இப்ப வெல்லாம் சென்னையில் பகலில் வெயில் காய்ச்சி எடுக்கிறது.இரவில் பனி சொட்டுகிறது.
தேங்காய் வாங்கினால் விலை ரூ 12
தாகமாயிருக்கிறதே என்று விலை கேட்காமல் இளநீர் வாங்கி குடித்து தொலைத்து விட்டேன்.
விலை கேட்டேன். ரூபாய் 25 தாம்!
தலை சுற்றியது!
இதுக்கு தற்கொலை முயற்சியாக பூச்சிக் கொல்லி பானம் (கோக்க கோலா) ஒன்னா வாங்கி குடிக்கலாம்.
விலை வெறும் 10 ரூ தான் என்பதால், அதையே வாங்கியிருக்கலாம் என்ற துணிச்சல் பிறந்தது.
தேங்காயை விட இளநீர் விலை அதிகமானதுக்கு காரணம், கேடு கெட்ட வியாபார மூளை தானே!
பூமி 72 விழுக்காடு தண்ணீரால் ஆனது என்கிறது, அறிவியல். ஆனால் அதற்கும் விலை வைக்கிறது. மனித மூளை.
_தமிழ்க்கிறு@கன்
www.thamizkkirukkan.blogspot.com
No comments:
Post a Comment