தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, May 22, 2011

அதை விட, உயரம்!

அதை விட, உயரம்!


(சிறுகதை)
_தமிழ்க்கிறுக்கன்

கொஞ்சம் பழகினால், நாய் பாஷையை நாமும் கற்றுக் கொள்ளலாம்.

புதிய நபர்கள் என்றால், ஒரு மாதிரி மென்மையாக மிரட்டும் மொழியில் குரைத்து வரவேற்கும். முற்றிலும் மனசெல்லாம் அழுக்கானவர்கள் வந்தால் "இவனை நம்பவே நம்பாதே, இவன் புத்தி சரியில்லை !" என்று எச்சரிக்கை விடும்.

அந்த மனித மனங்களை படிக்கிற சக்தி நம்மை விட நாய்களுக்கு அதிகம்.

சமயங்களில் நாயோடு அம்மா பேசிக் கொண்டிருப்பாள்.நாயும் கூட புரிந்தது மாதிரி உடல் மொழி பேசும். இருவருக்கும் மொழி தேவையிருக்காது.ஆனாலும் பேசிக் கொள்வார்கள்.



ஒரு நாள் அந்த நாய், கொஞ்சம் கோரமாக செத்து போனது.

அம்மா வெட்கத்தை விட்டு சப்தமாக அழவே ஆரம்பித்து விட்டாள்.

யாராவது நாய் செத்துப் போனதுக்கெல்லாம் அழுவார்களா?

அம்மாவின் கண்ணீர் பார்த்து நானும் கூட கலங்கித் தான் போனேன்.

அதற்கு பிறகு எவ்வளவு சொல்லியும் இன்னொரு நாய் வளர்க்க அம்மா மறுத்தாள்.

நகரங்களில் குடிப்பதற்கு ஒரு தண்ணீர், மற்ற உபயோகங்களுக்கு இன்னொரு தண்ணீர் என்று இரண்டு வகை தண்ணீர் பயன்படுத்துகிறார்கள்.

அம்மா ஒரு நாள் குடிநீரோடு மொட்டை மாடி போனாள்,நானும் பின் தொடர்ந்தேன்.

மொட்டை மாடியில் தானியங்களை கொத்தி தின்றபடி புதிய விருந்தாளிகள்,சிட்டுக் குருவிகள்.அவைகளின் கிண்ணத்தில் ஊற்றத் தான் தண்ணீர் கொண்டு போயிருக்கிறாள்,அம்மா.


வழக்கம் போல அம்மா, குருவிகளோடு பேச ஆரம்பித்து விட்டாள்.

என் வருகை அவர்களின் பேச்சுக்கு தடையாக இருக்கும் என்பதால், சப்தமில்லாமல் கீழே இறங்கி வந்து விட்டேன்.

அம்மா, பக்கத்து வீட்டின் மேல் நிறுத்தியிருந்த மொபைல் போன் சிக்னல் டவரை விட உயரமாக தெரிந்தாள்.

தட்டில் இரையோ, தண்ணீரோ தீர்ந்து போனால், குறைந்தது நான்கு குருவிகளாவது மொத்தமாக சேர்ந்து கீழே கதவு பக்கம் வந்து பயங்கரமாக கத்த ஆரம்பித்து விடும்.

"என்னடா செல்லம், பசிக்குதா " என்றபடி மொட்டை மாடி போய் தேவையானவைகளை நிரப்பி விட்டு கீழே வருவாள்.

ஒரு நாள் எல்லாம் அடங்கிப் போன அம்மாவை கிடத்தியிருந்தோம்.

அவ்வளவு கூட்டத்தையும் பார்த்து கொஞ்சம் கூட பயப்படவே இல்லை.

எல்லாம் புரிந்தது மாதிரி மெல்ல மெல்ல தத்தி தத்தி தாவியபடி அம்மா மேல் உட்கார்ந்ததன,குருவிகள்.

யாரும் தொந்தரவு செய்யாதீர்கள், அவைகளும் அம்மாவின் பிள்ளைகள் தான் என்றேன்.



யாரோ புதிதாக அழ ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த குருவிகளுக்கு யாரோ தீனி வைத்தார்கள். எந்த குருவியும் சீண்டவே இல்லை.

