சென்னை, தாம்பரத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான பிஸ்கெட், சாக்லெட், குளிர்பானங்கள், உணவு பொருட்கள் என சர்க்கரை நோயாளிகளை மட்டும் நம்பி ஒரு கடையை திறந்திருக்கிறார்கள்.
எனக்கு ஆச்சரியமாக தெரியவில்லை.
இந்தியாவில் இனி அரசே நடத்தும் சாராயக்கடைகள் போல தெரு தெருவுக்கு பொதுக் கழிப்பிடங்கள் இருக்கிறதோ, இல்லையோ கோவில்களை கட்டியிருக்கிறார்கள், அல்வா? அல்லவா? (இணைய தமிழ் படித்து படித்து, இதோ என் தமிழும் நொண்டியடிக்கிறது, போங்கள்!)
அதை போல இந்தியாவில் நிறைய சர்க்கரை நோயாளிக்களுக்கென புதுப் புது தினசுசாக கடைகள் திறந்த பிஸ்னெஸ் புலிகள், தன் வெளிநாட்டு வங்கி கணக்கை நிரப்பலாம்.
சாதாரண பிஸ்கெட் பத்து ரூபாய் என்றால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கான பிஸ்கெட் பதினைந்துக்கு விற்கிறது.
உற்பத்தி தரப்பு அந்த வகை பொருட்களுக்கு தயாரிப்பு செலவு அதிகம் என்று வாதிடலாம்.
எனக்கு சந்தேகம் எல்லாம் ஒன்றே ஒன்று தான்!
சர்க்கரை நோய், பணக்கார நோயா?
_தமிழ்@கிறுக்கன்
www.thamizkkirukkan.blogspot.com/2011/08/blog-post.html
பேஸ் புக் குழுவில் இணைய.
www.facebook.com/home.php?sk=group_159386644128953&refid=0&_rdr
நன்றி!
"வேடிக்கையாகவே கேலிகள் பேசி...
கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"
நல்ல கேள்வி...
ReplyDelete