கருணாநிதி வேதனை..!
தமிழர்களே! தமிழர்களே!!
வெங்காயம் ரூபாய் நூறுக்கு விற்ற போதும் கூட, வெறும் பத்து பைசா ஏன் 5 பைசாவுக்கும் கூட ,ஒரு நிமிட அழைப்பு என்று அழைப்புக் கட்டணத்தை குறைத்தவன் இல்லையா, ஆகாயம் தொட்ட ஊழல் புரட்சியாளன் தம்பி ராசா.
இந்த தேச தியாகிக்கு தெருவாக ஒவ்வொரு மொபைல் டவருக்கும் கீழே சிலை வைத்தல்லவா, கோவில் கட்டி கொண்டாடி இருக்க வேண்டும்.
அன்று தொடங்கி இன்று வரைக்கும் தியாகிகளுக்கு சிறைச்சாலை தானே ஊட்டியும் கொடைக்கானலுமாக இருந்து வந்திருக்கிறது.
தம்பி ராசா சிறையிலே படுக்க வெறும் ஏழு போர்வைகள் போர்த்தி தூங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருகிறான்.
அவனுக்கு கண்ணகி சிலைக்கு பக்கத்திலேயே என் சொந்த செலவிலாவது ஒரு சிலை வையுங்கள், எனக்கு சிலை வைக்க விட்டாலும் பரவாயில்லை.இப்படியேல்லாம் கேவலமாக ஆனந்த படுவதில் தான் என் அல்ப ஆசை ஊஞ்சலாடுகிறது.
தனியாருக்கு அலைவரிசை உரிமையை மலிவு விலைக்கு விற்று அரசாங்கத்து நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக , கிரிக்கெட் ஆடுகிறதே எதிரிக்கட்சிகள்.
உங்களுக்கு ஒன்று சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன்.
அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு நெலத்தை வளைத்து போட்டு உங்களுக்கு சொந்தமாக்கியிருக்கிறீர்களே?
அப்போதெல்லாம் எங்கே போச்சு, உங்க புத்தி?
இவ்வளவு ஏன் என் கடசிக்காரர்களே கூட எனக்கே தெரியாமல் பொறம்போக்கு நிலத்தை வளைத்து போட்டிருக்கிறார்கள்.
இந்த விஷயம் கூட மக்களுக்கு தெரியும். பேசமால் தானே இருக்கிறார்கள்.அவர்கள் எல்லாம் கேணைகளா?
வாழ்க அண்ணாவுக்கு நாமம்!
வளர்க கழக குடும்பம்.
_தமிழ்க் கிறுக்கன்.
No comments:
Post a Comment