தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, February 2, 2013

"கள்ளக் காதல் செய்வது எப்படி?"

அவனுக்கு இரு மனைவிகள்.

அந்த ஒவ்வொரு மனைவிக்கும் முறையே இரண்டு, இரண்டு கணவன்கள்.

கள்ளக் காதல் இல்லாமல் தொலைக்காட்சித் தொடரா?

அதுவும் உண்டு.

அதில் ஒரு மனைவி வேறு ஒருவனோடு கூடி கள்ளத்தனமாக குழந்தை பெற்றுக் கொள்கிறாள்.

பழைய குடும்ப பகைக்கு பழி வாங்க கிளம்பிய புரட்சிப் பெண் ஒருத்தி தன் கற்யை ஆயதமாக்கி, அதை வைத்து பொய்யாக நடித்து தன்னை கெடுக்க முயற்சித்தான் என்று சிறையில் தள்ளுகிறாள், கதாநாயகனை...

ஆனால் அவனுக்கு ஆண்மைக் குறைவு, குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிற சேதி அவனுக்கே தெரியாது...

இப்படி போகிறது தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்று. இந்த அழுக்கு மூட்டையை தினமும் இரவு ஏழு முதல் எட்டுவரை சனி,ஞாயிறு தவிர வாரத்தின் அய்ந்து நாட்கள் என மூன்று வருடங்களாக ஒலி பரப்புகிறது, ராஜ் டிவி.

அந்த கதாபாத்திரங்கள் பேரன், பேத்தி எடுக்கிறார்களோ இல்லையோ தெரியாது.

அந்த தொடரை பார்க்கிற பார்வையாளர்கள் குழந்தை பெற்று பேரன், பெயர்த்தி எடுத்து விடுவார்கள்.

அவ்வளவு நீளமாய் தொடர்கிறது.

இந்த நாத்தம் பிடித்த வேற்றுமொழி டப்பிங் தொடரை பகலிலும் மறு ஒலிபரப்பு வேறு செய்கிறது, அதே டிவி.

பெண்களுக்கு பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று

_தமிழ்க்கிறுக்கன்

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...