தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Friday, July 13, 2012

இந்த எருமை மாட்டுச் சனியங்களுக்கு...

இந்த எருமை மாட்டுச் சனியங்களுக்கு...
என்ன கவலைன்னு பாருங்க.

மயிலாப்பூர் ஆத்து மயிராண்டிகள் வசிக்கிற பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவர் ரொட்டி (மாட்டுக்கு பிடித்த ரொட்டி ?) நம்ம தமிழ்க்கிறுக்கன் கைப்பேசியில் எடுத்த படம்.

வேற என்னத்த சொல்றது...

கடவுள மற ! மனுசன நினை!!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

Sunday, July 8, 2012

"அம்மா, கிறுக்கன்"

"அம்மா, கிறுக்கன்"

அவனுக்கு அப்பா இல்லை.

வேறு வழியில்லை என்பதால், அவன் அம்மா பிள்ளையானான்.

"கிறுக்கன்" என்றே எல்லோரும் கூப்பிடுவார்கள். அவன் பேர் என்னவென்று நிறைய பேருக்கு தெரியாது.

கெட்டிக்காரன் தான், ஆனா கிறுக்கு பைய என்பார்கள், அவனை பற்றி ஊர்க்காரர்கள்.

அவனின் அம்மாவை மருத்துவ மனையில் சேர்க்க வேண்டியிருந்து.

முதுமை ஏதாவது ஒரு நோயை ஏவி ஆளை விழுங்க பார்க்கும்.

இது நாள் வரை சேர்த்த அத்தனை சேமிப்பையும் அழித்து, அவனின் அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்தான்.

அட, கிறுக்கா! நீ செலவு செஞ்ச அத்தன பணத்தையும் வைச்சிருந்தா வீடு நிலம்ன்னு வாங்கி போட்டிருக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாள்ள சாக போற கெழவிக்கு போய் செலவு செஞ்சிட்டு, வெறும் பையலா வந்து நிக்கிற, எல்லாரும் உன்ன கேணப் பையன்னு சொல்றது தப்பில்ல என்றான், ஒருத்தன்.

அம்மா கிட்டருந்து நான் நான் வந்தேன், என் கிட்ட இருந்து பணம் வந்துச்சு,

எம் பணம் எதுவும் இல்ல என்றான்.

எல்லோரும் வாயாடைத்து போனார்கள்!

_தமிழ்க்கிறு@கன், சென்னை.
www.thamizkkirukan.blogspot.com

Saturday, July 7, 2012

...கண்ணீரும், சிரிப்பும்...!

...கண்ணீரும், சிரிப்பும்...!

தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக கொண்டே வந்தபோது movies now அலைவரிசையில் சார்லிசாப்ளின் படம் ஓடிக் கொண்டிருந்தது.

எனக்கோ இன்ப அதிர்ச்சி!

சார்லி நாடோடியாய் திரிவார், சொந்தமாக வீடு இருக்காது, எல்லா படங்களிலும் பெரும்பாலும் தெருவில் வாழும் நடைபாதைவாசியாகவே வருவார்.

வறுமையால் கோணல் நடையை மறைக்க, ஒரு மாதிரி கார்டூன் போல நடந்து, அதை தனக்கான பாணியாக மாற்றி வெற்றி நடை போட்டவர், சார்லி.

படத்தில் எவ்வளவு முரடர்கள் தாக்கினாலும், பதிலடி கொடுக்காமல் விட மாட்டார்.

என்ன தான் சிரிப்பு சிரித்தாலும், தெருவில் காகிதம் பொறுக்கி வாழும் சிறுவனின் வெற்று சிரிப்பை போல ஒரு சோகம் அப்பிக்கிடக்கும்.

கமலஹாசனின் படங்களில் சார்லி சாப்ளின் பாதிப்பு அதிமாக காணலாம். அன்பே சிவம், புன்னகை மன்னன்,அபூர்வ சகோதரர்கள்...

city lights கதை உள்ளடக்கம் "துள்ளாத மனம் துள்ளும்" என்று சக்கை போடு போட்டது.

மனிதத்தை காதலித்த சார்லியின் படங்களில் காதல் காட்சிகள் கலங்கடிக்கும்.

மனிதர்களுக்கு கண்ணீரும், சிரிப்பும் மறந்து போகாத வரை சார்லி காதலிக்கப் படுவான்...!

"அழகுக்கு பொய் அழகு! "

சிவப்பழகு கிரீம் விளம்பரத்துக்கு வரும் பெண்கள் எல்லாம் சிகப்பாகவே இருக்கிறார்கள்.

கருப்பாக இருக்கும் யாரும் சிகப்பழகு கிரீம் விளம்பரத்தில் வருவதில்லை.

கருப்பு நிறத்தை சிவப்பாக்க முடியாது.

சிகப்பாக இருப்பவர்களை தான் (மேலும்) சிகப்பாக முடியும் என்கிற உண்மையை அந்த விளம்பரம் சொல்லாமல் சொல்லி மறைகிறது.

உண்மை தான் உண்மையான அழகு!

தமிழ்க்கிறு@கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

Thursday, July 5, 2012

"நான்! "

"நான்! "

பேருந்தில் அப்படி ஒன்றும் கூட்டமில்லை. உள்ளே செல்லலாம் இடமில்லை, மனமும் இல்லை.

ஒரு நிறுத்ததில் இரண்டு வயசு பெண்கள் ஏற...

அதில் ஒரு பெண்ணை தேர்வு செய்து பின்பக்கமாக, தன் முன்பக்கம் முழுவதும் படர...

கிட்டத்தட்ட அந்த பெண்ணை கட்டிப் பிடிக்கும் வேலை ஒன்று தான் பாக்கி...

அவ்வளவு நெருக்கமாக நின்று கொண்டிருந்தான், அவன்.

அச் செயல் அப்பட்டமாக செயற்கையாக தெரிந்தது.

அவ்வப்போது எனக்கு "சேது" தனமான கிறுக்குத்தனங்கள் தலை தூக்குவது உண்டு.

உம் பின்னால அவ்வளவு இடம் கிடக்கும் போது பொம்பள பிள்ளைங்க சூத்து பின்னால ஏன் அப்படி ஒட்டி நிக்கிறே? என்றேன்,நான்.

சுற்றியிருந்த அத்தனை பேர்களின் பார்வையும் அவனையே மொய்க்க...

உடனே அந்த பெண்ணை விட்டு பிரிந்து விலகி நிற்காமல் கொஞ்சம் நேரம் கழித்து தான் ஆண்கள் பக்கம் வந்தான்.

பஸ்ஸில இதுங்களுக்கு இதே வேலையா போச்சு என்றேன், சப்தமாக...

பேருந்து நகர்ந்து கொண்டே இருந்தது, அதற்கு பிறகு யாரும் பேசவே இல்லை..!

_தமிழ்க்கிறு@கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com

என்னைப் பற்றி ...