். எனக்கு தமிழ்நாட்டு பிரதமர் பதவி கிடைக்காத வரை எவனும் முதல்வராகி விட முடியாது என்று சவாலே விட்டிருக்கிறாராமே எந்த கேடு கெட்ட பழி பாவத்திற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் அழகிரி...

ஜெயலலிதா வந்தால் நாட்டுக்கு என்னத்தை கிழித்து விடப் போகிறார் ?

தனக்கு பிள்ளையே இல்லை என்று புருஷன் வயசுக்கார சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தது, குடும்பமே இல்லையா கவலை விடு, ஒரு (சசிக்கலா)குடும்பத்தையே தத்தெடுத்துக்கோ என்ற பொரச்சி தெய்வம் மட்டும் என்னத்தை கிழித்து விடும்?

பட்டினி சாவு நிகழ்கிற தேசத்தில் முதல்வர்களின் சொத்து இலட்சக் கணக்கிலும், முதல்வர்களின் மனைவி"கள்" சொத்துக் கணக்கு கோடிகளிலும் காட்டப்படுகிறது.

தெரு விளக்கு எரியாததற்கும், குழாயில் குடிநீர் வராததற்கும், மோசமான சாலை, எந்த அடிப்படை வசதி கேட்டும் போராடாத மக்கள்...

வெற்றுக் காலிக் குடங்களோடு சாலை மறியலில் ஈடுட்டார்களாம்.
விசாரித்தால் "எங்களுக்கு ஓட்டுப் போட வழங்கிய பணத்தை, அந்த கட்சியை சேர்ந்தவர்களே, அமுக்கிட்டாங்க, அதான் நியாயம் கேட்டு போராடுறோம் " என்றார்கள்.

இது மாதிரியான மனநிலையில் மக்கள் இருக்கும் வரை, வெறும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் நாடு உருப்பட போவதில்லை.

கோபமும்,கவலையுடன்...

"_தமிழ்க்கிறுக்கன்."

Tuesday, April 19, 2011

கவிதைக் கிறுக்கன்!

இரு கைகளையும் கூப்பிக்குக் கொண்டு ஓட்டுக் கேட்ட அரசியல்வாதிகளை பார்த்ததும்...

நம் பிறவிக் கவிஞன் தமிழ்க்கிறுக்கனை, அந்த அந்த கூப்பிய கைகளுக்குள் மறைந்து கிடந்த கவிதை ஒன்று , அவனை இரவும் பகலுமாக படாய் படுத்த...

இதோ குளிக்கும்போது கூட வியர்க்கிற இந்த வெயில் காலத்தில், உங்களை புல்லரிக்க வைக்கும் அந்த கவிதை

இதோ...

இரு கைகளையும் கூப்பி

பிச்சைக்காரனே

இலவச, இலஞ்ச பிச்சை போட்டான்...!

வோட்டுப் பிச்சை!

_பிறவிக் கவிஞன்

"தமிழ்க் கிறுக்கன்"


♥ நட்பூ
www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

Monday, April 4, 2011

"அப்பாவின் காதல்....!"


காதலிக்கும் போது அவள் பெயரை, அவன் கையில் பச்சை குத்தியிருந்தான்..!
காதல் தோல்வியில் முடிந்தது...!

அவனின் கையைப் பார்த்து விட்டு, அவன் மகள் கேட்டாள்.

"என்னை அவ்வளவு லவ் பண்றியப்பா?"

♥ நட்பூ
www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

Thursday, March 24, 2011

ஒர் இரகசியம்..!

மாதம்தோறும் ரூ 3000 கோடி வருமானம் பார்க்கும் முதல்வர் குடும்பம் கேபிள் டிவியை இலவசமாக வழங்க தயாரா?

_தா.பாண்டியன்
தீக்கதிர், 24.3.11

ஒரு நாட்டின் மொழியை பேச வெட்கப்படும் உலகத்தின் ஒரே நாடு தமிழ்நாடு. தமிழைத் தொடர்ந்து பேசினால்,நம் ஆயுள் கூடும். மற்றவை பேசினால் ஆயுள் குறையும், காரணம் தமிழ் பேசுவதே பிராணாயாமப் பயிற்சி தான்!

