அதென்ன 3g?
முதலில் 1g என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வாக்கி டாக்கி வகை தொலைபேசிகள் 1 g (generation_தலைமுறை) இந்த வகை தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் பேச, மறுமுனையில் கேட்க மட்டுமே முடியும். பேசி முடித்தவர் ஓவர் என்று தன் பேச்சை நிறுத்திக் கொண்ட பிறகே மறுமுனையில் கேட்டுக் கொண்டியிருப்பவர் பேச முடியும்.
2g ?
தற்போது பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம். ஒரே சமயத்தில் இருவர் (காது கொடுத்து கேட்காமல் போனால் கூட)பேசவோ, கேட்கவோ முடியும்.
அது என்ன 3g?
புதிய தலைமுறையினருக்கான தொழில்நுட்பம். எதிர், எதிரே இருப்பவர்களை முகம் பார்த்து பேசும் வீடியோ அழைப்பு. கணினி வழியே நடக்கும் வீடியோ கான்பரன்ஸ் அழைப்பை கைப்பேசியில் கொண்டு வரும் தொழில் நுட்பம், இது.
அழைப்பை பெறுபவரும் 3g தொழில்நுட்பத்தில் இயங்குகிற கைப்பேசியை வைத்திருக்க வேண்டும்.
இரண்டு கைப்பேசிகளிலும் இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை. ஏனெனில் வீடியோ இணையம் வழியாக பயணம் செய்து தான் நம் கைப்பேசியில் படமாக தெரியும்.
பிரபலமான தயாரிப்பு கைப்பேசிகளில் தான் இந்த வகை தொழில்நுட்பம் செயல்படும்.
மலிவு விலையில் விற்கப்படும் பெயர் தெரியாத கம்பெனி தயாரிப்பு கைப்பேசிகள் பெரும்பாலும் இணைய இணைப்பை பெற்று செயல்படுபவைகளாக இல்லை.
எல்லா கைப்பேசி இணைப்பை வழங்கும் நிறுவனங்களும், இன்னும் 3g தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தவில்லை.
ஏற்கனவே 3g-யை அறிமுகம் செய்தியிருக்கிற கைப்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இன்னும் முழுமையாக தயாராக வில்லை.
ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், வரும் வசதி பிரிவில் வீடியோ அழைப்புக்கான வசதி இருக்கும்.
வேகமான இணையம் என்று இலக்கை குறி வைத்து 3g தொழில்நுட்பம் களமிறங்கியிருக்கிறது.
ஒரு நிமிட வீடியோ அழைப்புக்கு அய்ந்து ரூபாய் என்ற கட்டணத்துடன் அறிமுகப்படுத்தியிருக்கிற நிறுவனங்கள்,வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும் போது குறைக்கும் என்று நம்புவோமாக!
_தமிழ்க்கிறுக்கன்
article is very nice and informative, thanks
ReplyDeletepurinthukolvatharkku ilaguvaga irunthathu.
ReplyDelete