அம்மாவை அடக்கம் செய்த பிறகு மொட்டை மாடியில் , ஒரு வாரம் தீனியும், தண்ணீரும் வைத்துப் பார்த்தேன்.

எதுவும் குறையவே இல்லை.எந்த குருவியும் சீண்டவே இல்லை.


வெட்கமே இல்லாமல் சப்தமா அழ ஆரம்பித்தேன்...!

(சிறுகதை)
_தமிழ்க்கிறுக்கன்

Tuesday, May 17, 2011

எம் தலைவர் சாகவில்லை...! mp3

எம் தலைவர் சாகவில்லை...! mp3

எம் தலைவன் பிரபாகரன் சாகவில்லை..!

அழுத கண்களை ஆறுதலாய் துடைத்து, வருடி போகும் , பாடல் இசை வடிவில் இதோ...

கைப் பேசியிலும் கணினியிலும் டவுன் லோடு செய்ய...

http://goo.gl/vS8J5

_தமிழ்க்கிறுக்கன்

Sunday, May 15, 2011

குண்டு விழுந்தால் என்ன? mp3

குண்டு விழுந்தால் என்ன? mp3

அட்டைக் கத்தி கட்ட பொம்மன்களின் பாடல்களைக் கேட்டு கேட்டு, அந்த கத்திகளை போலவே, நம் மூளைகளும் மழுங்கி விட்டன.

இப்படி உண்மையான தலைவனை, உண்மையான வீரம், உண்மையான காயங்களை, உண்மையான போர்கள பாடல்களை அதுவும் இவ்வளவு நெருக்கமாக கேட்கும் வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்?

இந்த பாடல்களை கேக்கும் போது...

உங்கள் காதுகளை உரசிக் கொண்டு துப்பாக்கிக் குண்டுகள் சூடாக சீறிப்பறக்கும், நீங்களே ஆயுதம் தூக்கி போர்களத்தில் போராளியாக நிற்பீர்கள். பிண வாடை எழும்.

திரும்ப திரும்ப கேட்கும்படியான பாடல்களாக அத்தனையும் இருக்கிறன.

என்னுடைய கைப்பேசியில்

repeat songs list -இல்

இருக்கும் பாடல்கள்...

1. குண்டு விழுந்தால் என்ன?

2. வெட்டி வீழ்த்துவோம்!

3. தாலாட்டு பாடமாட்டேன்

4. ஓ... வீரனே!

5. தோழர்களே...!

6. பிரபாகரன் நினைத்தது நடக்கும்

7.மக்களெல்லாம் பிரபாகரன் பக்கம்

8.தமிழீழம் காக்கும்

9.விடுதலைப் புலி தங்கச்சி

10. பறக்குதடா யாழ் கோட்டையிலே எங்கள் புலிக்கொடி

11.கோணமலை எங்கள் கோட்டை




தாலாட்டு பாட மாட்டேன்!

எதிரியின் கொடிய குண்டுவீச்சிலேயே தொட்டில் எரிந்தது...


தீப்பிடித்து
எதிரி முகாம் எரிகின்றது...
தீரனே!
உனது முகம் தெரிகின்றது...

பிரபாகரனின் நிழலில் கூட நெருப்பு இருக்குது...

அந்த நெருப்பில்
நில்லுங்கள்
உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்குது...

பிரபாகரன் நினைத்தது
நடக்கும்...
அவன் புலிப்படை
நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்...

குண்டு விழுந்தால் என்ன

உடல் துண்டு பறந்தால் என்ன

குழந்தை, பிஞ்சு துடித்தால் என்ன

அது பிணமாய் விழுந்தால் என்ன

ஊர் ஊராய் அலைந்தால் என்ன

நாங்கள் செத்து
தொலைந்தால் என்ன

தமிழீழ தாகம் தணியாது..!

எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது...!!

இந்த பாடல்களை டவுன் லோட் செய்ய ...


http://www.vannithendral.net/index.php?option=com_content&view=article&id=164:2010-08-02-20-21-50&catid=45:2009-11-29-08-31-07&Itemid=56


இதே முகவரிக்கு சென்று அந்த பாடல்களை உங்கள் கைப்பேசி நினைவகத்திலும் சேமிக்கலாம்.

