தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Sunday, April 24, 2011

கோவில் வரி

எல்லாம்
துறந்தவன்

என்று காட்டிக் கொண்டால் போதும்

பிறகு
எல்லாம் இன்பமயந்தான்!

நீயே
உயிர்களை ஆக்கலாம்
அழிக்கலாம்...

கொலை, கற்பழிப்புக்காக
போலீஸ் பிடிக்காதவரை...

பணக்காரச் சாமியாக
இருந்தாலும்
உண்டியலில் காணிக்கை
நிச்சயம் போடுவான்...

கடவுள் பெரியவனா?
கடவுளுக்கே காணிக்கை போட்டவன் பெரியவனா?

கடவுள் பக்தனுக்கு
எல்லாம் வழங்குகிறனா
தெரியவில்லை!

ஆனால்
கடவுளை காட்டி
பிழைப்பு நடத்துகிறவனுக்கு...

கடவுள் சிலையை
விற்றாவது...

எல்லாம் கிடைத்தது
விடுகிறது..!

உழைக்கத் தெரிந்தவன்...
பூமியில்
ஏயக்கத் தெரிந்தவனுக்கு...!

பிறவிக்கவிஞன்
_"தமிழ்க்கிறுக்கன் "

Thursday, April 21, 2011

மேட் இன் ஊழல் இந்தியா

தேர்தல் கமிஷன் கிழித்த கிழி...!

இந்த முறை தேர்தல் கமிஷன் மிக மிக சிறப்பாக செயல்பட்டதாக மக்களால் பாராட்டப் படுகிறது.

முதலில் வாக்காளருக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை பற்ற கொஞ்சம்ி பார்ப்போம்.

தேர்தலில் வெற்றி பெற்று கொள்ளையடித்த பணத்தை ஒவ்வொரு வாக்காளனுக்கும் பங்கு வைத்தால், குறைந்தது ரூபாய் 56,000 தரலாம் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

இந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்கு போடச் சொல்லி, பணத்தை (டாஸ்மாக்)தண்ணீராக செலவழித்தாகவும், இந்த முறை எப்படியும் அதிமுக தான் ஜெயிக்க போகிறது அப்புறம் எதுக்கு ஓட்டு போட பணம் தரணும் என்று தொலை நோக்கு பார்வையை கையில் எடுத்த அதிமுக கொள்ளையர் கூட்டம், கட்சி வழங்கிய பணத்தை தானே அமுக்கி, மேலும், கீழுமாக சத்தமாக காற்றுப் போக ஏப்பம் விட்டது தான் மிச்சம்.


எங்களுக்கெல்லாம் பணம் தரவே இல்லை ஏன்? என்று பொதுமக்கள் அதிமுக வை சேர்ந்த தேசத் தியாகிகளை கேட்ட போது போலீஸ் கெடுபிடி அதிகமா போச்சு. கையில வீடியோ கேமராவோட அலையுறானுங்க. என்று பொறுப்பாக பதில் சொல்லி தப்பித்துக் கொண்டார்கள்.

மக்களிடம் கொள்ளையடித்த பணம், மக்களிடமே போய் சேராமல், நேர்மையாக செயல்படுகிறோம்என்ற பெயரில் நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, கொள்ளையடித்த மக்கள் பணம் மக்களிடமே போய் சேராமல் பத்திரமாக பார்த்துக் கொண்டது, தேர்தல் கமிஷன்.

என்ன ஒரு கடமையுணர்வு


விபச்சாரி, கூவி கூவி விபச்சாரத்திற்கு அழைப்பதைப் போல...

எல்லா கட்சிகளும், நீங்கள் எங்களுக்கு ஓட்டு போட்டால், நாங்கள் அதற்கு இலஞ்சமாக அதை தருவோம், இதை தருவோம் என்று கட்சிக்காரன் பச்சையாக, ஊழல் ஆட்சி அமைக்க நீங்கள் உதவினால் இலஞ்சம் நிச்சயம் என்று பொது இடத்தில் நின்று கொண்டு கொஞ்சம் கூட கூச்சம், பயம், வெக்கமே இல்லாமல், மைக் கட்டி கூவுகிறான்...

இது பற்றி எல்லாம் ஒரு சின்ன எதிர்ப்பை கூட காட்ட வில்லை.

தேர்தல் கமிஷனே! நீ வாய் திறக்க மாட்டாய், ஏன் என்றால் நீ மேட் இன் ஊழல் இந்தியா!


குடிகாரனை கேலி செய்கிறான், அதுவும்,
சாராயம் காய்ச்சி விற்ற காசில் அமைத்த மேடையில் நின்று...

சாராயக்கடை முதல்வருக்கு ஆதரவாக பேசுகிறானாம்...

கால்கள் வழியே மூத்திரம் பேய்வது நகைச்சுவை நடிப்பாம்.

அதுவும்...