_தேச.மங்கையர்கரசி
"குமுதம்"

Saturday, March 19, 2011

காதல் கிறுக்கன்!
"எல்லோரும் காதலிக்கிறார்கள்....

இன்னொரு நாளில் வருத்தப் படுகிறார்கள்...

சிலர் பிரிந்தற்காக...

சிலர் சேர்ந்தற்காக...! "

_"பாரதிஜிப்ரான்"
_தமிழ்க்கிறுக்கன்


♥ நட்பூ

www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

Monday, March 14, 2011

மீடியாகாரனே அரசியலுக்கு வராதே!

சேனல் இருந்தா நியூஸ் பேப்பர் நடத்தக்கூடாது. மீடியா பவர் உள்ளவங்க அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வல்லரசு நாடுகளில் சட்டமே இருக்கு..._எஸ்.ஏ.சந்திரசேகர்தொடர்ந்து 21 நாட்கள் ஒரே காரியத்தை செய்து வந்தால், அது நம்மிடம் ஒட்டிக் கொண்டு விட முடியாத பழக்கமாக மாறி விடும்.

இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.108 என்ற எண்ணுக்கு போன் செய்தால் அரசு ஆம்புலன்ஸ் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்கிறீர்களா?
ஒரு நாளில் இந்த எண்ணுக்கு வருகிற 35 ஆயிரம் அழைப்புகளில் 25 அழைப்புகள் பொய்யான தகவல்களை தரும் அழைப்புகள் என்பதால், அப்படி தகவல்களை தரும் பொய்ப்பேசிகளை கண்டிபிடித்து,தண்டிக்கப் போகிறதாம்,காவல்துறை.

அப்படி கைப்பேசிகளில் பொய்ப்பேசும் அத்தனை பேரும் குடிகாரர்களே என்கிறது, காவல் துறை.

அப்படி தண்டித்தால் தண்டிக்க வேண்டியது, குடிகாரர்களையா,
இல்லை,
குடிக்க காரணமாக இருக்கும் கலைஞரையா?

குடிகார பைய ஊர்ல திருட்டுப் பையன் நாட்டாமையாம்!

தமிழ்க்கிறுக்கனின் உள்ளம் கவிதை உள்ளம், எதைக் கண்டாலும், அதை பற்றி ஒரு கவிதையை அந்த இடத்திலேயே எடுத்து விடும் திறமைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன்.

உன்னை, நீயே கவிஞன் என்பதை என்றைக்கு எப்படி உணர்ந்தாய்? என்று கேட்டால்...

தமிழ்க்கிறுக்கன் இப்படிச் சொல்வான் "மற்றவர்களின் கவிதைகளை படித்ததால், நானும் கவிஞனானேன், கவிஞனாக இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்?" என்று கேள்வி கேட்டு
நம்மையே மிரள வைப்பான்.

தன்னுடைய முதல் கவிதையை எழுதிய பிறகுதான் தான் ஒரு சாதரண கவி இல்லை,பிறவிக் கவிஞன் என்று நம்பத் தொடங்கி விட்டான்.அவனின் கவிதையை படித்த யாரும் அதை கவிதை என்று சொல்வதில்லை என்பதால் வெறுத்துப் போய், தன்னை தானே மதிக்காதவனை எப்படி உலகம் மதிக்கும் என்று தத்துவம் பேசி அவனுக்கு அவனே பிறவிக்கவிஞன் தமிழ்க்கிறுக்கன் என்று போட்டுக் கொள்வான், அப்படி கணினியில் எழுதி என்னிடம் காட்டிய கவிதை ? யை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். மனசை திடப்படுத்தி படியுங்கள்!

பூகம்பம் வைத்த
தீயை...

நீர் கொண்டு
அணைத்தது
சுனாமி
பனைமர உயர அலை...

சப்பானில்
எத்தன உயிர்கள் காலி என்று கவலைப் படாதே, ராசா!

ஒலக கோப்பை கிரிக்கெட்டில் எத்தனை விக்கெட் விழுந்தது என்று
துக்கம் தொண்டையை அடைக்க
விம்மி விம்மி
விக்கி அழு ராசா,
அடுத்த தேர்தலில் நீயும் முதல்வர் தான்...

