தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, January 26, 2013

"இன்னொரு தேசிய கீதம்"

யாரோ சட்டையில் குத்திய நம் இந்தியக் கொடி தரையில் கிடந்தது.

கொடியோடு மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருந்த குண்டூசி யார் காலிலாவது குத்தி விடப் போகிறது என்று என் ஷீ காலால் ஆட்கள் நடமாட்டமில்லதா பக்கமாக தள்ளி விட்டேன்.

அது நம் தேசியக் கொடி அதை ஷீ கலால் மிதித்து அவமதிக்கிறோம் என்ற உணர்வு அப்போது வரவே இல்லை.

அதை எதிர்பாராமல் பாத்து விட்ட ஒரு மிலிட்டரி சர்வீஸ் பெருசு என்னை நோக்கி கோபமாக வந்த போது தான் எனக்கே புரிந்தது.

இந்தியா மீதோ இந்திய கொடியின் மீதோ எனக்கு பெரியார் காலத்திலிருந்தே
மதிப்பும் மரியாதை வந்ததில்லை.
இலங்கை பக்கம் மீன் பிடிக்க போனவன் செத்து கருவாடாய் கரை ஒதுங்கிறான்.

ஆந்திராவில் லட்டை காட்டி உண்டியலில் கல்லா கட்டுகிறான்,தெலுங்கன்...

அய்யப்பன் சீசன் வசூல், பெரியார் அணை என்று கேரள மலையாளியும்...

காவிரி நீர் விடச் சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை காமெடி கலாட்டாவாக நினைக்கும் கன்னடன்...

அத்தனை பேரையும் இந்தியன் என்ற வார்த்தைக்குள் அடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com

"தமிழ்க்கிறு@க்கன் !"

என் கைப்பேசியில் மெனு உட்பட எல்லாமே தமிழில் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்ட நண்பன் கேட்டான்.

உங்களுக்கு தமிழ் மீது அவ்வளவு பற்றா?

தமிழன் தமிழ் மீது பற்று வைக்காமல் வேறு எந்த மொழி மீது பற்று வைக்க வேண்டும் நீயே சொல் நண்பா, எனக்கு தெரியல என்றேன்.

இது மாதிரி பதில் வரும் என்பதை அவன் எதிர்பார்க்கவே வில்லை.

என்னை இந்தியா எவ்வளவு கேவலமாக நடத்தினாலும், நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன்!


ஜெய்ஹிந்த்!

_தமிழ்க்கிறு@கன்

www.தமிழ்க்கிறுக்கன்.blogspot.com

Sunday, January 20, 2013

மரந்தான், மறந்தான்!

மரந்தான், மறந்தான்!

திருமண வீட்டில் மொய் செய்தவர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

வீட்டில் பலா மரம் நட்டால், நட்டவர் இறந்து போவார். வீட்டில் பலா மரம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள் என்று நொந்தபடி புலம்பினார் நண்பர்.

எனக்கு இது என்னடா புதுக்கதையாக இருக்கிறது, என்று தோன்றியது.

எந்த மரம் நட்டாலும் சாவு மனிதனுக்கு வருவது இயற்கையானது இல்லையா?

வளர்க்க கூடாது என்றவர்களுக்கு காரணம் சொல்ல தெரியவில்லை.

எனக்கு என்ன சந்தேகம் என்றால்...

மனிதன் சுவாசிக்க தேவையான காற்றை சுத்தப் படுத்தும் மரம், செடி,கொடிகளை நடாமல் விட்டால் தானே மனிதனின் வாழ்நாள் குறுகிப் போகும்?

_தமிழ்க்கிறு@கன்சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Tuesday, January 15, 2013

வாழ்த்துக்கள்!

எருமை தமிழனுக்கு மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!
_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, January 14, 2013

"ஹேப்பி பொங்கல்!"

தண்ணீர் வரவில்லை
காவிரி விவசாய தமிழன்
சாப்ட்வேர் கம்பெனியில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறான்.

எவ்வளவு கேவலங்களை செய்தாலும்
மன்னிக்கும் கடவுளின் பெயரால்
தினம் தினம் நடக்கும் அசிங்கங்கள்...

கோணலா இருந்தாலும் என்னதாக்கும்

எது உன்னதோ
அது என்னது
என்று விளம்பரம்
வரும் தொலைக்காட்சிகள் கற்பை பற்றி கவலைப் படும்...

சுண்டல் பொட்டலம் மட்டும் கட்ட பயன்படும் பத்திரிக்கைகள்...

பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத சாப்ட்வேர்
கம்பெனி நாய்கள்!

விளைநிலங்கள் வீட்டுமாடிகளாக உயர்ந்த பின்பும்

இன்னும் மிச்சம்
இருக்கிறது

"ஹேப்பி பொங்கல்!"

பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கிறு@கன்.
www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...