தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, February 29, 2012

" அம்மா !"

" அம்மா !"

அம்மாவுக்கு இன்று தான் முதுகு தேய்த்து குளிக்க வைத்தேன்.

எத்தனை முறை என் தங்கம், என் பவுன், என் வெல்லக்கட்டி, என் செல்லம்... என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சி குளிப்பாட்டியிருப்பாள்.

வளர்ந்து இத்தனை வயதுக்கு அப்புறம் இது மாதிரி ஒரு நாளும் செய்தது இல்லை என்று நினைத்த போது குற்ற உணர்வால் கண்ணீர் சர சர வென்று கீழ் இறங்கியது.

அம்மா என் கண்ணீரை பார்க்க கூடாது.

பார்த்தால்...

காரணம் கூட கேட்காமல் அம்மாவும் அழ ஆரம்பித்து விடுவாள்.

அடிக்கடி அழுததால்...

கஷ்டபடாமல் உடனே அழுது விடுவாள்...

என் விதவை தாய்...

(மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் அம்மாவை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு இது )

_தமிழ்க்கிறுக்கன், சென்னை.
(தமிழ்க்கிறுக்கனின் டைரிக் குறிப்பு)

www.thamizkkirukkan.blogspot.com

Saturday, February 25, 2012

"போலி"ஸ்!

"போலி"ஸ்!

ஒரு வழியாக வங்கி கொள்ளையர்களை சுட்டு காவல் துறை தன் "திறமையை" காட்டிக் கொண்டு விட்டது.

இரண்டு வங்கி கொள்ளை வரை தொடர்ந்த பிறகு டிவி,பத்திரிக்கைகளின் இலவச விளம்பரம் பார்த்து வாடகை விட்டு நே ர்மையாக பிழைப்பு நடத்துகிற ஆட்கள்...

போட்டு கொடுக்கிற ஆட்கள் இருக்கிற வரை இது மாதிரி பாராட்டுகளை காவல்துறை வெக்கமே இல்லாமல் ஏற்றுக் கொள்ளலாம்.

இனி தமிழ்நாட்டில் போலீசார் தலை நிமிர்ந்து (தொந்தி வைத்து) நடக்கலாம்.

கோடிக்கணக்கான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றன. பேசாமல் இதே மாதிரி என் கவுண்டர்களை நடத்தி நிறைய பிரச்னைகளுக்கு முற்று புள்ளி வைக்கலாம்.

தங்களின் "மாமூல்" வாழ்க்கை பெரிதாக பாதிக்க தான் செய்யும்.

அதற்கு தீர்வாக ஜெ அம்மாவே, அதிரடியாக சம்பளத்தை இரண்டு மடங்காக அறிவிக்கலாம்.

பத்தாயிரம் திருடு போனால் அதை கண்டுபிடித்து தந்தால் எட்டாயிரம் சம்பளம் என்பது மாதிரியான தகவல்களை போலீஸ் ஸ்டேனுக்குள்ளேயே தகவல் பலகை வைக்க உத்தரவு போட்டு, மக்களை மிரண்டு போக செய்யலாம்.

திருடனை பிடிக்காமல் விட்டால், போலீஸ் ஆசாமிகளை கேவலமாக பேசும் அதே பொது மக்கள் தான் எந்த விசாரணையும் செய்யாமல் சுட்டுக் கொன்று செத்தவர்களுக்காக மனித உரிமை பேசும்.

சட்டங்கள் பொதுமக்களுக்கு தான் என்று நாங்கள் மீறுவோம் என்று ஆட்டம் போடுகிற காவல்துறை...

அவர்கள் தான் குற்றவாளிகள் என்று சுட்ட பிறகு ஆதாரங்களை தேடுகிற, அல்லது நாடகமாடி, போலிஸ் கட்டுகிற அத்தனை கட்டுக் கதைகளையும் பரப்புகிற வேலையை பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளும் பார்த்துக் கொள்ளும்.

மீதி நேரமெல்லாம் ஊரை, நாட்டை கொள்ளையடிக்கிற சுவிஸ் பேங்கில் திருட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சல்யூட் அடித்து காவலுக்கு நிக்கும்.

போங்கடா நீங்களும்
உங்க ...

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

"திருடனுக்கு போலீஸ் வேலையாம்!"

"திருடனுக்கு போலீஸ் வேலையாம்!"

சென்னையில் ஒரே மாதத்திற்குள் இரண்டு வங்கிகளை ஹிந்திக்கார ஆசாமிகள் துப்பாக்கி காட்டி கொள்ளையடித்து விட்டதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.


சென்னையில் காவலாளி வேலையில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஹிந்திக்கார ஆசாமிகளே! குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் கவலாளியாக இருப்பவர்கள் வடமாநில ஹிந்தி ஆசாமிகளே!

சின்ன சின்ன திருட்டுகள் முதல் வங்கி கொள்ளை வரை வடமாநில ஆசாமிகளின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காவல்துறை தெரிவிக்கிறது.

இங்கு என்னடாவென்றால் சென்னையை காவல் காக்கும் அத்தனை ஆசாமிகளும் அநத வடமாநில ஆசாமிகளாகவே இருக்கிறார்கள்!

அதாவது திருடனுக்கு போலீஸ் வேலையாம்!

ஒவ்வொரு தனிமனிதனின் உடல் உறுப்பின் ஒன்றாக மொபைல், குறிப்பாக கேமரா மொபைல் போன்கள் எல்லோரின் பாக்கெட்களையும் ஆக்கிரமித்து வருகிறது.

கொள்ளை போன இரண்டு அரசு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லையாம்.

