தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, March 17, 2012

சாராய நாடு!

"சாராய நாடு!"

சென்னையில் நடு இரவுக்கு மேல்...

அவசரத்துக்கு மருந்து மாத்திரை,குடிக்க தண்ணீர் வாங்கலாம் என்று கடைகளை தேடினால்...

கிடைப்பது சிரமம்.

சாராயக் கடைக்கு போய் சரக்கடிக்கலாம் என்று கிளம்பி போனால்...?

நிச்சயம் வெற்றி போதையோடு திரும்பி வருவீர்கள்.

பகலில் திடீர் கடை திறக்கும் ட்ராபிக் போலீஸ் அந்த பக்கம் போகிற வருகிற இருசக்கர வாகனங்களை நிறுத்தி, வாயை ஊதச் சொல்லி சாராய வாசனை வந்தால் ஒரு வித சந்தோஷ போதையோடு வசூல் வேட்டையாடி மகிழ்வர்.

பகலில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் சரக்கு,இரவில் 100 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படும்.

அந்த கூடுதல் விலையில் தான் போலீசுக்கு மாமூல் கொடுக்கப்படுகிறதாம்.

இரவு பதினொரு மணிக்கு மேல் ஹோட்டல்,டீக்கடைகள் திறந்து கிடந்தால் ...

அந்த கடைக்காரர், அந்த பகுதி காவல்துறைக்கு மாமூல் வெட்ட வேண்டும்.

அதுவும் டாஸ்மாக் சாராயக்கடை சரக்குகள் அரசாங்க சொத்தாச்சே.

சாராயக்கடைக்கு பாதுகாப்பு தரவேண்டியது,காவல்துறையின் பிறவிக் கடமையாச்சே...!

_தமிழ்க்கி@க்கன்.

www.thamizkkirukkan.blogspot.com

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...