உணவகத்தில் வேலை செய்யும்
சிறுவனை
அம்மா
சாப்பிடக் கூப்பிட்டாள்.
சிறுவன் தேம்பி தேம்பி அழுதான்...
("விக்கிற நேரம் அப்படி என்னடா உனக்கு நாக்கு ருசி தேடுது..?" முதலாளி முருங்கை காய் கையிலெடுத்து விளாசி தள்ளிய...)
பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
உணவகத்தில் வேலை செய்யும்
சிறுவனை
அம்மா
சாப்பிடக் கூப்பிட்டாள்.
சிறுவன் தேம்பி தேம்பி அழுதான்...
("விக்கிற நேரம் அப்படி என்னடா உனக்கு நாக்கு ருசி தேடுது..?" முதலாளி முருங்கை காய் கையிலெடுத்து விளாசி தள்ளிய...)
பிறவிக் கவிஞன்
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
பஸ் கண்டக்டர் ரூபாய் 3.50 க்கு இரண்டு இரண்டு டிக்கெட் ரூ 7.00 க்கு தர 3.50 டிக்கெட் கட்டு தீர்ந்து போனதால் ஏற்கனவே இருமடங்கு கட்டணம் என்று ஈவு இரக்கம் காட்டாத நடத்துனர். இரண்டு 3 ரூபாய் டிக்கெட் கொடுத்து 6 ரூபாய் வசூலிக்காமல், இரண்டு 4ரூபாய் டிக்கெட்டுகளை வழங்கி மேலும் 1 (3+3+1=7) ரூபாய் வசூலித்து, தன்னால் முடிந்த திறமைகளை காட்டி அசத்துகிறார்கள்
மரம் வெட்டி புகழ் பாமக ராமதாஸ், தன் தலைவன் தொல்.திருமா சிறையில் அடைக்கப் பட்டால் பஸ்களுக்கு தீ வைத்து மகிழும் விடுதலைச் சிறுத்தைகள்...
இருமடங்கு பஸ் கட்டணம்,பால்,மின்சார கட்டண உயர்வு என்று தான் தோன்றித்தனமான ஜெவின் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த போராட்டத்தையும் நடத்த தயாராக இல்லை.
பொரச்சி கலஞர் விசயகாந்த் இன்றைக்கு உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகிறராம்.
ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு மேல் உண்ணாத உண்ணா விரத போராட்டம். மூச்சு விடும் போராட்டம்.இரவில் தூங்கும் போராட்டம், பகலில் முழிக்கும்
போராட்டம் என பல போராட்டங்களை, நீங்களாவது நடத்தி அசத்துங்கள் கேப்டன்!
தமிழ்க்கி@க்கன், சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்துகளை பயன்படுத்தம்படி அயல்நாடுகளில் அந்நாட்டு அரசு நிறைய சலுகைகளை வாரி வழங்குகின்றன.
இங்கே என்னவென்றால் பேருந்துகளில் இரட்டை கட்டணம் வசூலித்து புரட்சி செய்கிறார்கள்.
கலைஞரின் சோனியா அம்மன் எழுந்தருளி திறக்கப்பட்ட புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்குவேன் அறிக்கை விட்டார், ஜெ!
எனக்கு தெரிந்து இரவு நேரம் ஒரு நாள் எழும்பூர் அரசு பிரசவ மருத்துவமனையில் நோயாளிக்கு உடன் இருப்பவர்கள் வெறும் மண் தரையில் படுத்து தூங்குவதை கண்டு பகீரென்றிருந்தது.
இன்றும் கூட அந்த கொடுமையை அங்கு நீங்கள் பார்க்கலாம்.
ஏற்கனவே இருக்கிற மருத்துவனை இந்த இலட்சணத்தில் இருக்கும் போது புது மருத்துவ மனை எதற்கு?
நவீன வசதிகளோடு புதிதாக திறக்கப்பட்ட அண்ணா நூலகத்தை சிறுவர்களுக்கான நவீன மருத்துவமனையாக மாற்றுவேன் என்று சிறு பிள்ளைத் தனமாக அடம் பிடிக்கிறார், ஜெயலலிதா.
புரட்சித் தலைவிக்கு அப்படி என்ன வியாதியோ?
தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
மொபைலில் இணைய தளம் மேய்கிற ஆசாமியா நீங்கள்?
பேஸ்புக்கில் நேரடியாக படங்களை மொபைலின் நினைவகத்திலிருந்து படங்களை பேஸ்புக் பக்கங்களில் பதியலாம் என்பது தெரிந்ததே.
யாகூ சமீபத்தில் தான் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
போன் மெமரி, நினைவக அட்டையில் இருக்கிற படங்கள் மாதிரியான கோப்புகளை மின்னஞ்சலில் இணைத்து அனுப்பலாம்.
