தமிழ்க் கிறுக்கன்...!
Saturday, January 28, 2012
Wednesday, January 18, 2012
"சிற்பியே உன்னை...!"
ஆனால் நாட்குறிப்பேடு எழுதா பழக்கமுடையோர் தங்கள் மனக் குப்பைகளை தனக்குள்ளே புதைத்துக் கொள்வதால், கவலை தின்ற பிணங்களாக நடமாடுவார்களாம்.
இதை ஓர் ஆய்வில் நிரூபித்திருக்கிறார்கள்.
இன்னொரு நன்மையும் இருக்கிறது.
எழுத...
எழுத...
உங்களுக்குள் புதைந்து கிடைக்கும் எழுத்தாளன், வெளிவருவான்!
அதற்கு பிறகு உங்களை நீங்களே செதுக்கிக் கொண்டால்,நீங்களும் பிரபலமான எழுத்தாளர் தான்!
_தமிழ்க்கி@க்கன்,சென்னை. www.thamizkkirukkan.blogspot.com
Sunday, January 15, 2012
"பொங்கல் இல்லை, தீபாவளி தான் தேசிய பண்டிகை!"
தமிழ் மொழியை விட
வேறு மொழிகள் எல்லாம் எங்களுக்கு உயர்ந்தவைகள்..!
ஆங்கிலம் என்பது மொழி இல்லை, எங்களுக்கு அது தான் அறிவு.
அந்நியனின் பகலை வெளிச்சமாக்க
இங்கே இரவில் எங்கள் வாழ்க்கையை இருளாக்கிக் கொள்வோம்.
சுதந்திர தினத்தை விட
எங்களுக்கு தீபாவளி தான்
தேசிய பண்டிகை!
வருடம் முழுவதும் வைக்கோலை தின்ற மாட்டுக்கு அன்றைக்கு மட்டுந்தான் பொங்கலை ஊட்டி
அதற்கு பிறகு தான் மனிதனுக்கு பொங்கல் படைப்பான், தமிழன்.
தன்னை தோளில் சுமந்த தன் தோழன் மாட்டுக்கும், இயற்கைக்கும்
நன்றி தெரிவிக்கும், நாள் தான் பொங்கல்!
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும்,விவசாயம் செய்வது முட்டாள்களின் வேலை என்று மாறிப் போய் விட்ட .
தமிழனின் மிச்ச சொச்ச அடையாளமான பொங்கல் தின வாழ்த்துக்கள்!
தமிழ்க்கிக்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
Saturday, January 14, 2012
"முட்டாள் தமிழனே! உன் விலை என்ன?"
தீபாவளி அன்று சேனல் மாற்றிக் கொண்டே வந்த போது, சன் டிவி குழுமத்தை சேர்ந்த தெலுங்கு சேனலில் எந்திரன் படத்தை திரையிட்டு தீபாவளி கொண்டாடிய, அதே சன் டிவி குழுமம் எந்திரன் படத்தை உலக(இந்திய தொலைக்)காட்சியில் முதல் முறையாக இந்த பொங்கலன்று எந்திரன் படத்தை இந்த பொங்கலுக்கு ஒலிபரப்ப போகிறோம் என்று புளுகிக் கொண்டதை பார்த்து எனக்கு அதிர்ச்சியாக இருந்தது!
நம் கையில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருந்தால் எந்த பொய்யையும் விற்று நம் முட்டாள் தமிழனை வசமாக்கி நம் பேச்சை கேட்க வைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போடும் சன் டிவி குழுமம் இன்னும் அடங்க மாட்டேங்குது!
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
"கடவுள் எப்ப செத்தான்?"
கடவுள் கிட்ட
போய்ட்டா...
அப்பா,
கடவுள்
எப்ப செத்தான்?
என்றான், மகன்.
_தமிழ்க்கி@க்கன்,சென்னை.
www.thamizkkirukkan.blogspot.com
Wednesday, January 4, 2012
பெரியார் நகர் பஜனைகோவில்!
சென்னை, மடிப்பாக்கம் போயிருந்தேன்.
பெரியார்நகரில் அம்பேத்கார் சாலை இருந்தது.
வேறு எங்கும் இப்படி ஒற்றுமையான தெரு, பொருத்தமான ஊர் எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
பெரியார் நகரை தாண்டியவுடன் பஜனைகோவில் தெரு ஆரம்பித்தது...!
_தமிழ்க்கிறுக்கன்,சென்னை.