தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Thursday, February 28, 2013

"எலவச கம்பிரூட்டரும் , எரும மாடும்! "

எலவச கம்பிரூட்டரும் , எரும மாடும்! "

பிப்ரவரி 24, திரும்பிய பக்கமெல்லாம் ஒரு பூதம் பயமுறத்தியபடி போஸ் கொடுக்க...

உம்மை வாழ்த்த வயதில்லை வணங்கிறோம்!

அதிமுக வில ஒருத்தன் கூடவா, ஜெ வை விட அதிகமா வயசுக்கு வரல?

கழக நிரந்தர பொதுச்செயலாளர் அம்மாவாம்.

அட பேடி பசங்களா...

நிரந்த வேல இல்லாம எத்தன கோடிபேரு, நாளைக்கு நிச்சயமில்லாத வாழ்க்கையோடு தூங்க போறவங்க எத்தன பேரு...

இந்த ஜனங்களுக்கு நிரந்த பொரச்சி தலைவி மட்டும் எதுக்காம்...?

அதிமுகவுக்கும் கலைஞரின் திமுகவும் என்ன வித்தியாசம்ன்னா...

ஒரே ஒரு வித்தியாசந்தாங்க.

கலைஞருக்கு பருத்திக் கொட்டை ரொம்ப பிடிச்சுப் போன...

ஜெயலலிதா அதிமுகவுக்கு பிடிச்சது புண்ணாக்கு !

கலைஞர் செய்யிற எதையும் குறை சொல்ற ஜெவும், ஜெவின் உம்மை விசுவாசிகளும் ஓயின்சாப் வருமானத்தை உசத்தி காட்டியதை பொகழ்ந்து ஒரு கட்அவுட் கூடவா வைக்க கூடாது?

அப்படி செஞ்சா அம்மா பேருக்கு அவப் பெயர் வந்து சேரம் என்றால்...

அந்த கேவலத்த ஏன் செய்யணும் கேவலங்களே!

குடிப்பவனால் , குடிக்காதவனுக்கும் கேடு வந்து சேருகிறதே...

அம்மாவுக்கும் புழு மேய்கிற ரேஷன் அரசி, மேய்த்து பொழைக்க ஆடு மாடுகள்,அப்பன் ஒயின்சாப் போய் டவுசர் கழண்டு கெடந்தால், பிணமாகவோ உயிருடனோ ஊர்வலம் போக இலவச ஆம்புலன்ஸ்...

இவ்வளவு கொடுமைக்கு அப்புறமா உசுரோட பிள்ள இருந்தா அவங்களுக்கு எலவாச மடிக்கணினி பரிசு...

முடியலைடா, சாமி!


_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, February 18, 2013

♥ மனிதன் ,சென்னை ♥

http://kaitogoestochina.info/wp-content/themes/china-red/images/freelife.php?hvewjxikb



,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,







,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

For years I wanted to be older, and now I am. (c) Margaret Atwood
♥ மனிதன் ,சென்னை ♥

Saturday, February 16, 2013

உங்கள் மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் பண்ண போறீங்களா?

உங்கள் மொபைல் எண்ணுக்கு ரீசார்ஜ் பண்ண போறீங்களா?

புல் டாக் டைம் ஆப்பர், பூஸ்டர் பேக் விலை விபரங்கள் எல்லாம் தெரிந்து கொள்ள கடைக்காரரிடம் போயா கேட்கப் போறீங்க?

மொபைல் பேசி நிறுவனங்களே நடத்துகிற சொந்த இணைய தளம் போய் தகவல்களை தேடி தெர்ந்தெடுங்கள்.

இணைய தள முகவரி சரியாக ஞாபகம் இல்லை.
வழக்கம் போல கூகுள் தளம் போய்...

உதாரணமாக ஏர்டெல் எண்ணுக்கான விபரங்களை தேட...

airtel online recharge

என்று தேடி தேர்ந்தெடுங்கள்.

ஏர்டெல் நிறுவனமே நடத்துகிற இணைய தளத்தை சரியாக தேர்ந்தெடுத்து விபரங்களை தேர்ந்தெடுங்கள்.

அனேகமாக எல்லா மொபைல் நிறுவன இணைய தளங்களும் உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்ய சொல்லும்.

வேறு இணைய தளங்களில் விபரங்களை தேட முயன்றால் அந்த தளம் காட்டும் விபரங்கள் பழையதாக, பொய்யானதாக கூட இருக்க கூடும்.

