தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, October 30, 2011

"போதி தர்மன்"

"போதி தர்மன்"

கடைசியாக தமிழையும், தமிழனை உயர்த்தும் வரிசையில் சேர்ந்திருக்கும், ஏ.ஆர்.முருகதாஸின் ஒரு தொலைக்காட்சி பேட்டி கண்டு மிரண்டேன்! வாழ்ந்ததாக கருதும், தன் கதாநாயகன்
போதி தர்மனுக்கு கோவில் கட்ட வேண்டுமாம்.

இந்தியாவில் இருக்கிற கடவுள்களின் எண்ணிக்கை எத்தனை என்கிற கேள்விக்கு பதிலே இல்லை என்கிறபோது...

இன்னும் ஒரு கோவிலா?

சென்னை மெரினா பீச்சில் நடு ரோட்டில் நின்று வெயிலிலும், மழையிலும் நனைகிற, நடிப்பு பல்கலைகழகம் சிவாஜிகணேசன் சிலைக்கு இரவிலாவது மின்விளக்கை எரிய விட்டு அண்ணாந்து பார்த்து வியக்க வைக்கலாமே...!?

_தமிழ்க்கி@க்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, October 29, 2011

ஒரு தவறு செய்தால்...

ஒரு தவறு செய்தால்... அதை தெரிந்து செய்தால்...
1
எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருக்கும் போது இந்த மாநகராட்சி, ஊராட்சி, மேயர் தேர்தலை வேண்டுமென்றே நடந்தவில்லையாம்.

இந்த வார்டு உறுப்பினர்கள் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சாலை போடும் குத்தகைகாரர்கள் மாதிரியான ஆட்களிடம் தலையை சொறிந்தபடி கமிஷன் கேப்பார்களாம். தராமல் போனால் அவர்களால் என்ன என்ன வழிகளில் தொல்லைகள் தர முடியுமோ அத்தனை வழிகளிலும் தொல்லைகள் செய்வார்களாம்.

எனக்கு தெரிந்த கவுன்சிலர் ஒருவர் ஊருக்காக சாலை போட கொடுத்த காசில் அவர் மட்டும் வந்து போகும் வழி சாலைகளை மட்டும் செம்மையாக போட்டுக் கொண்டார்.

தன் ஊர் மக்கள் பிடிக்க பொதுக் குடிநீர் குழாயில் குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் வரும், ஆனால் இவர் வீட்டுக்கு மட்டும் நல்ல தண்ணீர் வருமாம்.

பக்கத்து ஊர் குழாயிலிருந்து திருட்டுத் தனமாக குழாய் பதித்து தனக்கு மட்டும் நல்ல தண்ணீர் வர வைத்துக் கொள்கிறாராம்.

அவரும் எம்.ஜி.ஆர் கட்சிக்காரர் தான்.

இந்த மாதிரி திருட்டு ஆசாமிகள். சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்த கொடுமைகளை கூட நீங்கள் நம்பி தான் ஆகணும்.

_தமிழ்@கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Thursday, October 20, 2011

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

தொடர்பு எல்லைக்கு வெளியே...!

எவ்வளவு கூட்டம்
எத்தனை இரைச்சல்
எந்த சூழ்நிலையிலும்
யாருமே கேட்க முடியாத குரலில்
மணிக்கணக்கில் பேசுவாய்...

என்னால் கேட்க மட்டுந்தான் முடியும்

என்னால் இரண்டு நிமிடத்திற்கு மேல் பேச முடிவதில்லை.

எல்லா இரைச்சல்களும்
எனக்கு இடைஞ்சலாக இருக்கும்.

எந்த சப்தமும்
என்னை பாதிக்காமல் இருந்தால் தான்
என்னால்
பேச முடியும்.

உங்களுக்கு பொய் பேசவே தெரியவில்லை
என்று திட்டுவாய்.

ஒரு நாள் உன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது...
"என் தொடர்பு எல்லைக்கு வெளியே நீ போய்விட்டதாக..." பதில் வந்தது.

அப்புறந்தான் புரிந்ததது, பெண்ணே!

எனக்கு...

உன்னை போல எனக்கு பொய் பேச தெரிய வில்லை என்று.

"பிறவிக் கவிஞன்
" _தமிழ்க்கிறுக்கன்,சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Monday, October 17, 2011

தேர்தல்..!

தேர்தல்..!

கும்பிட்டு போனீர்கள்...

எங்கள் வீடு
தேடி வந்ததது
இலவச பிச்சை பாத்திரங்கள்!

- பிறவிக் கவிஞன்
தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...