தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Wednesday, May 11, 2011

திருடர்கள் தேசத்தில்...

திருடர்கள் தேசத்தில்...

இன்று காலை அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய பாக்யம் பெற்றேன்.

வட மாநிலத்தை சேர்த்த நான்கு நபர்கள், அழுக்கான சட்டை, கட்டிட வேலைக்கு போகிறவர்கள் போல தெரிந்தார்கள்.

4 பேர்களுக்கு பயணச்சீட்டு வாங்க போய், ஒரே ஒரு நபர் மட்டும் சென்னை முழுதும் எந்த மாநகர பேருந்திலும் பயணம் செய்யக் கூடிய ஒரே ஒரு பயணச்சீட்டை மட்டும் வாங்கி வந்து, என்னிடம் நாலு விரல்களை காட்டி புரியாத மொழியில் சொன்னாலும், தவறு என்ன என்பது புரிந்து.


ஏதோ பேசி மேலும் கூடுதலாக
30 ரூபாய்க்கு நான்கு பேருக்கு பயணச்சீட்டு வாங்கி வந்து புலம்பிக் கொண்டிருந்தான், பயணச்சீட்டு வாங்கிய வடநாட்டான்.

எல்லா சீட்டுகளையும் வாங்கிப் பார்த்தேன். 30 ரூபாய் சீட்டுக்கு, 60 ரூபாய் சீட்டு கொடுத்திருக்கிறான், நடத்துநர்.

எனக்கு வந்ததே கோபம்.

அந்த வடநாட்டான் கையை பிடித்து தர தரவென்று நடத்துநரிடம் போய் நியாயம் கேட்டேன்.



மொழி தெரியாதவன் கிட்ட ரெண்டு மடங்கு கட்டணம் எப்படி வாங்குவீங்க? முதலில் எடுத்த ஒற்றை டிக்கெட்டை ரிட்டன் வாங்கிக்குங்க.(அந்த சீட்டை நடத்துநர் கண்டிப்பாக வேறு நபருக்கு மாறறித் தர முடியும்)

வாங்கும் போதே தெளிவா கேட்டு வாங்கணும் என்றான், நடத்துநன்.

மொழி தெரியாதவன் எப்படி தெளிவா கேப்பான். இந்த பஸ்ஸில வர்ற அத்தன பேரும் சாப்ட்வேர் கம்பெனியிலா வேல பாக்கிறான். அவனுங்க அத்தன பேரும் கூலிக்கு வேல பாக்கிற பசங்க. அவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டுறீங்களே!
தினமும் கூலி வேல செய்யிற அத்தன பேரும், நீங்க பாக்கிற கவர்மெண்ட் வேலய விட பெரிய வேலையா உஙகளுக்கு தெரியுதா என்ன...


நீங்களெல்லாம் சொந்த வீடு,கார் பங்களான்னு இருங்க

இல்லாதவன் ஊர் ஊரா வேல தேடி பிச்சைக்காரன அலைஞ்சாலும், உங்க வேலையிலே கண்ணா இருங்கடா.

அப்புறந்தான் பார்த்தேன். பெருந்தே என்னை வேடிக்கை பார்த்தது எனக்கு கூச்சமாக இருந்தது, நடத்துநன் தலையை கீழே தொங்க விட்டுக் கொண்டான்.

வேற யாராவது அந்த ஸ்பெஷல் டிக்கெட் கேட்டு வந்ததா மாற்றித் தருகிறேன், என்றான் பிடிவாதமாக நடத்துநன்.

எனக்காக சண்டை போட வேண்டாம் என்று சைகையால் காட்டி கண்ணீர் மல்க கை கூப்பி அவன் இருக்கையை நோக்கி நகர...

நான் இறங்க வேண்டிய பெருந்து நிறுத்தம் வர நான் இறங்க.

மனதில் பாரம் ஏறிக் கொண்டது.
_தமிழ்க்கிறுக்கன்

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...