தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, January 26, 2013

"இன்னொரு தேசிய கீதம்"

யாரோ சட்டையில் குத்திய நம் இந்தியக் கொடி தரையில் கிடந்தது.

கொடியோடு மேல் நோக்கி நீட்டிக் கொண்டிருந்த குண்டூசி யார் காலிலாவது குத்தி விடப் போகிறது என்று என் ஷீ காலால் ஆட்கள் நடமாட்டமில்லதா பக்கமாக தள்ளி விட்டேன்.

அது நம் தேசியக் கொடி அதை ஷீ கலால் மிதித்து அவமதிக்கிறோம் என்ற உணர்வு அப்போது வரவே இல்லை.

அதை எதிர்பாராமல் பாத்து விட்ட ஒரு மிலிட்டரி சர்வீஸ் பெருசு என்னை நோக்கி கோபமாக வந்த போது தான் எனக்கே புரிந்தது.

இந்தியா மீதோ இந்திய கொடியின் மீதோ எனக்கு பெரியார் காலத்திலிருந்தே
மதிப்பும் மரியாதை வந்ததில்லை.
இலங்கை பக்கம் மீன் பிடிக்க போனவன் செத்து கருவாடாய் கரை ஒதுங்கிறான்.

ஆந்திராவில் லட்டை காட்டி உண்டியலில் கல்லா கட்டுகிறான்,தெலுங்கன்...

அய்யப்பன் சீசன் வசூல், பெரியார் அணை என்று கேரள மலையாளியும்...

காவிரி நீர் விடச் சொன்ன உயர்நீதிமன்ற உத்தரவை காமெடி கலாட்டாவாக நினைக்கும் கன்னடன்...

அத்தனை பேரையும் இந்தியன் என்ற வார்த்தைக்குள் அடைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...