(என்ன, கவிதைய படிச்சு உங்களுக்கும் அழுவ அழுவையா வருதா? இப்படித்தான் சம்பந்த சம்பந்தமா இல்லாம எதையாவது கிறுக்கி நம்மால கிழிச்சு போட்டுறுவான்!)

_ "பிறவிக்கவிஞன்" தமிழ்க்கிறுக்கன்

www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

Sunday, March 13, 2011

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :


http://1.bp.blogspot.com/_ne9MC2mY38g/TESV17a76ZI/AAAAAAAAABA/aC-vHbnkRoE/s1600/PatKalyanImage.gif


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :

பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு

கருப்பொருள்:இயற்கை

1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்:சிறுவர்

12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )

கருப்பொருள்:குழலும் யாழும்

25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்:காதல்

51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )

கருப்பொருள்:நகைச்சுவை

94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )

கருப்பொருள்: கதைப்பாடல்

104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )

கருப்பொருள்: நாடு

106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )

கருப்பொருள்: சமூகம்

111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)

கருப்பொருள்: அரசியல்

121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்: தத்துவம்

127.விதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
128.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
129.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
129.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
130.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
131.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
132.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
133.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
134.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
135.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
136.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
137.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
138.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்

139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்: இறைமை

160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பொது

170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )

http://karaikalkprabakaran.blogspot.com/2010/07/1.html

Tuesday, March 8, 2011

கண்ணாடி ரோஜா!

அது ஒரு மென்பொருள் பூங்கா!

அந்த கண்ணாடி மாளிகைகுள் மகளிர் கூட்டம் கல கலவென்று சிரித்தபடி, கைகால்கள் முளைத்த கலர் கலர் பூக்களாக... பூங்கொத்தைப் போல தனித் தனிக்குழுவாக நின்று கொண்டு கேமராவால் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள், அந்த குழு எதிலும் ஆண்கள் யாருமில்லை.

முழுக்க முழுக்க பெண்கள் தான்!

இன்னிக்கி "மகளிர் தினம், அதான் களை கட்டுது" என்றான் பக்கத்திலிருந்த நண்பன், உற்சாகமாக...


"அத, இவங்க எதுக்கு கொண்டாடுறாங்க?..." என்றேன் சூடாக

நண்பர்கள் சிரித்தர்கள்! யாரும் எதிர்க்க வில்லை.

மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்கிற பெண்களில் நூறு பெண்களில் பத்து பேர் கூட கஷ்டபடுகிற குடும்பத்து பெண்களாக இருக்க மாட்டார்கள்.

சும்மா பொழுது போக்க வருபவர்கள், ஆடை அணிகலன்களை அரை குறையாக அணிந்து தினம் தினம் பேஷன் ஷோ நடத்தும் பெண்கள், எப்படியும் எலலோர் வீட்டிலும் கண்டிப்பாக கார் இருக்கும். சொந்தமாக வீடு இருக்கும், பெற்றோர்கள் நல்ல சம்பளம் வாங்குகிறவர்களாக இருப்பார்கள். எல்லாம் வசதியான வீட்டு பிள்ளைகள்.


பாய் பிரண்ட் பிடிக்க, பிடித்துப் போனால் ரூம் போட, கணவனை தேர்ந்தெடுக்க, கல்யாண சந்தையில் வேலைக்கு போகிற பெண்களின் விலை அதிகம் என்பதால், கூடுதல் தகுதிக்காக வேலைக்கு வருகிறார்கள்.

இஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ விரும்பும் பிராணிகளுக்கு, பணம் சேர்ந்தால்...

ஆண்களுக்கு நிகராக கால் மேல் கால் போட்டு தம் அடிப்பது,தண்ணியடிப்பது, பல ஆண்களோடு படுக்கையை பகிர்ந்து கொள்வது...

மென்பொருள் நிறுவனங்களில் நடக்கிற தில்லாங்கடிகளை நேரம், எழுதுகிற சூழலும் கிடக்கும் போது விரிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

_தமிழ்க்கிறுக்கன்

Thursday, March 3, 2011

கிரிக்கெட் காமெடி!

கிரிக்கெட் காமெடி!


(தயவு செய்து கடைசி வாக்கியத்தை கண்டிப்பாக படிக்கவும்)


முதல் உலகக் கோப்பை 1975 இல் வென்ற நாடு வெஸ்ட் இண்டீஸ்

இரண்டாவது உலகக் கோப்பை 1979 இல் வென்ற நாடு வெஸ்ட் இண்டீஸ்.

