தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, July 7, 2012

...கண்ணீரும், சிரிப்பும்...!

...கண்ணீரும், சிரிப்பும்...!

தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக கொண்டே வந்தபோது movies now அலைவரிசையில் சார்லிசாப்ளின் படம் ஓடிக் கொண்டிருந்தது.

எனக்கோ இன்ப அதிர்ச்சி!

சார்லி நாடோடியாய் திரிவார், சொந்தமாக வீடு இருக்காது, எல்லா படங்களிலும் பெரும்பாலும் தெருவில் வாழும் நடைபாதைவாசியாகவே வருவார்.

வறுமையால் கோணல் நடையை மறைக்க, ஒரு மாதிரி கார்டூன் போல நடந்து, அதை தனக்கான பாணியாக மாற்றி வெற்றி நடை போட்டவர், சார்லி.

படத்தில் எவ்வளவு முரடர்கள் தாக்கினாலும், பதிலடி கொடுக்காமல் விட மாட்டார்.

என்ன தான் சிரிப்பு சிரித்தாலும், தெருவில் காகிதம் பொறுக்கி வாழும் சிறுவனின் வெற்று சிரிப்பை போல ஒரு சோகம் அப்பிக்கிடக்கும்.

கமலஹாசனின் படங்களில் சார்லி சாப்ளின் பாதிப்பு அதிமாக காணலாம். அன்பே சிவம், புன்னகை மன்னன்,அபூர்வ சகோதரர்கள்...

city lights கதை உள்ளடக்கம் "துள்ளாத மனம் துள்ளும்" என்று சக்கை போடு போட்டது.

மனிதத்தை காதலித்த சார்லியின் படங்களில் காதல் காட்சிகள் கலங்கடிக்கும்.

மனிதர்களுக்கு கண்ணீரும், சிரிப்பும் மறந்து போகாத வரை சார்லி காதலிக்கப் படுவான்...!

_தமிழ்க்கிறு@கன், சென்னை.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...