"அம்மா, கிறுக்கன்"
அவனுக்கு அப்பா இல்லை.
வேறு வழியில்லை என்பதால், அவன் அம்மா பிள்ளையானான்.
"கிறுக்கன்" என்றே எல்லோரும் கூப்பிடுவார்கள். அவன் பேர் என்னவென்று நிறைய பேருக்கு தெரியாது.
கெட்டிக்காரன் தான், ஆனா கிறுக்கு பைய என்பார்கள், அவனை பற்றி ஊர்க்காரர்கள்.
அவனின் அம்மாவை மருத்துவ மனையில் சேர்க்க வேண்டியிருந்து.
முதுமை ஏதாவது ஒரு நோயை ஏவி ஆளை விழுங்க பார்க்கும்.
இது நாள் வரை சேர்த்த அத்தனை சேமிப்பையும் அழித்து, அவனின் அம்மாவை வீட்டுக்கு கூட்டி வந்தான்.
அட, கிறுக்கா! நீ செலவு செஞ்ச அத்தன பணத்தையும் வைச்சிருந்தா வீடு நிலம்ன்னு வாங்கி போட்டிருக்கலாம்.
இன்னும் கொஞ்ச நாள்ள சாக போற கெழவிக்கு போய் செலவு செஞ்சிட்டு, வெறும் பையலா வந்து நிக்கிற, எல்லாரும் உன்ன கேணப் பையன்னு சொல்றது தப்பில்ல என்றான், ஒருத்தன்.
அம்மா கிட்டருந்து நான் நான் வந்தேன், என் கிட்ட இருந்து பணம் வந்துச்சு,
எம் பணம் எதுவும் இல்ல என்றான்.
எல்லோரும் வாயாடைத்து போனார்கள்!
_தமிழ்க்கிறு@கன், சென்னை.
www.thamizkkirukan.blogspot.com
No comments:
Post a Comment