மொபைலில் திறக்கப்படும் ஜிமெயிலில் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாகூ மின்னஞ்சல் பகுதிக்குள் நுழையுங்கள்.
Compose பக்கத்தை திறக்கவும். manage attachments என்ற இணைய இணைப்பை தொட்டுத் திறக்கவும்.
கேமிரா மொபைலில் எடுக்கிற படங்களை மின்னஞ்சலில், உடனடியாக சில நிமிடங்களில் அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
பேருந்து கட்டணம் இரு மடங்கு,மின்சார கட்டணம், பால் விலை உயர்வு.
_செய்தி.
ரொம்ப தொணிச்சல்கார பெண்மணி ஜெயலலிதான்கிறது அர்த்தம் இப்ப தான் பிரியுது.
அல்லாரும் ஏன் அதிமுககாரனே பொம்மளைன்னு கூட பாக்காம திட்றான்.
"பால் வெலைய ஏத்துன்னெ இவளெல்லாம் பொம்பளையாம் த்தூ...!"ன்னு ஜெயலலிதா
போஸ்டர் மேல ஒரு குடும்ப தலவி துப்பின எச்சில் எம் மேல பட்டுத்
தொலைஞ்சது!
இந்த தொணிச்சல் கார பெண்மணிக்கு ஆதரவ சில கேள்விங்க.
இவ்வளவு ஆன பிறவும் தி.நகர் ரங்க நாதன் தெருவுல ஜவுளி, நகை வாங்க வர்ற
கூட்டம் குறைஞ்சிருக்கா, இல்ல நம்ம அரசாங்கமே நடத்துற சாராயக் கடை
டாஸ்மாக்ல தான் கூட்டந்தான் கொறைஞ்சிருக்கா?
காசு யார் கொடுத்தாலும் வாங்கிட்டு கரிக்கெட்ட ஒட்டுப் போட சொன்ன அந்த
தேச தலைவருங்க மட்டும் எம் கையில மாட்டுனானுங்க அவ்வளவுதான்...
இதுக்கு மேல பேசுனா குடிகாரன் போதையில பேசுறான்னு கண்டுக்காம போயிருவீங்க ...
வாழ்க பொரச்சி தலைவி!
ஒழிக டூப்ளிகேட் டாஸ்மாக் சரக்கு!!
_தமிழ்க்கி@க்கன், சென்னை.
அரசு பேருந்து கட்டணம் இருமடங்காக மாறியதை பற்றி தான் பேருந்து முழுவதும் பேச்சு.
இந்தியாவில் எந்த அரசும் செய்யாத சாதனையாம்!
அதிமுக கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம்.
மாத கட்டண 600 ரூபாய் பஸ் பாஸ் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று பஸ் போக்குவரத்து புகார் எண்ணுக்கு போன் செய்தேன்.
" எனக்கும் தெரியலைங்க, ஒரு வேளை அது பஸ் கண்டக்டருக்கு தெரிந்தாலும் தெரிந்திருக்கலாம் அவரிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அசத்தினார்.
மிரண்டு போனேன்!
வாழ்க எம்.ஜி.ஆருக்கு நாமம்!
வளர்க பொரச்சித் தலைவின் புகழ்!!
-தமிழ்க்கிறுக்கன், சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
பெரும்பாலான மின்னஞ்சல் நிறுவனங்கள் 10 mb வரை மட்டுமே அனுமதிக்கின்றன.
ஆனால் ஜிமெய்ல் மட்டும் 20 முதல் 25 mb அளவிளான கோப்புகளை அனுப்ப அனுமதிக்கின்றன.
www.yousendit.com தளம் போய் 100 எம்.பி வரை அனுப்பலாம்.
gb அளவு கோப்புகளை அனுப்ப கீழே உள்ள தளங்கள் அனுமதிக்கின்றன.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
சென்னையில் சாலைகளையே காண முடியவில்லையே, ரோடு வரி எதுக்கும் கட்டணும் கேட்டு ரோடு வரி கட்டிவிட்டு வந்தோம்.
சென்னை பள்ளிக்கரணைக்கு போயிருந்தேன்.
ஒரு தெருவுக்குள் நுழைந்தவுடன் சிமெண்ட் சாலை திடீரென்று இடையில் முடிந்து தூசி பறக்கும் மண் சாலை ஆரம்பித்தது.
ஏன், பாதியிலேயே சாலை முடிந்து போனது என்று கேட்டேன்.
கவுன்சிலர் வீடு இங்க தான் இருக்கு அதான் இதோட முடிஞ்சு போச்சு என்று பதில் வந்தது.
ஆனா இப்ப வேற கவுன்சிலர் வந்துட்டாங்க என்றார், உள்ளூர்வாசி.
இந்த மாதிரி ஜென்மங்களுக்கு எப்படி மறுபடியும் ஓட்டு விழும்?
_தமிழ்க்கிறுக்கன், சென்னை.