தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Monday, March 14, 2011

மீடியாகாரனே அரசியலுக்கு வராதே!

சேனல் இருந்தா நியூஸ் பேப்பர் நடத்தக்கூடாது. மீடியா பவர் உள்ளவங்க அரசியலுக்கு வரக்கூடாதுன்னு வல்லரசு நாடுகளில் சட்டமே இருக்கு...



_எஸ்.ஏ.சந்திரசேகர்



தொடர்ந்து 21 நாட்கள் ஒரே காரியத்தை செய்து வந்தால், அது நம்மிடம் ஒட்டிக் கொண்டு விட முடியாத பழக்கமாக மாறி விடும்.

இது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.



108 என்ற எண்ணுக்கு போன் செய்தால் அரசு ஆம்புலன்ஸ் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கும். இது தான் எல்லோருக்கும் தெரியுமே என்கிறீர்களா?




ஒரு நாளில் இந்த எண்ணுக்கு வருகிற 35 ஆயிரம் அழைப்புகளில் 25 அழைப்புகள் பொய்யான தகவல்களை தரும் அழைப்புகள் என்பதால், அப்படி தகவல்களை தரும் பொய்ப்பேசிகளை கண்டிபிடித்து,தண்டிக்கப் போகிறதாம்,காவல்துறை.

அப்படி கைப்பேசிகளில் பொய்ப்பேசும் அத்தனை பேரும் குடிகாரர்களே என்கிறது, காவல் துறை.

அப்படி தண்டித்தால் தண்டிக்க வேண்டியது, குடிகாரர்களையா,
இல்லை,
குடிக்க காரணமாக இருக்கும் கலைஞரையா?

குடிகார பைய ஊர்ல திருட்டுப் பையன் நாட்டாமையாம்!

தமிழ்க்கிறுக்கனின் உள்ளம் கவிதை உள்ளம், எதைக் கண்டாலும், அதை பற்றி ஒரு கவிதையை அந்த இடத்திலேயே எடுத்து விடும் திறமைக்கும் பெருமைக்கும் சொந்தக்காரன்.

உன்னை, நீயே கவிஞன் என்பதை என்றைக்கு எப்படி உணர்ந்தாய்? என்று கேட்டால்...

தமிழ்க்கிறுக்கன் இப்படிச் சொல்வான் "மற்றவர்களின் கவிதைகளை படித்ததால், நானும் கவிஞனானேன், கவிஞனாக இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்?" என்று கேள்வி கேட்டு
நம்மையே மிரள வைப்பான்.

தன்னுடைய முதல் கவிதையை எழுதிய பிறகுதான் தான் ஒரு சாதரண கவி இல்லை,பிறவிக் கவிஞன் என்று நம்பத் தொடங்கி விட்டான்.



அவனின் கவிதையை படித்த யாரும் அதை கவிதை என்று சொல்வதில்லை என்பதால் வெறுத்துப் போய், தன்னை தானே மதிக்காதவனை எப்படி உலகம் மதிக்கும் என்று தத்துவம் பேசி அவனுக்கு அவனே பிறவிக்கவிஞன் தமிழ்க்கிறுக்கன் என்று போட்டுக் கொள்வான், அப்படி கணினியில் எழுதி என்னிடம் காட்டிய கவிதை ? யை உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். மனசை திடப்படுத்தி படியுங்கள்!

பூகம்பம் வைத்த
தீயை...

நீர் கொண்டு
அணைத்தது
சுனாமி
பனைமர உயர அலை...

சப்பானில்
எத்தன உயிர்கள் காலி என்று கவலைப் படாதே, ராசா!

ஒலக கோப்பை கிரிக்கெட்டில் எத்தனை விக்கெட் விழுந்தது என்று
துக்கம் தொண்டையை அடைக்க
விம்மி விம்மி
விக்கி அழு ராசா,
அடுத்த தேர்தலில் நீயும் முதல்வர் தான்...

(என்ன, கவிதைய படிச்சு உங்களுக்கும் அழுவ அழுவையா வருதா? இப்படித்தான் சம்பந்த சம்பந்தமா இல்லாம எதையாவது கிறுக்கி நம்மால கிழிச்சு போட்டுறுவான்!)

_ "பிறவிக்கவிஞன்" தமிழ்க்கிறுக்கன்

www.facebook.com/beyouths

www.twitter.com/beyouths

skype id: beyouths

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...