மூன்றாவது உலகக் கோப்பை 1983 இல் வென்ற நாடு இந்தியா

நான்காவது உலகக் கோப்பை 1987 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

அய்ந்தாவது உலகக் கோப்பை 1992 இல் வென்ற நாடு பாகிஸ்தான்

ஆறாவது உலகக் கோப்பை 1996 இல் வென்ற நாடு இலங்கை

ஏழாவது உலகக் கோப்பை 1999 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

எட்டாவது உலகக் கோப்பை 2003 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

ஒன்பதாவது உலகக் கோப்பையை 2007 இல் வென்ற நாடு ஆஸ்திரேலியா

ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து ஒரு முறை கூட உலகக் கோப்பையை வென்றதில்லை.

_தமிழ்க்கிறுக்கன்

கிரிக்கெட் காமெடி!

அதென்ன 3g?

அதென்ன 3g?

முதலில் 1g என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வாக்கி டாக்கி வகை தொலைபேசிகள் 1 g (generation_தலைமுறை) இந்த வகை தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் பேச, மறுமுனையில் கேட்க மட்டுமே முடியும். பேசி முடித்தவர் ஓவர் என்று தன் பேச்சை நிறுத்திக் கொண்ட பிறகே மறுமுனையில் கேட்டுக் கொண்டியிருப்பவர் பேச முடியும்.

2g ?
தற்போது பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். ஒரே சமயத்தில் இருவர் (காது கொடுத்து கேட்காமல் போனால் கூட)பேசவோ, கேட்கவோ முடியும்.அது என்ன 3g?

புதிய தலைமுறையினருக்கான தொழில்நுட்பம். எதிர், எதிரே இருப்பவர்களை முகம் பார்த்து பேசும் வீடியோ அழைப்பு. கணினி வழியே நடக்கும் வீடியோ கான்பரன்ஸ் அழைப்பை கைப்பேசியில் கொண்டு வரும் தொழில் நுட்பம், இது.

அழைப்பை பெறுபவரும் 3g தொழில்நுட்பத்தில் இயங்குகிற கைப்பேசியை வைத்திருக்க வேண்டும்.

இரண்டு கைப்பேசிகளிலும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. ஏனெனில் வீடியோ இணையம் வழியாக பயணம் செய்து தான் நம் கைப்பேசியில் படமாக தெரியும்.

பிரபலமான தயாரிப்பு கைப்பேசிகளில் தான் இந்த வகை தொழில்நுட்பம் செயல்படும்.

மலிவு விலையில் விற்கப்படும் பெயர் தெரியாத கம்பெனி தயாரிப்பு கைப்பேசிகள் பெரும்பாலும் இணைய இணைப்பை பெற்று செயல்படுபவைகளாக இல்லை.

எல்லா கைப்பேசி இணைப்பை வழங்கும் நிறுவனங்களும், இன்னும் 3g தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவில்லை.


ஏற்கனவே 3g-யை அறிமுகம் செய்தியிருக்கிற கைப்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக தயாராக வில்லை.

ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், வரும் வசதி பிரிவில் வீடியோ அழைப்புக்கான வசதி இருக்கும்.


வேகமான இணையம் என்று இலக்கை குறி வைத்து 3g தொழில்நுட்பம் களமிறங்கியிருக்கிறது.

ஒரு நிமிட வீடியோ அழைப்புக்கு அய்ந்து ரூபாய் என்ற கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியிருக்கிற நிறுவனங்கள்,வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது குறைக்கும் என்று நம்புவோமாக!


_தமிழ்க்கிறுக்கன்

Sunday, February 27, 2011

ஒரு சிலை,ஒரு இலட்சம் கொலை!

ஆந்திராவில் காங்கிரஸ் எம்எல்ஏ, எம்பிகள் ஆந்திராவை இரண்டாக்கு, தனித் தெலுங்கான வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று தன் கட்சி தலைமையின் தலைமயிரை பிடித்து ஆட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது, ஆந்திரா காங்கிரஸ்.

தமிழ் நாட்டில்...?

தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கவில்லை. அப்படி கேட்டால் தமிழ்க்கிறுக்கன் ஒரு தமிழ்த்தீவிரவாதி காற்றுப் புகாத சிறையிலே பூட்டு என்பார், கலைஞர்.

என் வேண்டுகோள் எல்லாம் ஒன்றே, ஒன்று தான்!

ஒரு இலட்சம் ஈழத் தமிழர்கள் இறந்த போது, தடுத்து நிறுத்தாவிட்டால் கூண்டோடு பதவியை ராஜினமா செய்து விடுவேன், என்று உண்மையான அக்கறையோடு மிரட்டி பதவி விலகி, எப்படியாவது போரை தடுத்து இருந்தால்,தமிழினமே வரிசையில் நின்று வாழ்த்தியிருக்கும்.

திருக்குறளில் சொன்னதை கடலில் கரைத்து விட்டு, திருவள்ளுவருக்கு மட்டும் உயரமாக சிலை வைத்து, அதன் அடியிலேயே உங்கள் பெயரை எழுதி வைத்தால், நீங்கள் இறந்த பிறகும், உங்கள் பெருமைகளை பற்றி சிலைகளும் நின்று பேசும்...

என்று தப்புக் கணக்கு போடுறீங்க.

காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை ஆட்டிப் படைக்கும் காங்கிரஸ்காரன் எங்கே...

காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு எத்தனை இலட்சம் உயிர் போனாலும், ஆட்சி போகாமல் பாதுகாப்பேன் என்ற உங்கள் சின்னப் புத்தி எங்கே?

தேசிய பாதுகாப்பு சட்டத்தில், ஈழத்து தமிழ்ப் போராளிகளை சிறையில் அடைத்தது தப்பு என்ற உயர்நீதிமன்றமே தீர்ப்பு வழங்கி, விடுதலை செய்தது.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்?

திரும்பவும் அதே சூப்பர் பாதுகாப்பு சட்டத்தில் சீமானை சிறையில் அடைத்தீர்கள்.

திரும்பவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததது தப்பு என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்ததது, உயர்நீதி மன்றம்.

ஈழத்தில் ஒரு இலட்சம் பேரை கொல்லும் போரை சோனியா நடத்தியபோது இங்கே ஒரே ஒரு ராஜீவ் காந்தி சிலை கூட மண்ணில் சாயாமல் பார்த்துக் கொண்டீர்கள்.

தமிழைக்காக்க தண்டவாளத்தில் தலை வைத்தது எல்லாம்...

ஆட்சிக்கு வந்து பொறுக்கித் திங்க நீங்க போட்ட வீதி நாடகமா?

_தமிழ்க்கிறுக்கன்

"வேடிக்கையாகவே கேலிகள் பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Saturday, February 26, 2011

ராஜபக்சே விருது!

உங்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமா?

மக்களின் மனசாட்சி என்ற நிகழ்ச்சியில் சென்னை (கலைஞரின் கட்சியை சேர்ந்த) மேயருடன் நேரடியாக பேசுங்கள் என்று தொலைபேசி எண்களோடு விளம்பர வாசகம் ஓடியது.

அந்த தொலைக்காட்சியின் பெயர்

"z(ee) தமிழ்"

என்னே, ஒரு அழகான தமிழ்ப் பெயர்?

கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

மக்களுக்காக, (கலைஞரின்) மக்களே நடத்தும், மக்கள் பணத்தை கொள்ளையடித்து வளர்ந்த கலைஞரின் குடும்பத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலில் எதிலும் இந்த மாதிரி உருப்படியான நிகழ்ச்சி எதையும் ஒலிபரப்புவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஊழல் ராசா கைதான போது கலைஞர் தொலைக்காட்சியும் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது ஓர் உண்மை வெளியானது.

கலைஞர் தொலைக்காட்சியை நடத்துவது , கலைஞர் குடும்பத்து சன் டிவி நிறுவனம் இல்லை, சாதிக் காட்சி ஒன்றின் தலைவரான நடிகர் சரத்குமார் தான் என்பது தான் அது.

தான் கதை வஜனத்தில் எழுதிய ஒரு சரித்திர கால நாடகத்தை ஒளிபரப்ப சன் டிவி நிறுவன தயாநிதிமாறனிடம் வேண்டுகோள் விடுத்தாராம்.

