தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Friday, June 10, 2011

"இமெயில் அய்டியை மாற்றியவள்...!"

திருச்சி..

அவள் என்னை பிடிக்க வில்லை என்பதற்கு சொன்ன காரணத்தைக் கேட்டு என்னால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சாமுராய் படத்தில் விக்ரம் நடித்த தியாகு கதாபாத்திரம் தான் நீ! என்றாள்

உனக்கு குடும்பம் எல்லாம் முக்கியம் கெடையாது. இலட்சியம் தான் உனக்கு முக்கியம் நீ வெறி பிடித்தவன். தீவிரவாதி!

அழுதபடி சொன்னாள்.நானும் சப்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தேன்.கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"மூங்கில்காடுகளே" பாடலை என் கைப்பேசி எண்ணுக்கு அழைத்தால்,அழைப்பவருக்கு கேட்கும்படியாக வைத்திருந்தேன்.

இந்த பாடல் தான் அவளை அப்படி நினைக்க வைத்தது என்று அவளே சொன்னாள். என் குணங்களும் அந்த காதபாத்திரத்தோடு ஒத்துப் போவதாகச் சொன்னாள்.

என்னை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தால், எத்தனை எதிர்ப்பு வந்திருந்தாலும், உடைத்து அவளை கைப் பிடித்திருப்பேன்.

நமக்கு பிடித்தவர்கள், நம்மை பிடித்துப் போனதாக சொன்னவர்கள். நம்மை புறகணிக்கும் போது , என்னால் வலியை தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

சென்னைக்கு பஸ் ஏறும்போது அழுதபடி இப்படி முடிவெடுத்தேன்.

திருமணமே இனிமேல் செய்து கொள்ளக் கூடாது, என்று.

பஸ்ஸை விட்டிறங்கிய போது பிணமாக வீடு போய் சேர்ந்தேன்.

கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவளிடமிருந்து sms வந்திருந்தது. என் இமெயில் அய்டியை என் மொபைல் எண்ணையும் மாற்றப் போகிறேன்.ப்ளீஸ் இனி என்னை தொந்தரவு செய்யாதே! என்று

சொன்னது மாதிரியே மாற்றியிருந்தாள்.



அதற்கு பிறகு என் இமெயில் அய்டி பாஸ்வேர்ட் திருடப்பட்டபிறகும் கூட கஷ்டப் பட்டு கண்டுபிடித்து அதே இமெயில் அய்டியையும், மொபைல் எண்ணையும் நான் மாற்றவே இல்லை.

அம்மா திருமண பேச்சை ஆரம்பித்தாள்.

அம்மா, எனக்கு மூளையில பிரச்னை. இந்த நோய் வந்தவர்கள் எவ்வளவு தான் வைத்தியம் பாத்தாலும் சின்ன வயசிலே செத்துப் போவாங்களாம்.

இப்ப என் ஆசையெல்லாம் உனக்கு முன்னால, நான் செத்துப் போகணும் என்றேன்.

அம்மா வாய் பொத்தி மவுனமாக அழுதாள்...

அதற்கு பிறகு திருமண பேச்சே எடுக்க வில்லை.


_தமிழ்க்கிறுக்கன்.


"வேடிக்கையாகவே கேலிகள், பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்...!"

பேஸ் புக் குழுவில் இணைய...

www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=7

நன்றி!

1 comment:

  1. "வேடிக்கையாகவே கேலிகள், பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்...!"

    ReplyDelete

என்னைப் பற்றி ...