தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Friday, February 1, 2013

"ஒரு கிராமத்தானும், கமலும்...!"

"ஒரு கிராமத்தானும், கமலும்...!"

உன் மொத்த சொத்த அடவு வைச்சு, நீ எடுத்த விஸ்வரூபம் பொறுக்காம தடை பண்ணுனத பத்தி நீ அழாம சொன்ன "நாட்டை விட்டே வெளியேறுவேன்னு" ன்கிறத கேட்டு அழது அழுதே பாறையா காஞ்சு போன நான் கூட அதிசயமா நெசமாலுமே அழுதுட்டேன் டா, கமலு... !

நாட்ல அத்தன பேரும் தீவிரவாதி தான் கமலு, மனுசன பத்தி கவல படாம, மதத்துக்காக கத்தி பிடிச்சு இரத்தம் கேக்கிறவன மட்டுமில்ல கமலு, எத பத்தியும் கவலைப் படாத அத்தன பேரும் தீவிரவாதி தான்!

மதச்சார்பற்ற நாடு போய் குடியேறுவேன்னு சொன்ன , அப்படி எதுவும் இல்ல கமலு, இந்த உலகம் முட்டாளுங்களுக்கு சொந்தமானது.



என்ன மாதிரி அப்பாவிக்கும், உன்ன மாதிரி நல்ல மனுசனுக்கும் இங்க இடமில்லடா, பாவி!

கோடாம்பாக்கத்து கோமாளிங்க இருக்கிற இடத்தில நீ, பாரதிராசா,வைரமுத்து தம்பி, இளயராசா மாதிரி ஆளுங்க இருக்கிறதுனால தான் சினிமா மேல கொஞ்சம் மரியாதி இருந்துச்சு, கமலு.

ஒருத்தன் விபத்தில அடிபட்டு கெடந்தா, அம்புலன்ஸ்காரன் வர்றதுக்கு முன்னாடி டிவிக்காரன் காமிரப் பொட்டியோட முத வந்திரான்.

மனுசன காப்பத்தறவன் அப்புறம தான் வர்றான். விஞ்ஞான வளர்ச்சி மனுசன அழிக்க அப்படி முன்னுக்க வந்து நிக்குது.

ரேசன் கடைக்கு போயிருக்கியா, கமலு.
ஒரு நாள் முழுசும் கால் கடுக்க, கால் வலிய விட மனசு வலிக்க நின்னா அரிசி ஸ்டாக் இல்ல, திரும்ப எப்ப வரும்ன்னு சொல்லவெல்லாம் முடியாது எப்ப வருமோ அப்ப வந்து வாங்குங்க ன்னு புழுத்த அரிசிக் கடைக் காரன் சொல்வான் பாரு.

அப்ப நான் நெனப்பேன் இது வாழத் தகுதி இல்லாத நாடுன்னு..
வாழவே பிடிக்காத எனக்கும் சின்ன நப்பாசை, ஈழத் தம்பி பிரபாகரன் மாதிரி நெயாயம் செயிக்க தூப்பாக்கி பிடிக்கிறவன் வாழ்ற பூமியில நாமலும் வாழ்றோம்ங்கிற பெருமை இருந்துச்சு.

அந்த தம்பி செத்துப் போச்சுங்கிறத இந்த நெஞ்சு நம்ப மறுக்குது, கமலு.


சேத்தை பூசி ன விவாசாயி, கரன்சி காகிதால செய்த மனுசன் முன்னாடி தற்கொலை செஞ்ச செத்தே போய்ட்டான்,கமலு

வெவசாயம் பத்தி கவலைப்படாத
அத்தன பயலுகளும் பசிக்கு எத திம்பான், பச்ச மலத்தையா?

பிள்ளைகளின் உதவியை எதிர்பார்க்காமல் கடைசி நொடி வரை உழைத்தே முடிந்து போன விதவை தாயை எனக்கு தெரியும்.

இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்...

தீபாவளி,பொங்கல் போனஸ்,நிரத்தரமான வருவாய் எல்லாம் இருந்தும், எல்லோரிடமும் லஞ்சம் வாங்க கையேந்துகிற அரசு ஊழியர்கள் எல்லோரையும் நிக்க வைத்து...

கொசு தோற்றம் வரும்படியான சீருடைகளை எல்லா அரசு ஊழியர்களுக்கு வழங்கி கவுரவப் படுத்தலாம்.

போதும் என் சோகம் உன்ன தாக்கி...

கடைசியா ஒன்னே சொல்லிப்பிட்டு என் பொழப்ப் பாக்கப் போறேன்.

உன் வாயாலேயே வந்துருச்சு "நான் சினிமா பாரதி!"ன்னு...

அந்த பாரதிய யானை மிதிச்சப்ப கூட யானைய மேல கோபப் படல. அதுக்கான காரணத்து மேல தான் கோபப் பட்டான்.

அந்த மாதிரி யே உன் கோபம் இருக்கட்டும். மத யானை மேல கோபம் வேண்டாம்.

அம்மணமா இருக்கிற நாட்ல,

நீ வேட்டி கட்டி மனுசனவே இரு. அப்பதான் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் வித்தியாசம் தெரியும்.

நாடு விட்டு நாடு போனா மட்டும் என்ன பெரிசா மாத்தம் நடந்திர போகுது.

இவிங்களே உன்னை இன்னும் புரிஞ்சிக்கல...

அம்புட்டுதேன்!

முடிஞ்சா அடுத்த கடிதத்தில சந்திப்போம்.

இப்படிக்கு
பொறம்போக்கு நெலத்தில வீட்ட கட்டி அதில வாடகைக்கு இருக்கிற...

_கிராமத்தான்.
(தமிழ்க்கிறுக்கன்)

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...