தமிழ்க் கிறுக்கன்...!

தமிழ்க் கிறுக்கன்...!
வேடிக்கையாகவே கேலிகள் பேசி, கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்.....!

Saturday, February 26, 2011

ராஜபக்சே விருது!

உங்களின் அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டுமா?

மக்களின் மனசாட்சி என்ற நிகழ்ச்சியில் சென்னை (கலைஞரின் கட்சியை சேர்ந்த) மேயருடன் நேரடியாக பேசுங்கள் என்று தொலைபேசி எண்களோடு விளம்பர வாசகம் ஓடியது.

அந்த தொலைக்காட்சியின் பெயர்

"z(ee) தமிழ்"

என்னே, ஒரு அழகான தமிழ்ப் பெயர்?

கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று.

மக்களுக்காக, (கலைஞரின்) மக்களே நடத்தும், மக்கள் பணத்தை கொள்ளையடித்து வளர்ந்த கலைஞரின் குடும்பத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலில் எதிலும் இந்த மாதிரி உருப்படியான நிகழ்ச்சி எதையும் ஒலிபரப்புவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஊழல் ராசா கைதான போது கலைஞர் தொலைக்காட்சியும் சோதனைக்குள்ளாக்கப்பட்ட போது ஓர் உண்மை வெளியானது.

கலைஞர் தொலைக்காட்சியை நடத்துவது , கலைஞர் குடும்பத்து சன் டிவி நிறுவனம் இல்லை, சாதிக் காட்சி ஒன்றின் தலைவரான நடிகர் சரத்குமார் தான் என்பது தான் அது.

தான் கதை வஜனத்தில் எழுதிய ஒரு சரித்திர கால நாடகத்தை ஒளிபரப்ப சன் டிவி நிறுவன தயாநிதிமாறனிடம் வேண்டுகோள் விடுத்தாராம்.

உங்கள் நாடகம் ஒளிபரப்பானால் சன் டிவின் ரேட்டிங் குறைந்து விடும் "போய்யா, ஒன் வேலய பாத்துக்கிட்டு..." என்ற ரீதியில் சொன்னாராம்.

அண்ணா இருந்த போது திமுக என்ற கட்சி அலுவலகமாக இருந்த அண்ணா அறிவாலயம் இன்று கலைஞரின் சொத்துக்களில் ஒன்றாக மாறியது, தனிச் சதிக் கதை.

இப்படித்தான் கலைஞரின் கோபத்தால், சன் டிவி நிறுவனம் காலி செய்யப்பட்டது.

அந்த கோபத்தின் நெருப்பில் உதயமானது தான் கொ(க)லைஞர் டீவி.

ஆளுக்கொரு குடும்ப தொலைக்காட்சி இருந்தாலும், ஈழத்தில் ஒரு இலட்சம் பேரின் படுகொலையை வெளியே தெரியாமல் மூடி மறைத்தது...

ராஜபக்சேவின் படுகொலையை விடக் கொடுமையானது!

இந்த தொலைக்காட்சிகளுக்கு சிங்கள அரசே ராஜபக்சே விருது கொடுக்கலாம்.

_தமிழ்க்கிறுக்கன்


"வேடிக்கையாகவே கேலிகள் பேசி கேள்வியும் ஞானமும் உண்டாக செய்வோம்!"

No comments:

Post a Comment

என்னைப் பற்றி ...