எல்லா மொபைல் நிறுவனங்களும் இரண்டு இணைய முகவரிகளை வைத்திருக்கிறன.
கணினி வழி திறக்க ஒன்று, மொபைல் வழியாக திறக்க இன்னொன்று.

வோடபோனின் கணினி முகவரி
www.vodafone.in

வோடபோனின் மொபைல் இணைய முகவரி
www.m.vodafone.in

_தமிழ்க் கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Wednesday, February 6, 2013

டைம் பாஸ் தமிழர்களுக்கு...!

அரசு பேருந்துகள் தனியார் பெட்ரோல் கிடங்குகளில் எரிபொருள் நிரப்புகின்றன.

பேசாமல் வருகிற சுதந்திர,குடியரசு தினங்களுக்கு வால்மார்ட் முதலாளியையோ, அல்லது இந்தியா நாட்டு மண்ணை கூட விற்று காசாக்கிய அம்பானி குடும்பத்து கொடுக்குகளை விட்டோ,இந்திய கேணையனை காதலித்த இத்தாலி பிச்சைக்காரி மாதிரி ஆட்களை தேடிப் பிடித்து இனி, தேசிய கொடிகளை ஏற்றச் சொல்லாம்.

பெட்ரோல்,டீசல் பொருட்களை மாதம் 50 பைசா விலையேற்றிக் கொள்ளலாம் என்றால்...

விலைவாசி அது பாட்டுக்கு கட்டுப்பாடு இல்லாமல் ஏறுகிறது என்றால்...

அத்தனை அரசியல்வாதிகளுக்கு சட்டசபை,பாராளுமன்றத்தில் என்ன வேலை?


தினம் தினம் விலைவாசி ஏறினால் நமக்கென,தங்கம் இவ்வளவு விலை ஏறலாமா என்று பயங்கரமா கவலைப்படும் தமிழர்கள்...

எதை பற்றியும் கவலை படாத கேவலமான சூடு சொரணையற்ற வாழ்க்கை வாழ்ந்தாலும், சாப்பிடுகிற சாப்பாடு மசாலா கலந்து சூடு சொரணையோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிற...

எது இலவசம் என்றாலும் அதை தன் பிறவிக் கடமையாக நினைத்து நாய்ப் பாய்ச்சலில வாங்க முந்தும் மானங்கெட்ட திண்ணித் தமிழர்களுக்கு...

தமிழனை எதை செய்தாவது, உசத்தி விடுவதே தங்களின் வாழ்நாள் லச்சியம் என்று ரூம் போட்டு சிந்திச்சு வெளி வரும் டைம் பாஸ் வார இதழ்களான குங்குமமும், குமுதமும் வாங்கினால், சாம்பார் பொடி பாக்கெட் இலவசமாம்.

இலவச சாம்பார் பாக்கெட்டுடன் குமுதமும்,குங்குமும் வாங்க மளிகை கடைக்கு போக வேண்டாம்.

செய்ததாட்கள் விக்கிற பெட்டிகளில் கிடைக்கின்றன.

சப்புக் கொட்டித் தூள் கெளப்புங்கள்

இப்படிக்கு இளிச்ச வாய்த் தமிழன்...

_தமிழ்க்கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com

"இவன் பாரதீ...!"

விஸ்வரூபம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடந்த கதைக்கு இங்கிருக்கிற முஸ்லீம்கள் அதிமுக அரசின் ஆதரவோடு தியேட்டர்களில் குண்டு வைப்போம் என்கிற பேச்சு என்ன பேச்சாம்?

மதவாத தீவிரவாதிகள், மிதவாதிகள் இல்லாமல் இயங்க முடியுமா?
_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

"இவன் பாரதீ...!"

விஸ்வரூபம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், அமெரிக்காவிலும் நடந்த கதைக்கு இங்கிருக்கிற முஸ்லீம்கள் அதிமுக அரசின் ஆதரவோடு தியேட்டர்களில் குண்டு வைப்போம் என்கிற பேச்சு என்ன பேச்சாம்?

மதவாத தீவிரவாதிகள், மிதவாதிகள் இல்லாமல் இயங்க முடியுமா?
_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Monday, February 4, 2013

"கமல் கடவுள்!"

"கமல் கடவுள்!"