உங்கள் நாடகம் ஒளிபரப்பானால் சன் டிவின் ரேட்டிங் குறைந்து விடும் "போய்யா, ஒன் வேலய பாத்துக்கிட்டு..." என்ற ரீதியில் சொன்னாராம்.

அண்ணா இருந்த போது திமுக என்ற கட்சி அலுவலகமாக இருந்த அண்ணா அறிவாலயம் இன்று கலைஞரின் சொத்துக்களில் ஒன்றாக மாறியது, தனிச் சதிக் கதை.

இப்படித்தான் கலைஞரின் கோபத்தால், சன் டிவி நிறுவனம் காலி செய்யப்பட்டது.

அந்த கோபத்தின் நெருப்பில் உதயமானது தான் கொ(க)லைஞர் டீவி.

ஆளுக்கொரு குடும்ப தொலைக்காட்சி இருந்தாலும், ஈழத்தில் ஒரு இலட்சம் பேரின் படுகொலையை வெளியே தெரியாமல் மூடி மறைத்தது...

ராஜபக்சேவின் படுகொலையை விடக் கொடுமையானது!

இந்த தொலைக்காட்சிகளுக்கு சிங்கள அரசே ராஜபக்சே விருது கொடுக்கலாம்.

_தமிழ்க்கிறுக்கன்


"வேடிக்கையாகவே கேலிகள் பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

Friday, February 25, 2011

வாழ்க, குடி கெடுத்த கருணாநிதி!

வரும் வழியில் அரசு நடத்தும் மதுபானக்கடையான டாஸ்மாக் வாசலில்...

பெருங்கூட்டம்!

ஆமா, டாஸ்மாக் என்ற டமில் சொல்லுக்கு இன்னா அர்த்தம்ன்னு சொல்லுங்க முத்தமிழ் தலீவரே.

வழக்கம் போல யாராவது வேட்டியை தாவணி போல தோளில் தொங்க...

கை,கால்கள் தொங்கியபடி கலைஞரின் புகழை சப்தமில்லாமல் மவுன பாடி சாக்கடையோரம் கவுந்து கெடப்பார்கள், இவர்களின் இந்த இழிசெயல் கண்டு தெரு நாயும் வெக்கப்பட்டு கொஞ்சம் தள்ளிப் போய் படுக்கும்...

கூட்டம் விலக்கி பார்த்தபோது, அதிகமாக குடித்து விட்டு, ஒரு குடிமகன் செத்தே போயிருந்தார். கூட்டத்தை கலைத்த படி காவல் துறையும் வந்து சேர்ந்தது.


டாஸ்மாக் சரக்குகள் எல்லாம் போலித் தயாரிப்பு கரும்புக் கழிவிலிருந்து போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறன. மதுபானம் தயாரிக்க தேவையான சரியான பொருட்களை கொண்டு தயாரிப்பதில்லை என்கிறது ஒரு பத்திரிக்கை செய்தி!

அதாவது சுருக்கமாக சொன்னால்...

தரமான சரக்கின் விலையில் போலிச் சரக்குகள் விற்கப்படுகின்றன.

அரசே போலிச்சரக்குகளை விற்கிறது. இந்த சாதனையை பற்றி யாராவது கின்னஸூக்கு அனுப்பலாம்.


அதே டாஸ்மாக்கில் நான் பார்த்த ரெண்டாவது பிணம், இது!

108 எண்ணில் கூப்பிட்டால் வரும் இலவச ஆம்புலன்ஸ் வண்டிகளால் பல இலட்சம் உயிர்களை காப்பாற்றியதாக, அரசு தொலைக்காட்சிக்கு கூட தராமல் தன்னுடைய குடும்ப தொலைக்காட்சிகளில் வெளியிட்டு துட்டு சம்பாதித்துக் கொண்டது, கழக குடும்பம்.

ஆனால் விளம்பரமே செய்யாத செய்தி ஒன்று உண்டு . அது என்னவென்றால் ஆம்புலன்ஸில் ஏற்றி காப்பாற்றப் பட்டவர்களை விட டாஸ்மாக் சரக்கால் கொல்லப்பட்ட குடிமகன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.

பிணங்கள் ஆட்சி நடத்துகிற

நாடு?...

