வரும் வழியில் அரசு நடத்தும் மதுபானக்கடையான டாஸ்மாக் வாசலில்...
பெருங்கூட்டம்!
ஆமா, டாஸ்மாக் என்ற டமில் சொல்லுக்கு இன்னா அர்த்தம்ன்னு சொல்லுங்க முத்தமிழ் தலீவரே.
வழக்கம் போல யாராவது வேட்டியை தாவணி போல தோளில் தொங்க...
கை,கால்கள் தொங்கியபடி கலைஞரின் புகழை சப்தமில்லாமல் மவுன பாடி சாக்கடையோரம் கவுந்து கெடப்பார்கள், இவர்களின் இந்த இழிசெயல் கண்டு தெரு நாயும் வெக்கப்பட்டு கொஞ்சம் தள்ளிப் போய் படுக்கும்...
கூட்டம் விலக்கி பார்த்தபோது, அதிகமாக குடித்து விட்டு, ஒரு குடிமகன் செத்தே போயிருந்தார். கூட்டத்தை கலைத்த படி காவல் துறையும் வந்து சேர்ந்தது.
டாஸ்மாக் சரக்குகள் எல்லாம் போலித் தயாரிப்பு கரும்புக் கழிவிலிருந்து போலி மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறன. மதுபானம் தயாரிக்க தேவையான சரியான பொருட்களை கொண்டு தயாரிப்பதில்லை என்கிறது ஒரு பத்திரிக்கை செய்தி!
அதாவது சுருக்கமாக சொன்னால்...
தரமான சரக்கின் விலையில் போலிச் சரக்குகள் விற்கப்படுகின்றன.
அரசே போலிச்சரக்குகளை விற்கிறது. இந்த சாதனையை பற்றி யாராவது கின்னஸூக்கு அனுப்பலாம்.
அதே டாஸ்மாக்கில் நான் பார்த்த ரெண்டாவது பிணம், இது!
108 எண்ணில் கூப்பிட்டால் வரும் இலவச ஆம்புலன்ஸ் வண்டிகளால் பல இலட்சம் உயிர்களை காப்பாற்றியதாக, அரசு தொலைக்காட்சிக்கு கூட தராமல் தன்னுடைய குடும்ப தொலைக்காட்சிகளில் வெளியிட்டு துட்டு சம்பாதித்துக் கொண்டது, கழக குடும்பம்.
ஆனால் விளம்பரமே செய்யாத செய்தி ஒன்று உண்டு . அது என்னவென்றால் ஆம்புலன்ஸில் ஏற்றி காப்பாற்றப் பட்டவர்களை விட டாஸ்மாக் சரக்கால் கொல்லப்பட்ட குடிமகன்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.
பிணங்கள் ஆட்சி நடத்துகிற
நாடு?...
சுடுகாடு!
வாழ்க குடி கொடுத்த கருணாநிதி!
வளர்க குடி கெடுத்த கருணாநிதியின் குடும்பம் !!
_தமிழ்க்கிறுக்கன்
No comments:
Post a Comment