அதைவிட பெரிய காமெடி சென்னை முழுவதும் 400 வங்கிகளில் கேமரா வசதி இல்லையாம்.

ஒரு மாதத்திற்குள் கேமரா பொருத்த வேண்டும் என்று காலக்கெடு விதித்திருக்கிறதாம்,காவற்துறை.

உடனே முடியாதாம், ஒரு மாதம் வேண்டுமாம். காலக் கொடுமை தான் போங்கள்!

இது மாதிரி அரசு நிறுவனங்கள் செயல்பட்டால் நஷ்டத்தில் தானே இயங்க வேண்டி வரும்?

இதையெல்லாம் கேக்க நாதியில்லை!

அதை எல்லாம் செய்யாமல், தமிழ்நாட்டு புரட்சித் தலைவியோ
பேருந்து கட்டணத்தை இரு மடங்காக்கினால் தமிழ்நாட்டில் எல்லா பிரச்னைகளும் சரியாகி விடும் என்று யாருக்கும் தோன்றாத வழியை கண்டுபிடிக்கிறார்.

வெண்தாடி பெரியார் இந்தி இங்கே நுழையக்கூடாது என்று தார்ச் சட்டியை கையில் பிடித்த போது...

இந்தி தெரிந்திருந்தால் இந்தியா முழுவதும் போய் பிச்சை எடுப்போம் என்ற தீச்சட்டி கோவிந்தன்கள் இனி என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரிய வில்லை.

மீண்டும் ஒரு முறை பெரியார் ஜெயித்திருக்கிறார். வேறு என்ன சொல்ல?

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, February 20, 2012

"நெல்லிக்காய் காதல்!"

"நெல்லிக்காய் காதல்!"

எனக்கு காதல் எல்லாம் இப்ப பிடிக்கிறதே இல்லீங்க.

பொண்ணு பாக்கிற மாதிரி,மாப்பிள்ள பாக்கிற மாதிரி ஆணோ, பெண்ணோ பல பேரோட பழகி, அப்புறமா தான் என் காதல தன் காதலன்/லிக்கு காட்டுவேங்கிறதுக்கு பேர் எப்படி காதலா இருக்க முடியும்?

எதையும் வியாபார கண்ணோடத்தோடு பாக்கிற காதலர்களின் காதல்...

பிணம், இன்னொரு பிணத்த தழுவிற மாதிரி அருவெருப்பானது.

ஆண், பெண் என்கிற இனக் கவர்ச்சியில் வர்ற காதல் கூட எல்லாம் முடிந்த பிறகு கசக்கவே செய்யும்.

பணம்,பதவி, அந்தஸ்து,சாதி,மதம்,படிப்பு எதையும் பாக்காம வர்ற அறிவான, முட்டாள்தன மான காதலுக்கே என் வோட்டு. மத்த போலித்தனமான காதலுக்கு வையுங்கடா பெரிசா வேட்டு!

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, February 18, 2012

ஏன்டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

ஏன்டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

(தமிழ்க்கிறுக்கனின் டைரிக் குறிப்புகள்.)

இன்றிரவு ரேடியோ மிர்ச்சி என்ற அழகு தமிழில் பெயர் வைத்த Fm வானொலியில் நடிகர் சத்யன் என்ற காமெடியன் நம்ம ராஜாசார் பத்தி , அதாங்கங்க இசை இளையராஜா பத்தி ஒரு பேட்டி வந்து கொண்டிருந்தது. நம்ம காமெடி சத்யனின் பேச்சு கேட்டு சட்டென்று சிரித்துவிட்டேன்.

நம்ம ராசா சாரை முதன்முதலாக பார்த்த போது திருப்பதி வெங்கடாசலபதியே நேர்லயே பாத்ததது மாதிரி இருந்ததாம்.

அந்த திருப்பதி வெங்கியே எவனையும் பாக்கமாட்டேன் போங்கடா லட்டு உருண்ட தலையனுங்களா ன்னு கண்ணக் கட்டி கம்முன்னு உக்காந்து கெடக்கிறாரு.

அந்த வெங்கிய எவன் பாத்தான்.ஆனா நம்ம சத்யன் ராசா சாரா பாக்கிறத்துக்கு முன்னாடியே நம்ம வெங்கிய பாத்திருக்கிறார். இந்த பாக்யம் யாருக்கு கெடக்கும். அதனால தான் வெங்கிய பாத்த மாதிரின்னு வார்த்த விட்டு வாயாடுறாரு...
ஏன் டா இப்படி காமெடி பண்ணி கொல்றீங்க?

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Friday, February 3, 2012

எரிமலை எப்படி பொறுக்கும்? Mp3

எரிமலை எப்படி பொறுக்கும்? Mp3
(படம்: சிவப்புமல்லி
)

http://www.tamilmini.net/downloads/Tamil_Mp3/file.php?p=0&file=load/A_To_Z/S/Sivappu_Malli/Yrimali_Yappadi_Porukum_Tamilmini_Net.mp3&sort=0


"பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை. அச்சம் என்பதில்லையே" mp3

பாரதியார் பாடல்
(படம்: ஏழாவது மனிதன்)


dc107.4shared.com/img/300927588/edb96615/dlink__2Fdownload_2F300927588_2Fedb96615_3Ftsid_3D00000000-000000-00000000/preview.mp3


குறிப்பு:
இந்த இரண்டு பாடல்களையும் அந்த அந்த இணையதள முகவரியை தேர்வு செய்து மொபைலில் நேரடியாகவும் டவுன்லோட் செய்யலாம்.

_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...