போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்துகளை பயன்படுத்தம்படி அயல்நாடுகளில் அந்நாட்டு அரசு நிறைய சலுகைகளை வாரி வழங்குகின்றன.
இங்கே என்னவென்றால் பேருந்துகளில் இரட்டை கட்டணம் வசூலித்து புரட்சி செய்கிறார்கள்.
கலைஞரின் சோனியா அம்மன் எழுந்தருளி திறக்கப்பட்ட புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக்குவேன் அறிக்கை விட்டார், ஜெ!
எனக்கு தெரிந்து இரவு நேரம் ஒரு நாள் எழும்பூர் அரசு பிரசவ மருத்துவமனையில் நோயாளிக்கு உடன் இருப்பவர்கள் வெறும் மண் தரையில் படுத்து தூங்குவதை கண்டு பகீரென்றிருந்தது.
இன்றும் கூட அந்த கொடுமையை அங்கு நீங்கள் பார்க்கலாம்.
ஏற்கனவே இருக்கிற மருத்துவனை இந்த இலட்சணத்தில் இருக்கும் போது புது மருத்துவ மனை எதற்கு?
நவீன வசதிகளோடு புதிதாக திறக்கப்பட்ட அண்ணா நூலகத்தை சிறுவர்களுக்கான நவீன மருத்துவமனையாக மாற்றுவேன் என்று சிறு பிள்ளைத் தனமாக அடம் பிடிக்கிறார், ஜெயலலிதா.
புரட்சித் தலைவிக்கு அப்படி என்ன வியாதியோ?
தமிழ்க்கிறுக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
No comments:
Post a Comment