எதிரியின் மேடையில் எம்ஜிஆர் பாடலை பாடி பேச்சை ஆரம்பிக்கிறான்

அவனை கூப்பிட்டு பிரச்சாரம் செய்கிறது...

கழுதை தேய்ந்து வடிவேலானது திமுக...

உலக பணக்காரன்களில் முதல் பத்து பேரும் அமெரிக்கனாக தான் இருப்பான்.

அந்த அமெரிக்காவே அரண்டு போச்சே வாழும் திருவள்ளுவர் கலைஞர் ஊழல் ராசா ஆட்சீயை பாத்து...

குடும்ப கட்டுப்பாடு செய்யாமல் போனால் எவ்வளவு கேடு நாட்டுக்கு வரும் கலைஞரின் கழக குடும்பத்தை பார்த்தல்லவா, மிரண்டு போகிறது, தமிழ்நாடு!

அப்பன் ஆட்சியில் இருந்தால் அழகிரிக்கு... அதாங்க, ரவுடிக்கு போலீஸ் பாதுகாப்பாம்.

இதென்ன மதுரைக்கு வந்த சோதனை?

ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி தந்தால், தனக்கு தமிழ்நாட்டில் பிரதமர் பதவி ஒன்றை உருவாக்கி தந்தால் தான் ஸ்டாலினை முதல்வராக்க விடுவேன். எனக்கு தமிழ்நாட்டு பிரதமர் பதவி கிடைக்காத வரை எவனும் முதல்வராகி விட முடியாது என்று சவாலே விட்டிருக்கிறாராமே எந்த கேடு கெட்ட பழி பாவத்திற்கும் அஞ்சாத அஞ்சா நெஞ்சன் அழகிரி...

ஜெயலலிதா வந்தால் நாட்டுக்கு என்னத்தை கிழித்து விடப் போகிறார் ?

தனக்கு பிள்ளையே இல்லை என்று புருஷன் வயசுக்கார சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தது, குடும்பமே இல்லையா கவலை விடு, ஒரு (சசிக்கலா)குடும்பத்தையே தத்தெடுத்துக்கோ என்ற பொரச்சி தெய்வம் மட்டும் என்னத்தை கிழித்து விடும்?

பட்டினி சாவு நிகழ்கிற தேசத்தில் முதல்வர்களின் சொத்து இலட்சக் கணக்கிலும், முதல்வர்களின் மனைவி"கள்" சொத்துக் கணக்கு கோடிகளிலும் காட்டப்படுகிறது.

தெரு விளக்கு எரியாததற்கும், குழாயில் குடிநீர் வராததற்கும், மோசமான சாலை, எந்த அடிப்படை வசதி கேட்டும் போராடாத மக்கள்...

வெற்றுக் காலிக் குடங்களோடு சாலை மறியலில் ஈடுட்டார்களாம்.
விசாரித்தால் "எங்களுக்கு ஓட்டுப் போட வழங்கிய பணத்தை, அந்த கட்சியை சேர்ந்தவர்களே, அமுக்கிட்டாங்க, அதான் நியாயம் கேட்டு போராடுறோம் " என்றார்கள்.

இது மாதிரியான மனநிலையில் மக்கள் இருக்கும் வரை, வெறும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் நாடு உருப்பட போவதில்லை.

கோபமும்,கவலையுடன்...

"_தமிழ்க்கிறுக்கன்."

Tuesday, April 19, 2011

கவிதைக் கிறுக்கன்!

இரு கைகளையும் கூப்பிக்குக் கொண்டு ஓட்டுக் கேட்ட அரசியல்வாதிகளை பார்த்ததும்...

நம் பிறவிக் கவிஞன் தமிழ்க்கிறுக்கனை, அந்த அந்த கூப்பிய கைகளுக்குள் மறைந்து கிடந்த கவிதை ஒன்று , அவனை இரவும் பகலுமாக படாய் படுத்த...

இதோ குளிக்கும்போது கூட வியர்க்கிற இந்த வெயில் காலத்தில், உங்களை புல்லரிக்க வைக்கும் அந்த கவிதை

இதோ...

இரு கைகளையும் கூப்பி

பிச்சைக்காரனே

இலவச, இலஞ்ச பிச்சை போட்டான்...!

வோட்டுப் பிச்சை!

_பிறவிக் கவிஞன்

"தமிழ்க் கிறுக்கன்"


♥ நட்பூ
www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

Monday, April 4, 2011

"அப்பாவின் காதல்....!"


காதலிக்கும் போது அவள் பெயரை, அவன் கையில் பச்சை குத்தியிருந்தான்..!
காதல் தோல்வியில் முடிந்தது...!

அவனின் கையைப் பார்த்து விட்டு, அவன் மகள் கேட்டாள்.

"என்னை அவ்வளவு லவ் பண்றியப்பா?"





♥ நட்பூ
www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

என்னைப் பற்றி ...