சுடுகாடு!

வாழ்க குடி கொடுத்த கருணாநிதி!

வளர்க குடி கெடுத்த கருணாநிதியின் குடும்பம் !!

_தமிழ்க்கிறுக்கன்

Thursday, February 24, 2011

கலைஞர், தமிழ்க்கிறுக்கன் காமெடிங்க

என்னை வள்ளுவரோடும், தொல்காப்பியரோடும் ஒப்பிடக்கூடாது.

_கலைஞர்

உங்களை வெக்கம் பிடுங்கி திங்கிற அளவுக்கு பாராட்டி தள்றாங்க , தலீவரே !
_தமிழ்க்கிறுக்கன்.

என்னை பெரியார் தொண்டன், அண்ணாவின் தம்பி, ஏழைகளுக்கு தோழன் என்று சொல்லுங்கள்!
_கலைஞர்

வெங்காயம் விலை ஏறியிருக்கேன்னு பத்திரிக்கைகாரங்க கேட்ட "அத பெரியார் கிட்ட கேளுங்கன்னு சொல்வீங்க,ஆனா ஓட்டு மட்டும் கழக குடும்பத்துக்கு போடணும்ன்னு கூவுவீங்க, நீங்க தான் தலீவரே பெரியாருடைய உண்மையான(தொ)துண்டர் "

ஏற்கனவே எல்லோர் வீடுகளிலும் டிவி இருப்பது தெரியும் என்றாலும், திரும்பவும் டிவி கொடுப்பீங்க. அப்ப தான் உங்க குடும்பமே ஏழைகளுக்கு தோழனா இருந்து கேபிள்

டிவிங்கிற பேர்ல வீடு வீடா புகுந்து காசு வசூல் பண்ணியாவது கவுறதையா ஆட்சி போன பெறவு பொழப்பு நடத்த முடியும்.

அண்ணா, உம்மை தம்பியாக்கிது தான் ஒலகத்திலேயே பெரிய தப்பு தலீவரே!
_தமிழ்க் கிறுக்கன்

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற காமக்கடவுள் பிரேமனந்தா கல்லீரல் நோயால் மரணம்.
_பத்திரிக்கை செய்தி.

இன்னா தலீவரே ஒம் ஒடம்புல ஓரே ஒரு பூணூல் மட்டும் தொங்கியிருந்தா கதையே மாறியிருக்குமே தலீவரே!

தன்னை பெயரையே இனிமே அரசாங்க கெசட்டுல மயிலாப்பூர் எம்எல்ஏ மாத்துனால மாத்துனாலும் மாத்தூம், பதவியில இருந்து சொகம் கண்டுகிட்ட நம்ம கோமாளி நடிகர் s.v.சேகர் மாதிரி பாப்பன பிராணிங்க, பிராமண சங்கம் என்கிற பேர்ல ஜாமீன் எடுத்து வெளியில விட்டிருப்பாங்க
பெறவு திரும்பவும், பூணூலால தூண்டில் போட்டு கோவிலுக்கு வர்ற பொம்பளைங்களுக்கு புள்ள வரம் தரலாம். நீ பண்ணுன தப்புக்கு தண்டனையா உன்ன உக்கார வைச்சி பொதைக்கிறதா, கேள்விபட்டேன்.

இன்ன பண்ணுறது நீ பண்ணுன தப்புக்கு செத்தாலும், கட்டைய நீட்டி நிம்மதியா சாக முடியல.

_தமிழ்க்கிறுக்கன்

வாய்க்கரிசி அரசியல்

தமிழீழ விடுதலையை பெற்று விட்டு செத்துப் போனாள், எம் தமிழ்த் தாய் பார்வதி அம்மாள்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் பாய்ந்து போனாது, கலைஞர் காலடியில் படுத்திருந்த காமெடி சிறுத்தை ஒன்று!

பொம்பளை ராஜபக்சே சோனியாவின் பிரதிநிதியாக, ராஜபக்சேவின் மனித ரத்தம் வீசும் தம்பியின் வாயால் அண்ணன் என்று அழைக்கப்பட்ட கலைஞரின் ஜெராக்ஸ் நகலாய் , கலந்து கொள்ள போயிருந்தீர்கள்.