கைப்பேசியில் இந்த இணைய தளத்தை திறக்க ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்...


www.bit.ly/kQVL5a

இந்த முகவரியை நேரடியாக தட்டச்சு செய்து அந்த தளத்தை திறக்கலாம்.

_தமிழ்க்கிறுக்கன்.

Wednesday, May 11, 2011

திருடர்கள் தேசத்தில்...

திருடர்கள் தேசத்தில்...

இன்று காலை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய பாக்யம் பெற்றேன்.

வட மாநிலத்தை சேர்த்த நான்கு நபர்கள், அழுக்கான சட்டை, கட்டிட வேலைக்கு போகிறவர்கள் போல தெரிந்தார்கள்.

4 பேர்களுக்கு பயணச்சீட்டு வாங்க போய், ஒரே ஒரு நபர் மட்டும் சென்னை முழுதும் எந்த மாநகர பேருந்திலும் பயணம் செய்யக் கூடிய ஒரே ஒரு பயணச்சீட்டை மட்டும் வாங்கி வந்து, என்னிடம் நாலு விரல்களை காட்டி புரியாத மொழியில் சொன்னாலும், தவறு என்ன என்பது புரிந்து.


ஏதோ பேசி மேலும் கூடுதலாக
30 ரூபாய்க்கு நான்கு பேருக்கு பயணச்சீட்டு வாங்கி வந்து புலம்பிக் கொண்டிருந்தான், பயணச்சீட்டு வாங்கிய வடநாட்டான்.

எல்லா சீட்டுகளையும் வாங்கிப் பார்த்தேன். 30 ரூபாய் சீட்டுக்கு, 60 ரூபாய் சீட்டு கொடுத்திருக்கிறான், நடத்துநர்.

எனக்கு வந்ததே கோபம்.

அந்த வடநாட்டான் கையை பிடித்து தர தரவென்று நடத்துநரிடம் போய் நியாயம் கேட்டேன்.



மொழி தெரியாதவன் கிட்ட ரெண்டு மடங்கு கட்டணம் எப்படி வாங்குவீங்க? முதலில் எடுத்த ஒற்றை டிக்கெட்டை ரிட்டன் வாங்கிக்குங்க.(அந்த சீட்டை நடத்துநர் கண்டிப்பாக வேறு நபருக்கு மாறறித் தர முடியும்)

வாங்கும் போதே தெளிவா கேட்டு வாங்கணும் என்றான், நடத்துநன்.

மொழி தெரியாதவன் எப்படி தெளிவா கேப்பான். இந்த பஸ்ஸில வர்ற அத்தன பேரும் சாப்ட்வேர் கம்பெனியிலா வேல பாக்கிறான். அவனுங்க அத்தன பேரும் கூலிக்கு வேல பாக்கிற பசங்க. அவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டுறீங்களே!
தினமும் கூலி வேல செய்யிற அத்தன பேரும், நீங்க பாக்கிற கவர்மெண்ட் வேலய விட பெரிய வேலையா உஙகளுக்கு தெரியுதா என்ன...


நீங்களெல்லாம் சொந்த வீடு,கார் பங்களான்னு இருங்க

இல்லாதவன் ஊர் ஊரா வேல தேடி பிச்சைக்காரன அலைஞ்சாலும், உங்க வேலையிலே கண்ணா இருங்கடா.

அப்புறந்தான் பார்த்தேன். பெருந்தே என்னை வேடிக்கை பார்த்தது எனக்கு கூச்சமாக இருந்தது, நடத்துநன் தலையை கீழே தொங்க விட்டுக் கொண்டான்.

வேற யாராவது அந்த ஸ்பெஷல் டிக்கெட் கேட்டு வந்ததா மாற்றித் தருகிறேன், என்றான் பிடிவாதமாக நடத்துநன்.

எனக்காக சண்டை போட வேண்டாம் என்று சைகையால் காட்டி கண்ணீர் மல்க கை கூப்பி அவன் இருக்கையை நோக்கி நகர...

நான் இறங்க வேண்டிய பெருந்து நிறுத்தம் வர நான் இறங்க.

மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
_தமிழ்க்கிறுக்கன்

என்னைப் பற்றி ...