விஸ்வரூம் படம் பார்ப்பத்தில் இருந்த அதே ஆர்வம் எப்படியும் (நீக்கப்பட்ட) வெட்டப் பட்ட காட்சிகள் விரைவில் இணையத்தில் வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.
விஸ்வரூபத்தில் காட்டப்பட்டதை விட கொடூரமான முஸ்லீமகளின் வன்முறை வீடியோ படங்களை இணையத்தில் நிறைய காணக் கிடைக்கின்றன.

கமல் நாத்திகன்,கமலின் கோபம் சரியானதாக தான் இருக்கும்.

பக்குவப்பட்ட கலைஞன்,அவன்.

கமலின் காட்சிகள் வலிக்கிறது என்றால்...

கமலின் மொழியில் சொன்னால் முத அவனுங்கள,நிறுத்தச் சொல்லுங்க! அப்புறம் நாங்க நிறுத்துறோம்!!

_தமிழ்க்கிறுக்கன்.
www.thamizkkirukkan.blogspot.com

Saturday, February 2, 2013

"கள்ளக் காதல் செய்வது எப்படி?"

அவனுக்கு இரு மனைவிகள்.

அந்த ஒவ்வொரு மனைவிக்கும் முறையே இரண்டு, இரண்டு கணவன்கள்.

கள்ளக் காதல் இல்லாமல் தொலைக்காட்சித் தொடரா?

அதுவும் உண்டு.

அதில் ஒரு மனைவி வேறு ஒருவனோடு கூடி கள்ளத்தனமாக குழந்தை பெற்றுக் கொள்கிறாள்.

பழைய குடும்ப பகைக்கு பழி வாங்க கிளம்பிய புரட்சிப் பெண் ஒருத்தி தன் கற்யை ஆயதமாக்கி, அதை வைத்து பொய்யாக நடித்து தன்னை கெடுக்க முயற்சித்தான் என்று சிறையில் தள்ளுகிறாள், கதாநாயகனை...

ஆனால் அவனுக்கு ஆண்மைக் குறைவு, குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற சேதி அவனுக்கே தெரியாது...

இப்படி போகிறது தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்று. இந்த அழுக்கு மூட்டையை தினமும் இரவு ஏழு முதல் எட்டுவரை சனி,ஞாயிறு தவிர வாரத்தின் அய்ந்து நாட்கள் என மூன்று வருடங்களாக ஒலி பரப்புகிறது, ராஜ் டிவி.

அந்த கதாபாத்திரங்கள் பேரன், பேத்தி எடுக்கிறார்களோ இல்லையோ தெரியாது.

அந்த தொடரை பார்க்கிற பார்வையாளர்கள் குழந்தை பெற்று பேரன், பெயர்த்தி எடுத்து விடுவார்கள்.

அவ்வளவு நீளமாய் தொடர்கிறது.

இந்த நாத்தம் பிடித்த வேற்றுமொழி டப்பிங் தொடரை பகலிலும் மறு ஒலிபரப்பு வேறு செய்கிறது, அதே டிவி.

பெண்களுக்கு பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று

_தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

Friday, February 1, 2013

"ஒரு கிராமத்தானும், கமலும்...!"

"ஒரு கிராமத்தானும், கமலும்...!"

உன் மொத்த சொத்த அடவு வைச்சு, நீ எடுத்த விஸ்வரூபம் பொறுக்காம தடை பண்ணுனத பத்தி நீ அழாம சொன்ன "நாட்டை விட்டே வெளியேறுவேன்னு" ன்கிறத கேட்டு அழது அழுதே பாறையா காஞ்சு போன நான் கூட அதிசயமா நெசமாலுமே அழுதுட்டேன் டா, கமலு... !

நாட்ல அத்தன பேரும் தீவிரவாதி தான் கமலு, மனுசன பத்தி கவல படாம, மதத்துக்காக கத்தி பிடிச்சு இரத்தம் கேக்கிறவன மட்டுமில்ல கமலு, எத பத்தியும் கவலைப் படாத அத்தன பேரும் தீவிரவாதி தான்!

மதச்சார்பற்ற நாடு போய் குடியேறுவேன்னு சொன்ன , அப்படி எதுவும் இல்ல கமலு, இந்த உலகம் முட்டாளுங்களுக்கு சொந்தமானது.



என்ன மாதிரி அப்பாவிக்கும், உன்ன மாதிரி நல்ல மனுசனுக்கும் இங்க இடமில்லடா, பாவி!