சுருக்கமாக சொன்னால் ராஜபக்சேவின் உறவினரில் நீங்களும் ஒருத்தர் என்ற உரிமையில், துணிச்சலோடு போயிருந்தீர்கள்.

எதிரிக்கும் பிடிக்கவில்லை உங்களின் இரட்டை காகிதப் புலி வேஷம்!

நீங்கள் அடிக்கடி ஓடாத திரைப் படங்களில் நடிப்பதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்.

தயவு செய்து உங்களின் நடிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்!

அம்பேத்காரின் பெயரில், பெரியாரின் பெயரில் சாதி ஒழிப்பு என்பதற்கு பதிலாக பச்சையாக சாதிக்கட்சி நடத்தி பொழப்பை ஓட்டுவது தமிழ்நாட்டோடு இருக்கட்டும்.

உலகின் மிகப் பெரிய சுடுகாடான ஈழம் வரை, உங்களின் ஈனப் பிழைப்பைத் தொடர வேண்டாம். நீங்கள் மேடைகளில் வெடிக்கும் வெத்து வேட்டுகளை தமிழ்நாட்டோடு நிறுத்திக் கொள்ளுங்கள்!

பீரங்கி,தூப்பாக்கி,வெடிகுண்டுகள் வெடித்து ஓய்ந்த பூமியில் உங்கள் வெத்து வேட்டு ஓசை இனியும் தொடர வேண்டாம்!

தொல்.திருமாவளவன் அவர்களே!

இறுதியாக ஒரு வேண்டுகோள்...!

ஈழத்து பிணங்களின் வாய்க்கரிசியில், நீங்கள் அரசியல் நடத்த வேண்டாம்!

_தமிழ்க் கிறுக்கன்.

Wednesday, February 23, 2011

வாழ்க அண்ணாவுக்கு நாமம்!

கருணாநிதி வேதனை..!

தமிழர்களே! தமிழர்களே!!

வெங்காயம் ரூபாய் நூறுக்கு விற்ற போதும் கூட, வெறும் பத்து பைசா ஏன் 5 பைசாவுக்கும் கூட ,ஒரு நிமிட அழைப்பு என்று அழைப்புக் கட்டணத்தை குறைத்தவன் இல்லையா, ஆகாயம் தொட்ட ஊழல் புரட்சியாளன் தம்பி ராசா.

இந்த தேச தியாகிக்கு தெருவாக ஒவ்வொரு மொபைல் டவருக்கும் கீழே சிலை வைத்தல்லவா, கோவில் கட்டி கொண்டாடி இருக்க வேண்டும்.

அன்று தொடங்கி இன்று வரைக்கும் தியாகிகளுக்கு சிறைச்சாலை தானே ஊட்டியும் கொடைக்கானலுமாக இருந்து வந்திருக்கிறது.

தம்பி ராசா சிறையிலே படுக்க வெறும் ஏழு போர்வைகள் போர்த்தி தூங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருகிறான்.

அவனுக்கு கண்ணகி சிலைக்கு பக்கத்திலேயே என் சொந்த செலவிலாவது ஒரு சிலை வையுங்கள், எனக்கு சிலை வைக்க விட்டாலும் பரவாயில்லை.இப்படியேல்லாம் கேவலமாக ஆனந்த படுவதில் தான் என் அல்ப ஆசை ஊஞ்சலாடுகிறது.

தனியாருக்கு அலைவரிசை உரிமையை மலிவு விலைக்கு விற்று அரசாங்கத்து நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக , கிரிக்கெட் ஆடுகிறதே எதிரிக்கட்சிகள்.
உங்களுக்கு ஒன்று சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன்.

அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு நெலத்தை வளைத்து போட்டு உங்களுக்கு சொந்தமாக்கியிருக்கிறீர்களே?

அப்போதெல்லாம் எங்கே போச்சு, உங்க புத்தி?

இவ்வளவு ஏன் என் கடசிக்காரர்களே கூட எனக்கே தெரியாமல் பொறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள்.

இந்த விஷயம் கூட மக்களுக்கு தெரியும். பேசமால் தானே இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் கேணைகளா?

வாழ்க அண்ணாவுக்கு நாமம்!

வளர்க கழக குடும்பம்.

_தமிழ்க் கிறுக்கன்.

என்னைப் பற்றி ...