கோடாம்பாக்கத்து கோமாளிங்க இருக்கிற இடத்தில நீ, பாரதிராசா,வைரமுத்து தம்பி, இளயராசா மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் சினிமா மேல கொஞ்சம் மரியாதி இருந்துச்சு, கமலு.

ஒருத்தன் விபத்தில அடிபட்டு கெடந்தா, அம்புலன்ஸ்காரன் வர்றதுக்கு முன்னாடி டிவிக்காரன் காமிரப் பொட்டியோட முத வந்திரான்.

மனுசன காப்பத்தறவன் அப்புறம தான் வர்றான். விஞ்ஞான வளர்ச்சி மனுசன அழிக்க அப்படி முன்னுக்க வந்து நிக்குது.

ரேசன் கடைக்கு போயிருக்கியா, கமலு.
ஒரு நாள் முழுசும் கால் கடுக்க, கால் வலிய விட மனசு வலிக்க நின்னா அரிசி ஸ்டாக் இல்ல, திரும்ப எப்ப வரும்ன்னு சொல்லவெல்லாம் முடியாது எப்ப வருமோ அப்ப வந்து வாங்குங்க ன்னு புழுத்த அரிசிக் கடைக் காரன் சொல்வான் பாரு.

அப்ப நான் நெனப்பேன் இது வாழத் தகுதி இல்லாத நாடுன்னு..
வாழவே பிடிக்காத எனக்கும் சின்ன நப்பாசை, ஈழத் தம்பி பிரபாகரன் மாதிரி நெயாயம் செயிக்க தூப்பாக்கி பிடிக்கிறவன் வாழ்ற பூமியில நாமலும் வாழ்றோம்ங்கிற பெருமை இருந்துச்சு.

அந்த தம்பி செத்துப் போச்சுங்கிறத இந்த நெஞ்சு நம்ப மறுக்குது, கமலு.


சேத்தை பூசி ன விவாசாயி, கரன்சி காகிதால செய்த மனுசன் முன்னாடி தற்கொலை செஞ்ச செத்தே போய்ட்டான்,கமலு

வெவசாயம் பத்தி கவலைப்படாத
அத்தன பயலுகளும் பசிக்கு எத திம்பான், பச்ச மலத்தையா?

பிள்ளைகளின் உதவியை எதிர்பார்க்காமல் கடைசி நொடி வரை உழைத்தே முடிந்து போன விதவை தாயை எனக்கு தெரியும்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்...

தீபாவளி,பொங்கல் போனஸ்,நிரத்தரமான வருவாய் எல்லாம் இருந்தும், எல்லோரிடமும் லஞ்சம் வாங்க கையேந்துகிற அரசு ஊழியர்கள் எல்லோரையும் நிக்க வைத்து...

கொசு தோற்றம் வரும்படியான சீருடைகளை எல்லா அரசு ஊழியர்களுக்கு வழங்கி கவுரவப் படுத்தலாம்.

போதும் என் சோகம் உன்ன தாக்கி...

கடைசியா ஒன்னே சொல்லிப்பிட்டு என் பொழப்ப் பாக்கப் போறேன்.

உன் வாயாலேயே வந்துருச்சு "நான் சினிமா பாரதி!"ன்னு...

அந்த பாரதிய யானை மிதிச்சப்ப கூட யானைய மேல கோபப் படல. அதுக்கான காரணத்து மேல தான் கோபப் பட்டான்.

அந்த மாதிரி யே உன் கோபம் இருக்கட்டும். மத யானை மேல கோபம் வேண்டாம்.

அம்மணமா இருக்கிற நாட்ல,

நீ வேட்டி கட்டி மனுசனவே இரு. அப்பதான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் வித்தியாசம் தெரியும்.

நாடு விட்டு நாடு போனா மட்டும் என்ன பெரிசா மாத்தம் நடந்திர போகுது.

இவிங்களே உன்னை இன்னும் புரிஞ்சிக்கல...

அம்புட்டுதேன்!

முடிஞ்சா அடுத்த கடிதத்தில சந்திப்போம்.

இப்படிக்கு
பொறம்போக்கு நெலத்தில வீட்ட கட்டி அதில வாடகைக்கு இருக்கிற...

_கிராமத்தான்.
(தமிழ்க்கிறுக்கன்)

www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...